SOLO App உடன் SOS சிறுவர் கிராமங்களுக்கு நிதி திறட்டுவதற்காக ‘Season of Giving’ நிகழ்வை நடைமுறைப்படுத்தும் HNB

இலங்கையில் பெற்றோரின் பராமரிப்பில்லாத குழந்தைகளின் நலன்புரி நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் நாட்டின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB, SOS சிறுவர் கிராமங்களுக்கு உதவி வழங்குவதற்காக தமது பிரபல டிஜிட்டல் கட்டணம் செலுதத்தும் செயலியான App SOLO ஊடாக நிதி திறட்டுவதற்கு ‘Season of Giving’ எனும் தொனிப் பொருளில் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக SOS சிறுவர் கிரமங்களினால் தமது செயற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்கையில் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு பிரதிபலிக்கும் வகையில் வங்கி தமது அமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் ஒன்று திறட்டுவதற்கு முன்வந்துள்ளது. HNBஇனால் டிஜிட்டல் வங்கித் தீர்வுகள் குறித்து தமது நிபுணத்துவத்தை பயன்படுத்தி SOLO செயலியின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளின் கீழ் பாவனையாளர்களுக்கு இவ்வாறான உன்னத வேலைத் திட்டத்தின் ஒத்துழைப்பு வழங்க மதிப்பு மிக்க சந்தர்ப்பம் ஒன்று ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

SOS சிறுவர் கிராமங்களுக்கு இலங்கை உள்ளிட்ட 136 நாடுகளில் பெற்றோரின் ஆதரவில்லாத சிறுவர் சிறுமியர்களுக்கு ஆதரவு வழங்குவது மட்டுமன்றி குடும்ப சூழலையும் பெற்றுக் கொடுக்கின்றது. தற்போது இந்த அமைப்பு பிலியந்தலை, அநுராதபுரம், யாழ்ப்பாணம், நுவரெலியா, காலி மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளிலுள்ள 860 சிறுவர் சிறுமியர்களுக்கு நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் குறைந்த வருமானம் பெறும் 3200 குடும்பங்களுக்கும் பல்வேறு பயன்களையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக அனைத்து HNB SOLO பாவனையாளர்களினால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு 250 ரூபா கொடுக்கல் வாங்கலுக்கும் 10 ரூபாவால் HNB இந்த நிதியத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும். மேலும் SOLO பாவனையாளர்களுக்கு Direct Pay விதிமுறையூடாக SOS சிறுவர் கிராமத்திற்கு நேரடியாக வேண்டிய தொகையை வழங்குவதற்கும் வங்கி இந்த செயலியின் மூலம் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

‘Season of Giving’ வேலைத்திட்டம் குறித்து கருத்து தெரிவித்த HNBஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனதன் அலஸ், “எமது ‘Season of Giving’ வேலைத்திட்டத்தில் SOS சிறுவர் கிராமங்களுக்கு உதவி வழங்குவது தொடர்பில் வங்கி பங்குதாரராக, இலங்கையிலுள்ள பெற்றோர் ஆதரவில்லாத உதவியற்ற சிறுவர் சிறுமியர்கள் மற்றும் வறிய குடும்பங்களை கட்டியெழுப்புவதற்காக அவர்கள் மேற்கொள்ளும் சிறந்த செயற்பாடுகள் குறித்தும் நாம் மிகவும் பெறுமையடைகிறோம். 40 வருடங்களுக்கும் மேலாக SOS சிறுவர் கிராமங்களுக்காக வங்கி பங்குதாரர் என்ற வகையில் சேவை செய்துள்ள நாம் அவர்களின் பாதுகாப்பின் கீழுள்ள பெரும்பாலான குழந்தைகள் இந்த ஆதரவின் மூலம் அனுபவித்த அனுகூலங்களை நாம் நேரடியாக கண்டுள்ளோம். அதனால் இவ்வாறான சிறந்த சமூகப் பணிக்கு எமது வாடிக்கையாளர் பெருமக்களும் ஒத்துழைப்பு வழங்கி எமது பிரபலமான e-wallet தளமான SOLO App ஊடாக இந்த நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதை இட்டு நாம் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.” என தெரிவித்தார்.

SOS சிறுவர் கிராமங்கள் குறித்து Brand தூதுவரான முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும் மற்றும் முன்னாள் ICC போட்டி நடுவருமான ரொஷான் மஹாநாமவின் தலைமையின் கீழ் HNB முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனதன் அலஸ், HNBஇன் வாடிக்கையாளர் மற்றும் SME வங்கி நடவடிக்கைகள் குறித்த பிரதி பொதுமுகாமையாளர், சஞ்ஜேய் விஜேமான்ன மற்றும் இலங்கை SOS சிறுவர் கிராமம் தொடர்பில் தேசிய தலைவர் திவாகர் ரத்னதுரை போன்றோரின் ஒத்துழைப்புடன் HNBஇன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது இந்த இந்த நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த இலங்கையின் SOS சிறுவர் கிராமங்கள் தொடர்பிலான Brand தூதுவர் ரொஷான் மஹாநாம, “உலகில் சிறந்த உதவிக்கரம் நீட்டும் 10 நாடுகளுக்குள் இலங்கையும் அடங்குகின்றது. இவ்வாறான முன்முயற்சிகளுக்கு பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் தாராள நன்கொடைகளுடன் பெற்றோரின் ஆதரவற்ற பிள்ளைகளுக்கு நாம் எப்பொழுதும் உதவிகளை மேற்கொண்டுள்ளோம். SOS சிறுவர் கிராமங்களிலுள்ள பிள்ளைகள் மற்றும் வறுமையான குடும்பங்களுக்கு உதவியளிப்பதற்கு இந்த நத்தார் காலத்தில் பெரும்பாலானோர் முன்வருவார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம்.” என தெரிவித்தார்.

“கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக தேசிய ரீதியில் நாம் எதிர்நோக்கியுள்ள முன்னெப்போதும் இல்லாத வகையிலான சவால்களுக்கு மத்தியில் SOS சிறுவர் கிராமங்கள் போன்ற அமைப்புக்கள் அவர்களது நிர்வகிப்பின் கீழுள்ள சிறுவர்கள் மற்றும் குடும்பங்களுக்காக மேற்கொள்ளப்படும் சிறந்த செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு மேலதிக பலத்தை வழங்க எமக்கு தேவைப்பட்டது. இந்த நாட்டிலுள்ள மக்கள் மத்தியிலுள்ள வறுமையிலுள்ள மக்களுக்கு உதவியளிக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பித்தமை குறித்து நாம் தாழ்மையாக பெறுமை அடைகிறோம். இந்த உன்னதமான செயற்பாட்டிற்கு நாமும் கைகோர்க்குமாறு எமது அனைத்து SOLO பாவனையாளர்களுக்கும் நாம் வேண்டுகோள் விடுகின்றோம்.”

இவ்வாறான அசௌகரியமிக்க காலகட்டத்தில் இவ்வாறு சிறந்த முயற்சியின் மூலம் எமது அமைப்பிற்கு நன்கொடை வழங்குவதற்கு முன்வந்தமை குறித்து HNBக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். பல வருடங்களாக HNB எமது அமைப்பிற்கு உதவிகளை மேற்கொண்டுள்ளதுடன் இந்த புதிய முயற்சியின் மூலம் அந்த ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது என நாம் நம்புகின்றோம்.” என இலங்கை SOS சிறுவர் கிராம் தொடர்பான தேசிய பணிப்பாளர் திவாகர் ரத்னதுரை தெரிவித்துள்ளார்.

HNB SOLO செயலியை பயன்படுத்த பதிவு செய்யவோ, சந்தா கட்டணம் மற்றும் தவணைக் கட்டணம் இல்லாமல் வேண்டிய ஸ்மார்ட் தொலைபேசியை டிஜிட்டல் பணப் பையாக மாற்றிக் கொள்ள முடியும். டிஜிட்டல் கட்டணம் செலுத்தும் தளமாக வாடிக்கையளர்களுக்கு இந்த செயலியின் மூலம் பெரும்பாலான வங்கிக் கணக்கு/கிரடிட் கார்ட்கள் மூலமாக கொடுப்பனவை மேற்கொள்ள முடியும் என்பதால் மிகவும் பிரபலமானதாகும்.

அனைத்து கட்டணம் செலுத்தும் தேவைகளையும் ஒரே செயலியில் மேற்கொள்ளும் நோக்கில் SOLOவினால் பாவனையாளர்களுக்கு பற்றுச் சீட்டுக்களுக்கான கட்டணம் செலுத்துதல் மற்றும் கையடக்க தொலைபேசிகளுக்கு முற்கொடுப்பனவு செய்தல் போன்றே Lanka QR குறியீட்டின் ஊடாக நாட்டிலுள்ள அனைத்து கட்டணம் செலுத்தும் நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்த முடியும். வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பாகவும் துரிதமாகவும் பணமில்லாத டிஜிட்டல் கட்டணம் செலுத்தும் முறையை வழங்குவதற்காக HNB SOLO இலங்கை மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட Lanka QR நிதி முறைகளுக்கு அமைய அண்மையில் இணைந்து கொண்டது. மேலும் வீசா, மாஸ்டர், டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் மட்டுமன்றி JJustPay கட்டணம் செலுத்தும் தீர்வுகளுடன் தொடர்புடைய அனைத்து வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்து கட்டணம் செலுத்தும் முறைகளும் டிஜிட்டலாக நிலைத்து (Store) வைக்கக் கூடிய சந்தர்ப்பத்தையும் SOLO செயலி மூலம் பாவனையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் SOLO செயலி ஊடாக ‘‘கொவிட் பாதுகாப்பு செயலி’ டிஜிட்டல் தீர்வை Stay Safe COVID Tracer QR Code தமது ஒட்டுமொத்த கிளை வலைத்தளத்திற்குள் அண்மையில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது. கொவிட்-19 வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மக்களின் நடமாற்றத்தை நிர்வகிக்கும் நோக்காகக் கொண்டு இலங்கை தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப முகவரினால் ICTA இந்த டிஜிட்டல் தீர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் 252 வாடிக்கையாளர் நிலையங்கைளக் கொண்டுள்ள HNB, டிஜிட்டல் வங்கியியலில் புதிய முன்மாதிரியை முன்னோக்கி நகர்த்தும் நோக்கில் வெளிநாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இலங்கையின் பிரமாண்டமான மற்றும் மிகுந்த தொழில்நுட்ப புத்தாக்கங்களைக் கொண்ட வங்கியாகும். அண்மையில் வங்கி தொடர்ச்சியாக பல விருதுகளை வென்றதுடன் ‘த பேங்கர்’ சஞ்சிகையினால் உலகில் சிறந்த 1000 வங்கிகள் பெயர் பட்டியலில் இடம்பிடித்தமைக்கு மேலதிகமாக 2020ஆம் ஆண்டில் இலங்கையின் விசேட வாடிக்கையாளர் வங்கியென்ற விருதினை 11வது தடவையாகவும் வென்றது. உள்ளுரில் பிஸ்னஸ் டுடே Top 30 தரப்படுத்தலில் முன்னிலையிலுள்ள HNB 2019ஆம் ஆண்டுக்கான Best Corporate Citizen Sustainability என்ற விசேட விருது வழங்கும் நிகழ்வில் ஏழு விருதுகளை வென்றெடுத்தது. சர்வதேச கடன் தரப்படுத்தலைப் பெற்றுக் கொண்ட இலங்கையின் முதலாவது வங்கியான HNBக்கு Moody’s Investors Serviceஇனால் தரப்படுத்தலும் வழங்கப்பட்டது. அண்மையில் Fitch ratings மூலம் HNBஇன் தேசிய நீண்டகால வகைப்படுத்தல் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு அங்கு Fitch ratings இன் இரண்டு இடங்களைக் கடந்து மேலே சென்று ‘AA+(lka)’ கடன் தரப்படுத்தலைப் பெற்றுக் கொள்ள HNBக்கு முடிந்தமை விசேட அம்சமாகும்.

x