SLASSCOM இடமிருந்து தன்னியக்க றோபோட்டிக் செயற்பாட்டு (RPA) விருதை வென்றுள்ள கொமர்ஷல் வங்கி

இலங்கையில் தொழில்நுட்ப புத்தாக்க கண்டுபிடிப்புக்களின் முன்னணி வங்கியான கொமர்ஷல் வங்கி இலங்கை மென்பொருள் கம்பனி சேவைகள் அமைப்பினால் வழங்கப்பட்ட (SLASSCOM) வங்கி மற்றும் நிதிச் சேவைகள் பிரிவுக்கான விருதை வென்றுள்ளது. அந்த நிறுவனத்தின் றோபோ தன்னியக்க செயற்பாடு (RPA) – Robotic Process Automation விருது வழங்கல் மாநாடு 2020 இலேயே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த RPA விருது வங்கியின் இறுதிக்கட்ட பாவனையாளர் அடையாள (User ID) முகாமைத்துவ பொறிமுறைக்காக வழங்கப்பட்டுள்ளது. இது பிரதான மனிதவள முகாமைத்துவ தேவை செயற்பாட்டை தன்னியக்கமாக்குகின்றது. விஷேட றோபோ தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி hyper automation அனுகுமுறையின் கீழ் இதனை செயற்படுத்துவதற்கான விஷேட அலகு ஒன்றை வங்கி நிறுவி உள்ளது.

SLASSCOM RPA விருதுக்காக முன்வைக்கப்பட்ட முன் மொழிவுகளில் பிரதான செயற்பாடாக றோபோ செயற்பாட்டு முறைகளைக் கொண்ட செயற்திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. செயற்பாட்டு ஆற்றல், வாடிக்கையாளருக்கான விநியோகம், அதிகரித்த தரம், செலவுக் கட்டப்பாடு என்பன இங்கே முக்கிய அம்சங்களாக நோக்கப்பட்டன.

பயனர் அடையாள (User ID) முகாமைத்துவ செயற்பாட்டில் வெற்றியாளராக கொமர்ஷல் வங்கியின் செயற்பாட்டுப் பொறிமுறை தெரிவு செய்யப்பட்டதன் மூலம் 2020 டிசம்பர் SLASSCOM RPA மாநாட்டில் தனது செயற்திட்டம் தொடர்பாக கணினி விளக்கம் ஒன்றை வழங்குமாறும் கொமர்ஷல் வங்கிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

வங்கி இதற்கென பயன்படுத்தும் பயனர் அடையாள (User ID) முகாமைத்துவ பொறிமுறை Application Programming Interface (API) ஆனது வங்கியின் மனிதவள பொறிமுறையோடு ஒருங்கிணைக்கப்பட்டது என இங்கு விளக்கம் அளிக்கப்பட்டது. வங்கியின் நிரந்தர மற்றும் பயிலுனர் ஊழியர்கள் பற்றிய விவரங்களைப் பெறவும் குறிப்பிட்ட திகதிகளில் இடம்பெறும் தொழில்நிலை மாற்றங்கள் பின் திகதி இடப்பட்ட தொழில்நிலை மாற்றங்கள் என்பன பற்றிய விவரங்களைப் பெறவும் இந்த முறைப் பயன்படுத்தப்படுகின்றது.

உலகின் ஆயிரம் தலைசிறந்த வங்கிகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையின் ஒரே வங்கியான கொமர்ஷல் வங்கி தொடர்ந்து பத்து வருடங்களாக அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இவ்வாண்டு வங்கி அதன் 100 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. 2019ல் 50க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளுர் விருதுகளை வென்றுள்ள கொமர்ஷல் வங்கி இலங்கையில் 268 கிளைகளுடனும் 880 ATM வலையமைப்புடனும் செயற்படுகின்றது.

பங்களாதேஷ் செயற்பாடுகளுக்கு அப்பால் கொமர்ஷல் வங்கியின் கடல் கடந்த செயற்பாடுகள் மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும் நேய்பியுடோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது.

x