கொமர்ஷல் வங்கியால் 2014 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட நிறுவனத்தின் உத்தியோகபூர்வமான பெயர்மாற்றலானது அந்நிறுவனத்தை கொமர்ஷல் வங்கிக் குழுமத்துக்குள் உள்வாங்கும் நிலைமாற்றத்தைப் பூர்த்திசெய்கிறது. மீள்கட்டமைக்கப்பட்ட இந்நிறுவனம் இப்புதிய பெயருடனும் புதிய கூட்டாண்மை இலட்சினையுடனும் டிசெம்பர் 30, 2020 முதல் செயற்படுமென வங்கி தெரிவித்தது.
இந்த மீள் அறிமுகத்துடன் இந்த நிதி நிறுவனமானது அதன் தாய் நிறுவனமான இலங்கையின் முதல்நிலை தனியார் வங்கியும் அதிக விருதுகளை வென்ற வங்கியுமான கொமர்ஷல் வங்கியுடன் சேர்த்து அடையாளப்படுத்தப்படும்.
இந்ரா ஃபினான்ஸ் நிறுவனத்தைக் கொள்வனவு செய்த கொமர்ஷல் வங்கி செரண்டிப் ஃபினான்ஸ் என அதைப் பெயர் மாற்றம் செய்தது. 2014ஆம் ஆண்டில் அந்நிறுவனத்தின் மொத்தச் சொத்துகள் 1.95 பில்லியன் ரூபாயாகக் காணப்பட்டதிலிருந்து 2020ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் 8 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளன. நாடு முழுவதும் 10 கிளைகளை CBC ஃபினான்ஸ் நிறுவனம் கொண்டு செயற்பட்டு வாகன லீசிங் அடைமானம் வணிகக் கடன்கள் நிரந்தர வைப்புக்கள் உள்ளிட்ட பல்வகையான நிதியியல் சேவைகளை வழங்கி வருகிறது.
தனிப்பட்ட வர்த்தக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கும் சாதனங்களுக்குமான பல்வகையான லீசிங் தீர்வுகள் விசேட தேவைக்கான வாகனங்களுக்கும் விவசாய உபகரணங்களுக்குமான லீசிங் தீர்வுகள் கவர்ச்சிகரமான வட்டி வீதங்களுடன்கூடிய நிரந்தர வைப்பு வசதிகள் அடைமானக் கடன்கள் அடகு ஈட்டுக் கடன்கள் போன்றன CBC ஃபினான்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும் சேவைகளுள் உள்ளடங்குகின்றன.
அதன் கிளைகள் கண்டி, கொழும்பு, அநுராதபுர, கதுருவெல, தம்புள்ளை, எம்பிலிப்பிட்டிய, மாத்தறை, கிரிபத்கொட, குருநாகல், நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன. லீசிங் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த லீசிங் கட்டணங்கள்ரூபவ் நெகிழ்வான கொடுப்பனவு வாய்ப்புகள் குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கென வடிவமைக்கப்பட்ட லீசிங் பொதிகள் சிக்கல்களற்ற ஆவணப்படுத்தல் விரைவான அனுமதி விசேட காப்புறுதிப் பொதிகள் ஆகியவற்றை வழங்குவதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது.
உலகின் ஆயிரம் தலைசிறந்த வங்கிகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையின் ஒரே வங்கியான கொமர்ஷல் வங்கி தொடர்ந்து பத்து வருடங்களாக அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இவ்வாண்டு வங்கி அதன் 100 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. 2019ல் 50க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளுர் விருதுகளை வென்றுள்ள கொமர்ஷல் வங்கி இலங்கையில் 268 கிளைகளுடனும் 880 ATM வலையமைப்புடனும் செயற்படுகின்றது.
பங்களாதேஷ் செயற்பாடுகளுக்கு அப்பால் கொமர்ஷல் வங்கியின் கடல் கடந்த செயற்பாடுகள் மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும் நேய்பியுடோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது.