செலிங்கோ லைஃப் தனது புதிய பசுமைக் கிளையை நெல்லியடியில் திறந்துவைத்துள்ளது

செலிங்கோ லைஃப் தனது புதிய பசுமைக் கிளையை நெல்லியடியில் திறந்துவைத்துள்ளது. பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட ஐந்து மாடிக் கட்டடமாக இது அமைந்துள்ளதோடு யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிறுவனத்தின் காணியில் அமைக்கப்பட்ட மூன்றாவது கட்டடமாகவும் இது அமைந்தது.

சூழலுக்கு நேயமான இக்கட்டடம் இல. 293 பருத்தித்துறை வீதி, நெல்லியடி என்ற முகவரியில் 8,692 சதுர அடி நிலப்பரப்பில் அமைந்துள்ளதோடு நாடு முழுவதிலும் நிறுவனத்தின் காணியில் அமைக்கப்பட்ட செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் 38 ஆவது கிளையாகவும் இது அமைந்துள்ளது. அத்தோடு வடமராட்சிப் பிராந்தியத்தில் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதலாவது கட்டடமாகவும் இது அமைந்துள்ளது. இயற்கை ஒளியை அதிகூடிய அளவில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நெல்லியடிக் கிளை முழுவதுமாக சூரியக் கலத்தால் சக்தியளிக்கப்பட்டுள்ளதோடு தனக்கெனத் தனியான கழிவு மீள்சுழற்சிக் கட்டமைப்பையும் கொண்டுள்ளது. அதேபோன்று நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் மின்விளக்குகள் வளிச் சீராக்கிக் கட்டமைப்புகள் (air conditioning systems) ஆகியவற்றையும் இது கொண்டுள்ளதோடு மழைநீரைச் சேகரிக்கும் வசதியொன்றையும் கொண்டுள்ளது.

ஆயுள் காப்புறுதியின் முன்னணி நிறுவனமான செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் பசுமைக் கட்டடம் என்ற கருதுகோளுக்கு ஏற்ப நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டம் தனக்கெனத் தனியான வாகனத் தரிப்பிடம் ஒரே நேரத்தில் 60 பேர் வரையில் அமரக்கூடிய பல்தேவைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய அறை மின்தூக்கியொன்று ஆகியவற்றையும் கிளையில் பசுமையின் அளவை அதிகரிப்பதற்காக நுண்துளைகளைக் கொண்ட கற்களையும் கொண்டு காணப்படுகிறது என நிறுவனம் தெரிவித்தது. கொவிட்-19 தொற்றுப்பரவல் காலத்தால் ஏற்படுத்தப்பட்ட சவால்களுக்கு மத்தியிலும் இக்கட்டடத்தின் அத்திவாரம் இடப்பட்டு 16 மாதங்களில் இக்கட்டட நிர்மாணம் பூர்த்திசெய்யப்பட்டிருந்தது.

புதிய கட்டடத்தின் சம்பிரதாயபூர்வத் திறப்பு விழா செலிங்கோ வைஃப் நிறுவனத்தின் தலைவர் திரு. ராஜ்குமார் ரெங்கநாதன் தலைமையின் இடம்பெற்றதோடு பணிப்பாளர்களும் சிரேஷ்ட முகாமைத்துவத்தின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.

நகரில் காணப்பட்ட செலிங்கோ லைஃப் பழைய கட்டடத்துக்கு அருகில் ஐந்து மாடிகளைக் கொண்ட North wing க்கான ஐந்து மாடிக் கட்டடமொன்றை கடந்தாண்டு செப்டெம்பர் மாதத்தில் செலிங்கோ லைஃப் திறந்து வைத்திருந்தது. 17,290 சதுர அடியில் விசாலத்தில் அமைக்கப்பட்ட வடக்குப் பிரிவுக் கட்டடம் கொழும்பில் அமைந்துள்ள செலிங்கோ லைஃப் தலைமையலுவலகத்துக்கான கட்டடத்துக்கு அடுத்ததாக அந்நிறுவனத்தால் அதிக முதலீட்டில் அமைக்கப்பட்ட கட்டடமாக அமைந்துள்ளது.

நிறுவனத்தால் உரிமைப்படுத்தப்பட்ட காணியில் அமைக்கப்பட்ட 37 ஆவது கிளையை இவ்வாண்டு ஜனவரியில் மாலபேயில் செலிங்கோ லைஃப் திறந்துவைத்திருந்ததோடு திவுலப்பிட்டிய பிலியந்தல ஆகிய கிளைகளுக்கான பசுமைக் கட்டடங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதோடு நீர்கொழும்புக் கிளையின் இடவசதியை அதிகரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.

செலிங்கோ லைஃப் நிறுவனமானது தனது சொந்தக் கட்டடங்களை அநுராதபுரம் திருகோணமலை யாழ்ப்பாணம் மட்டக்களப்பு கண்டி களுத்துறை குருநாகல் கம்பஹா காலி மாத்தறை திஸ்ஸமஹாராம நீர்கொழும்பு இரத்தினபுரி கொட்டாஞ்சேனை கல்கிஸை வெள்ளவத்தை ஆகிய பகுதிகளில் கொண்டுள்ளதோடு அவற்றில் பல சூரியக்கல மின் சக்திக்கு மாற்றப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் நிலைத்திருக்கக்கூடிய சக்திக் கட்டமைப்பு மாதிரியின் அடிப்படையில் குறித்த நோக்கத்துக்காகவே நிர்மாணிக்கப்பட்ட புதிய கிளைக் கட்டடங்கள் ஹொரண பாணந்துறை வென்னப்புவ பண்டாரவளை சிலாபம் கடவத்த யாழ்ப்பாணம் மாலபே ஆகிய இடங்களிலும் இப்போது யாழ்ப்பாணத்திலும் அமைந்துள்ளதோடு பேண்தகுதி சக்தி முறையின் கீழ் குறித்த நோக்கத்துக்கென வடிவமைக்கப்பட்டவையாக இவை உள்ளன.

250 க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டு இலங்கையின் ஆயுள் காப்புறுதித் தொழிற்றுறையில் மிகப்பெரிய வலையமைப்பாக செலிங்கோ லைஃப் செயற்படுகிறது. நாட்டின் 25 மாவட்டங்களிலும் நகரங்கள் கிராமங்கள் என, 142 பகுதிகளில் அதன் பிரசன்னத்தை செலிங்கோ லைஃப் கொண்டுள்ளது.

செலிங்கோ லைஃப் செயற்பட்டுவரும் தனது 32 ஆண்டுகளில் அதன் இரண்டாவது அரைவாசிக் காலம் முழுதும் நாட்டின் காப்புறுதித் துறையின் சந்தை முன்னோடியாகக் காணப்படுகிறது. Great Place to Work® நிறுவனத்தால் இலங்கையில் பணியாற்றுவதற்குச் சிறந்த இடங்களின் ஒன்றாக ‘Great Workplace’ எனச் சான்றளிக்கப்பட்ட செலிங்கோ லைஃப், இலங்கையின் மிகவும் பெறுமதியான ஆயுள் காப்புறுதி நிறுவனத்துக்கான பிரான்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் விருதை இவ்வாண்டு வென்றதோடு 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற SLIM-Nielsen மக்கள் விருதுகளில் தொடர்ச்சியாக 14 ஆவது ஆண்டாகவும் ஆண்டுக்கான மக்களின் ஆயுள் காப்புறுதிச் சேவை வழங்குநர் விருதையும் வென்றது. இலங்கையின் வர்த்தகத்துக்கான சர்வதேச சம்மேளனமானத்தால் இவ்வாண்டில் அதிகம் வியக்கப்படும் 10 நிறுவனங்களில் ஒன்றாகவும் அந்நிறுவனம் தெரிவானது. அத்தோடு இலங்கையின் மிகச்சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனத்துக்கான வேள்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் விருதை தொடர்ச்சியான 6ஆவது ஆண்டாகவும் 2019ஆம் ஆண்டு செலிங்கோ லைஃப் வென்றதோடு நாட்டின் முதல் 30 நிறுவனங்கள் என்ற பிஸ்னஸ் டுடேயின் தரப்படுத்தலில் ஒட்டுமொத்தத் தரப்படுத்தலில் 6ஆவது இடத்திலும் உள்ளது.

செயற்படுநிலையிலுள்ள காப்புறுதி ஒப்பந்தங்கள் மூலமாக கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வாழ்க்கைகளைக் காப்புறுதி செய்துள்ள நிறுவனம் புத்தாக்கம் உற்பத்தி ஆராய்ச்சியும் அபிவிருத்தியும் வாடிக்கையாளர் சேவை தொழில்வாண்மை அபிவிருத்திரூபவ் கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பு ஆகியவற்றில் உள்நாட்டின் காப்புறுதித் துறையின் உயர்நிலை அளவுகோலாகக் கருதப்படுகிறது.