Park & Ride நகர பேருந்து சேவைக்கு Wi-Fi இணைப்புத் தீர்வுகளை வழங்கும் SLT-MOBITEL

இலங்கையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘Park and Ride’ நகர பேருந்து சேவைக்கு Wi-Fi இணைப்புத் தீர்வுகளையும் வர்த்தக நாமத் தீர்வுகளையும் வழங்க இலங்கை போக்குவரத்து சபையுடன் SLT-MOBITEL கைகோர்த்துள்ளதாக அறிவித்துள்ளது. 2021 ஜனவரி 15ஆம் திகதி இடம்பெற்ற சொகுசு பேருந்து சேவை அறிமுக நிகழ்வில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம SLTB தவிசாளர் கிங்ஸ்லி ரணவக ஸ்ரீலங்கா ரெலிகொம் குழும தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ ஆகியோர் மற்றும் SLT-MOBITEL உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அண்மையில் SLT – MOBITEL வர்த்தக நாம ஒன்றிணைப்பினூடாக, ஒன்றிணைக்கப்பட்ட தொலைத்தொடர்பாடல் சேவைகளை வழங்குவதில் தேசிய தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குநரின் அர்ப்பணிப்பு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நகர பேருந்து சேவை பங்காண்மையுடன், SLT – MOBITEL இனால் அடுத்த தலைமுறை இணைப்புத் தீர்வுகளை தேசம் முழுவதிலும் வழங்க முன்வந்துள்ளது.

Park and Ride பேருந்து சேவையுடனான கைகோர்ப்பு தொடர்பில் ஸ்ரீ லங்கா ரெலிகொம் குழும தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், ‘SLT-MOBITEL ஐப் பொறுத்தமட்டில் இன்று மற்றுமொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக அமைந்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபையுடன் கைகோர்த்து, நாட்டில் ஒப்பற்ற இணைப்புத் தீர்வுகளை வழங்க முன்வந்துள்ளோம். வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் வழங்கும் வர்த்தகம் எனும் வகையில், அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எப்போதும் புத்தாக்கமான வழிமுறைகளை நாம் தேடிய வண்ணமுள்ளோம். Park and Ride நகர பேருந்து சேவையினூடாக, இலங்கையர்களுக்கு SLT-MOBITEL இன் உலகத் தரம் வாய்ந்த Wi-Fi இணைப்பு சேவைகளை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும். இலங்கையின் தகவல் நிறைந்த மற்றும் அறிவுபூர்வமாக சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தேசிய தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குநர் எனும் வகையில் எமது அர்ப்பணிப்பை உறுதி செய்துள்ளோம்.´ என்றார்.

கொழும்பு நகரில் வாகன நெரிசலை குறைக்கும் நோக்குடன் நகர பேருந்து சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பான மற்றும் சௌகரியமான போக்குவரத்து வசதிகளை கொழும்பில் ஏற்படுத்திக் கொடுப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. முதற்கட்ட சேவைகள் மாக்கும்புர போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து 25 பேருந்துகளுடன் இயங்குகின்றது. நாடு முழுவதிலும் இந்தச் சேவை விரைவில் விரிவுபடுத்தப்படும். மு.ப. 6.00 மணி முதல் 9.00 மணி வரை தினசரி இந்த பேருந்து சேவை இடம்பெறும். மு.ப. 9.00 மணியின் பின்னர், ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் பி.ப. 8.00 மணி வரை இடம்பெறும். வாகனத் தரிப்பிடத்துக்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தமது சிறிய ரக வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை தரித்து நிறுத்திவிட்டு, ‘Park & Ride’ நகர பேருந்து சேவையைப் பயன்படுத்தி கொழும்புக்கு வருகை தர முடியும்.

SLT பற்றி:

தேசிய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநராக ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சி திகழ்கின்றது. 163 வருடங்களுக்கு மேலாக இலங்கையின் முன்னணி புரோட்பான்ட் மற்றும் தொடர்பாடல் உட்கட்டமைப்பு சேவைகள் வழங்குநராகவும் அமைந்துள்ளது. இலங்கையர்களுக்கு வலுவூட்டும் வாய்ப்புகளை SLT ஏற்படுத்துவதுடன், சர்வதேச ரீதியில் நாட்டின் நிலையை உயர்த்தும் வகையிலும் பங்களிப்பு வழங்குகின்றது. டிஜிட்டல் வாழ்க்கை முறைக்கு பொருத்தமான சேவைகள் மற்றும் தீர்வுகளை வழங்கும் நிறுவனமாகவும் SLT தன்னை நிலைமாற்றியுள்ளது. SLT இன் மொபைல் பிரிவான மொபிடெல், தெற்காசிய பிராந்தியத்தின் முதல் 4.5G/4G+ மொபைல் வலையமைப்பு சேவையை 2018 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்திருந்தது. மொபைல் வலையமைப்பினூடாக 5G ஐ வெற்றிகரமாக பரிசோதித்த முதலாவது தெற்காசிய நிறுவனமாகவும் இது அமைந்துள்ளது. NB-IoT, Automation, Artificial Intelligence and Critical Communication technologies and solutions போன்றவற்றில் தனது ஆதிக்கத்தை மொபிடெல் அண்மைக் காலத்தில் விரிவாக்கியுள்ளதுடன், தொடர்ச்சியான இரண்டு வருடங்களாக இலங்கையில் காணப்படும் வேகமான 4G-LTE வலையமைப்பாக சர்வதேச ரீதியில் இணைய வேகத்தை பரிசோதித்து சான்றளிக்கும் Ookla அமைப்பினால் தரப்படுத்தப்பட்டிருந்தது.

x