தேசிய மனநல ஆரோக்கிய நிலையத்துக்கு தொலைத் தொடர்பாடல் தீர்வுகளை வழங்குவதற்காக மொபிடெல் கைகோர்ப்பு

என்றும் உங்களுடன் எனும் தொனிப்பொருளுக்கமைய, இலங்கையின் தேசிய மொபைல் சேவைகள் வழங்குநரான மொபிடெல், தேசிய மனநல ஆரோக்கிய நிலையத்துடன் தொடர்பை ஏற்படுத்தி, அவ்வாளாகத்தில் சிகிச்சைகளைப் பெறும் நோயாளர்களுக்கு இணைப்புத் தீர்வுகளை வழங்க முன்வந்துள்ளது.

கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட மற்றும் சந்தேகத்தின்பேரில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் உளவியல் சார் பிரச்சனைகளைக் கொண்ட நோயாளர்களுக்கு இந்த இணைந்த நடவடிக்கையினூடாக தமது அன்புக்குரியவர்களுடன் உரையாட வசதியை வழங்குவதுடன் அதனூடாக அவர்களின் கோபம் மற்றும் மன உளைச்சலை கட்டுப்படுத்தவும் உதவியாக அமைந்திருக்கும்.

நோயாளர் பராமரிப்பு, திறன் கட்டியெழுப்பல், சட்டம் சார்ந்த நடவடிக்கைகள், சமூக ஈடுபாடு, பல் துறை ஈடுபாடு மற்றும் ஆய்வுகள் போன்றவற்றை சிறந்த பயிற்சிகளைப் பெற்ற பணியாளர்களைக் கொண்டு, நவீன வசதிகளைப் பயன்படுத்தி பரிபூரண மற்றும் ஆதார அடிப்படையிலான மனநல ஆரோக்கிய சேவைகளை வழங்கும் நடவடிக்கைகளை தேசிய மனநல ஆரோக்கிய நிலையம் முன்னெடுக்கின்றது.

x