கொமர்ஷல் வங்கியின் IPG சேவைகள் சேவைகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளன.

இலங்கையில் e-வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சியைக் கண்டு வரும் நிலையில் கொமர்ஷல் வங்கியும் இந்தப் பிரிவில் தனது ஏற்றத்தை தொடர்ந்து தக்க வைத்துள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்படும் கொடுப்பனவு செயற்பாடுகளில் வங்கியால் முன்வைக்கப்பட்டுள்ள கொடுக்கல் வாங்கல் முறை ஐந்துக்கு இரண்டு என்ற வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது.

கொமர்ஷல் வங்கி இந்த நாட்டில் சில்லறை கைத்தொழில்துறைக்கு வழங்கி வரும் ஆதரவு மற்றும் வாடிக்கையாளருக்கான இணைய வழி விற்பனை ஊக்குவிப்பு என்பனவற்றின் அடிப்படையில் இந்த சந்தைப் பெறுமானம் 40 வீதமாக உள்ளது என்று வங்கி தெரிவித்துள்ளது. வங்கி தற்போது மாஸ்டர் கார்ட் பேமென்ட் கேட்வே சேர்விஸஸ் (MPGS) மற்றும் விஸா சைபர் கோர்ஸ் என்பன மூலம் 500 வர்த்தக நிலையங்களுக்கான இணையவழி கொடுப்பனவு சேவைக்கு அதரவு அளித்து வருகின்றது. இவை இரண்டுமே உலகின் முன்னணி கொடுப்பனவு நுழைவாயில் மேடைகளாகும். இவை இரண்டுமே முழு அளவிலான பேமென்ட் கார்ட் இன்டஸ்ட்ரி டேடா செக்யூரிட்டி ஸ்டேன்டர்ட் முறை (PCI-DSS) நிபந்தனைகளை உள்ளடக்கியதாகும்.

வங்கியின் மூன்றாவது IPG தீர்வானது ´கொம்பேங்க் சிம்பிள்பே´ முறையாகும். இது மாஸ்டர் கார்ட் உற்பத்தியான ´சிம்ப்ளிபைட் கொமர்ஸ்´ முறையை ஒத்த இலங்கைக்கான வடிவமாகும். பூகோள மட்டத்திலான துரித உணவு கம்பனிகள்ரூபவ் சகலவிதமான ந-வர்த்தக நிலையங்கள்ரூபவ் முன்னணி சுப்பர் மார்க்கெட்டுகள் ஆடை விற்பனை நிலையங்கள்ரூபவ் கல்விக் கூடங்கள் விமான சேவை நிறுவனங்கள் முன்னணி பிரயாண முகவர் நிலையங்கள் என இலங்கையில் பல்வேறு விதமான வர்த்தகங்களின் முன்னணித் தெரிவாக கொமர்ஷல் வங்கியின் IPG சேவைகள் அமைந்துள்ளன.

MPGS மற்றும் விஸா சைபர்கோர்ஸ் மேடைகள் என இரண்டுமே டோக்கனைஷேசன் ஆதரவு கொண்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு நிலையத்தோடு கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளும் ஒவ்வொரு தடவையும் வாடிக்கையாளர்கள் தமது கார்ட் விவரங்களைப் பதிய வேண்டும் என்ற தேவை இல்லை. அதற்கேற்ற வகையில் கார்ட் விவரங்களை வங்கி மிகவும் பத்திரமாக சேமித்து வைத்துக் கொள்கின்றது. வர்த்தகரின் முறைமையில் இருந்து கார்ட் விவரங்களை நீக்கி வங்கி தனது பொறுப்பில் அவற்றை பத்திரமாக சேமித்துக் கொள்வதால் வாடிக்கையாளருக்கு அது மிகவும் பாதுகாப்பானதாகவும் வசதியாகவும் அமைகின்றது. மேலும் இந்த முறையானது விரிவான பல மோசடி எதிர்ப்பு முறைகளையும் உள்ளடக்கியது. மாஸ்டர்கார்ட் பாதுகாப்பு குறியீட்டு முறைக்கு ஆதரவளித்துரூபவ் விஸா முறையால் சான்று படுத்தப்பட்டு 3D பாதுகாப்பு அங்கீகாரத்தை அது வழங்குகின்றது. அத்தோடு முழுமையான கொமர்ஷல் வங்கி ரூடவ்ஸி பேமென்ட் பிளேன்ஸ் (EPP) முறையையும் அது தன்னகத்தே கொண்டுள்ளது.

உலகின் ஆயிரம் தலைசிறந்த வங்கிகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையின் ஒரே வங்கியான கொமர்ஷல் வங்கி தொடர்ந்து பத்து வருடங்களாக அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இவ்வாண்டு வங்கி அதன் 100 வது அண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. 2019 ல் 50 க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளுர் விருதுகளை வென்றுள்ள கொமர்ஷல் வங்கி இலங்கையில் 268 கிளைகளுடனும் 875 ATM வலையமைப்புடனும் செயற்படுகின்றது.

கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பங்களாதேஷில் 19 கிளைகளைக் கொண்டதாகவும் மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும் நேய்பியுடோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது.