சேவை செய்ய தயராகவுள்ள தனியார் மருத்துவமனைகள் கடுமையான புதிய சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை பலப்படுத்துகின்றன

1. இலங்கைக்குள் சுகாதார சேவைகளை வழங்கும்போது தனியார் சுகாதார சேவை நிறுவனங்கள் நிறைவேற்றும் பொறுப்புக்கள் என்ன?

1972 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட தனியார் வைத்தியசாலை மற்றும் பாராமரிப்பு நிலைய சங்கம் (APHNH) தனியார் சுகாதார சேவை பிரிவின் சுகாதார தரங்களை மேம்படுத்துவதற்காக முக்கிய பங்காற்றுகின்றன. அத்துடன் அவை கிரமமாக அபிவிருத்தி அடைந்து எதிர்காலத்தில் புதிய மருத்துவ தொழில்நுட்பங்களுக்கான முதலீடுகளை செய்யும்.

எமது நாட்டின் சுகாதார சேவை வழங்கும்போது தனியார் துறை முக்கிய பணியை ஆற்றுவதுடன், நாட்டின் வெளி நோயாளர் சிகிச்சைகளில் 70% வரை தனியார் துறையே செய்கின்றது. இதன்மூலம் மக்கள் சுகாதார சேவைக்கு நிலவும் நெரிசல் குறைக்கப்படுகின்றது.

• இலங்கை சுகாதார சேவை வழங்குவதை எடுத்துப் பார்க்கும்போது, சுகாதார கொள்கை நிறுவனத்தின் (IPH) உத்தியோகபூர்வ தரவுகளுக்கமைய, தனியார் சுகாதார சேவை பிரிவில் 193 பில்லியன் ரூபா மருத்துவ உபகரணங்கள் மற்றும் சேவைகளுக்காக செலவு செய்கின்றன. அதனை பார்க்கும்போது நாட்டின் மொத்த சுகாதார செலவீனத்தின் 55% இற்கு அண்மித்த அளவு பங்களிப்பு செய்வது தனியார் துறையாகும்.

• அதுமட்டுமல்ல தனியார் சுகாதார சேவை ஒழுங்குபடுத்தல் சபை (PHSRC) பிரதிநிதித்துவப்படுத்துவதன் ஊடாகவும் நாட்டின் தனியார் சுகாதார சேவை ஒழுங்குபடுத்தல் APHNH முக்கிய பங்காற்றுகின்றது. அத்துடன் தனியார் மருத்துவ நிறுவனம் ஊடாக அனைத்து இலங்கையர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் செயற்திறன் மிக்க சுகாதார சேவை வழங்க சான்றளிக்கும் பொறுப்பும் APHNH சாருகின்றது.

• தாதியர்கள், மருத்துவ உதவியாளர்கள், அவசர மருத்துவ சேவை தொழில்நுட்பவியலாளர்கள், மருத்துவ ஆய்வுக்கூட தொழில் நுட்பவியலாளர்கள், மருந்து வழங்குபவர்கள் போன்ற பல்வேறுபட்ட மருத்துவ சேவைகள் தொடர்பாக உரிய பயிற்சிகளை வழங்குவதை உறுதிப்படுத்துவதற்காக APHNH அர்ப்பணிப்புடன் உள்ளதுடன் அது நாட்டின் சுகாதார ஊழியர்களது திறன்களை அபிவிருத்தி செய்ய பங்களிப்பு செய்யும்.

• இலங்கை சுகாதார சேவையின் குணநலன்களை தொடர்ந்தும் மேம்படுத்துவதற்கான மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பங்களை (MLT) அபிவிருத்தி செய்யும் பணிகளும் APHNH ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2. கொவிட்-19 தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் தனியார் சுகாதார சேவையின் பங்களிப்பு என்ன?

தனியார் வைத்தியசாலைகள் ஊடாக தேர்ந்தெடுக்கப்பட்ட சத்திரசிகிச்சைகள், ஆய்வுக்கூட சேவை மற்றும் 24 மணித்தியாலயம் செயற்படும் ஒசுசல சேவையை தொடர்ச்சியாக முன்னெடுத்தோம். தொற்று நோய் காரணமாக ஏற்பட்ட அதிக வரையறைகளுக்கு உட்படாமல் சுகாதார சேவைக்குள் பிரவேசிக்க முடியும் என்பதை உறுதியளிக்க டிஜிட்டல்மய செயற்பாட்டை ஆரம்பித்தமை உள்ளிட்ட தீர்மானமிக்க பொறுப்பை தனியார் துறையே நிறைவேற்றியது.

அரச மற்றும் தனியார் இரு தரப்பினதும் மருத்துவ தொழிற்சார் மற்றும் சுகாதார சேவை வழங்கும் குழுக்கள் தமது களைப்பை பாராது, அர்ப்பணிப்புடன் அனைத்து இலங்கையர்களுக்கும் அதியுயர் சேவையை பெற்றுக்கொடுக்க முடிந்தமையிட்டு நாம் அவர்களுக்கு நன்றி செலுத்துகின்றோம்.

அத்துடன் சவால்களை பொருட்படுத்தாமல் அனைத்து இலங்கையர்களுக்கும் சமமான சுகாதார சேவையை முன்னெடுத்துச் செல்வதை உறுதிப்படுத்த சுகாதார அமைச்சு மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியன நியமித்த கடுமையான வழிகாட்டல்கள் மற்றும் சட்டதிட்டங்களின் கீழ் தனியார் சுகாதார சேவை தொடர்ச்சியாக செயற்படும் என நாம் நம்புகின்றோம்.

மேலும் கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போரில் அரசாங்கம், மக்கள் சுகாதார அதிகாரிகள் போன்று வைத்தியர்கள், மருத்துவ சேவை, நிர்வாக மற்றும் பொது சுகாதார சேவை கட்டமைப்பின் ஊழியர்கள் ஆகிய அனைத்து தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்க எமது உறுப்பினர்கள் அர்ப்பணிப்புடன் இருந்தனர்.

3. தனியார் வைத்தியசாலைகள் இந்த தொற்றை எதிர்கொண்டது எவ்வாறு மற்றும் எதிர்காலத்தில் நோயாளர்களது பாதுகாப்;பை உறுதிப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் என்ன?

தொற்றின் போது, சுகாதார சேவையாளர்கள் என்ற வகையில் எமது பிரதான நோக்கமாக இருந்தது எமது விசேட மருத்துவர்களை பாதுகாப்பதும், ஊழியர் குழாம் மற்றும் எமது வைத்தியசாலைகளுக்கு வரும் அனைவரையும் பாதுகாப்பதாகும். அவ்வாறு எடுக்கப்பட்ட செயற்பாடுகள் மத்தியில் நோயாளர்கள் மற்றும் வருகை தரும் ஏனையவர்களை பரிசோதனை செய்வதற்கு முன்னுரிமை அளித்ததை கூறலாம். இதன்போது கொவிட்-19 தொற்று இருப்பதாக சந்தேகம் நிலவிய நோயாளர்களை துரிதமாக இனங்காணுதல் மற்றும் அவர்களுக்கு நியமித்த அரச வைத்தியசாலைகளுக்கு அவர்களை அனுப்பியமை, மருத்துவ ஊழியர் குழாமிற்கு தனிப்பட்ட பாதுகாப்பு ஆடைகளை வழங்கியமை, சந்தேகத்திற்கிடமான நோயாளர்களுக்கு முகக் கவசம் வழங்குதல், அனைத்து நோயாளர்கள், வருகை தருபவர்கள், ஊழியர் குழுhம் மற்றும் சமூகத்தின் பாதுகாப்;பை உறுதிப்படுத்த கடுமையான பாதுகாப்பு வழிகாட்டல்களை தனியார் துறை வைத்தியசாலைகள் பின்பற்றின.

4. இலங்கைக்குள் நோயாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களை தனியார் சுகாதார சேவை நிறுவனங்கள் ஊடாக சான்றிப்பது எவ்வறு? APHNH இன் அங்கத்தவர்களுக்கு செயற்படுவதற்கு சிபார்சு செய்துள்ள பூகோள சுகாதார சேவை தரங்கள் என்ன?

எமது சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் விசேட சேவைகளை கொண்ட சுகாதார சேவை நிறுவனங்கள் பல அவுஸ்திரேலியாவின் சுகாதார சேவை பேரவையின் சர்வதேச தரங்கள் (ACHSI) மற்றும் சர்வதேச JCI (HOSPITAL ACCREDITATION FROM JOINT COMMISSION INTERNATIONAL) தரம் போன்ற சர்வதேச தர நிறுவனங்கள் ஊடாக வருடாந்தம் கடுமையான தணிக்கை செயற்பாடுகளுக்கு உட்படும். இதன்மூலம் நோயாளர்கள் மற்றும் முழு சுகாதார சேவை நிறுவங்களின் ஊழியர்கள் குழாமும் பாதுகாப்பாக மற்றும் நோய் பாதிப்பில்லை என்பது உறுதியாகின்றது.

நாம் பின்பற்றும் சில செயற்பாடுகள் தொடர்பாக குறிப்பிடுவதாயின்:-

o இதன்போது நாம் அனைத்து நோயாளர்கள் மற்றும் வருகை தருபவர்களை நோய் மற்றும் தொடர்புகொண்ட நபர்களை (contact history) அடிப்படையாக கொண்டு வேறு பிரித்தல் / தீர்மானித்து அதற்கமைய அதிக அபாயமுள்ள நோயாளர்களை முகாமைத்துவம் செய்தல் இடம்பெறும்.

o நோய் கட்டுப்பாடு வழிகாட்டல்களுக்கமைய கொவிட்-19 தொற்று உள்ளதாக நபரொருவரை சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தலுக்கு பிரிதொரு நோய் பராமரிப்பு வார்ட் மற்றும் வெளி இடம் இருத்தல். அத்துடன் அதிக அபாயம் கொண்ட நோயாளர்களை முகாமைத்துவம் செய்வதற்கான வசதிகள் இருத்தல்.

o ஊழியர் குழாமின் வேறு நோயாளர்கள் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பை அச்சுறுத்தலுக்கு உட்படுத்தாமல் கொவிட் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் எந்தவொரு நபருக்கும் அவசர சிகிச்சை வழங்குவதற்கான வசதிகள் இருத்தல்.

o பாவனை செய்வதற்கு போதுமான அளவு தனிப்பட்ட பாதுகாப்பு ஆடைகள் இருத்தல்.

o வைத்தியசாலைக்குள் தரமான தொற்று நீக்கி வழிமுறைகள் இருத்தல்.

o ஊழியர் குழாமிற்குள் ஆரோக்கியமான சுகாதார வழிமுறைகளை பின்பற்றும் கலாசாரத்தை ஏற்படுத்துதல்

5. இதற்காக உங்கள் வைத்தியசாலைக்கு ஏதாவது தரச்சான்று அல்லது சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதா?

இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSL) ஊடாக வத்தளை மற்றும் தலவத்துகொடை ஹேமாஸ் வைத்தியசாலைகள் பாராட்டப்பட்டு கொவிட்-19 பாதுகாப்பு முகாமைத்துவ கட்டமைப்பு இற்கான சான்றிதழ் அண்மையில் வழங்கப்பட்டது. கொவிட்-19 பாதுகாப்பு முகாமைத்துவத்தை உரிய முறையில் முன்னெடுத்துச் செல்லும் இலங்கையின் ஒரே வைத்தியசாலை போன்று உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதலாவது வைத்தியசாலையும் ஹேமாஸ் வைத்தியசாலையாகும். தொற்று பரவுதை தடுத்தலின்போது எமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் தரங்கள் மிக முக்கியமான நேரத்தில் இந்த சான்றிதழ் எமக்கு கிடைத்தமையானது பாரிய வெற்றி போன்று மிகப் பெரிய கௌரவமாகவும் கருதுகின்றோம். மிக முக்கியமானது எதுவெனின், இந்த ஏற்றுக்கொள்ளலானது கொவிட் தொற்றை குறைப்பதற்கான தரங்கள் மற்றும் நடவடிக்கைகளை மிக சரியாக செயற்படுத்துவதற்காக உறுதியளித்தமைக்காக எமது வைத்தியசாலையின் அனைத்து ஊழியர்களும் கடுமையான அர்ப்பணிப்புடன் உழைத்தமைக்கு கிடைத்த சாட்சியாகும்.

6. இலங்கையில் தனியார் சுகாதார சேவைகளை பலப்படுத்துவதற்காக APHNH இன் திட்டம் என்ன?

தகுதியான மற்றும் பயிற்சி பெற்ற தாதியர்களை பெற்றுக்கொள்வது இலங்கை தனியார் சுகாதார சேவைகள் எதிர்நோக்கும் பிரதான சவாலாகும். தனியார் சுகாதார சேவைகளை ஒழுங்குபடுத்தல் சபை (PHSRC), தேசிய பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி அதிகார சபை (NAITA), மூன்றாம் நிலை தொழிற்சார் பயிற்சி ஆணைக்குழு (TVEC), ஆகிய நிறுவனங்களின் ஆதரவுடன் APHNH தனியார் சுகாதா சேவை துறைக்குரிய மருத்துவ ஊழியர் குழாமின் பயிற்சி மற்றும் திறன்களை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டுள்ளன.

நிகழ்காலத்தில் சில பாரிய மற்றும் நடுத்தர அளவு தனியார் வைத்தியசாலைகள் சுகாதார அமைச்சின் அனுமதியுடன் தமது தாதியர் பாடசாலைகளை முன்னெடுக்கின்றன. அத்துடன் தனியார் வைத்தியசாலைகளுடன் இணைந்த தாதியர் பாடசாலைகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பான திட்டமொன்று PHSRC வசமுண்டு. இந்த அனைத்து பாடசாலைகளுக்கும் PHSRC அனுமதியுடன்

அரசாங்கத்தின் தாதியர் பயிற்சி பாடநெறிக்கேற்ற தயாரிக்கப்பட்டுள்ள மூன்று வருட பாட திட்டம் ஊடாக பயிற்சி வழங்கப்படுகின்றது.

7. இலங்கையில் தனியார் சுகாதார சேவை துறையை பலமாக்கவும் ஆதரவு வழங்குவதற்கு அரசாங்கம் எத்தகையை நடவடிக்கைகள் எடுக்கும்?

அ) பயிற்சி வழங்கல் மற்றும் திறன் அபிவிருத்தி இலங்கை மருத்துவ சங்கம், தாதியர் சங்கம், TVEC, NAITA மற்றும் PHSRC ஊடாக தகுதியானவர்களை ஏற்றுக்கொண்டும் பதிவு செய்வதற்கும் அரச பொறிமுறையை ஸ்தாபித்தல் மற்றும் தனியார் துறைக்கு தமது ஊழியர் குழாமை அரசு பயிற்சி வழங்க இடமளித்தல்.

இதற்காக நாம் தனியார் சுகாதார சேவையாளர்களை பயிற்றுவிப்பதற்கு தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவனம் போன்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்திற்கு இணையான நிறுவனமொன்றை ஸ்தாபித்தல்.

ஆ) விலை தொடர்பான பிரச்சினை
அரசியல் இலாபத்திற்காக விலை தொடர்பான பிரச்சினைகளுக்கு தனியார் சுகாதார சேவை துறை மீது அடிக்கடி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. PHSRC ஆலோசனை ஊடாக நோயாளரை கேந்திரப்படுத்திய விஞ்ஞான விலை பொறிமுறையை அமைப்பதற்கு APHNH PHSRC உடன் கலந்துரையாட தயார்.

இ) PHSRC வலுப்படுத்தல்
பிரதான நகரங்களில் மட்டுமல்ல மாகாண மட்டத்திலும் தரம் மற்றும் ஒழுங்குமுறைகளை செயற்படுத்துதலுடன் மேம்படுத்துவதற்காக PHSRCஇல் உரிய பணிப்பாளரை நியமிக்க வேண்டும். சபையினால் தயார்படுத்தப்படும் முக்கிய சட்ட ஒழுங்குமுறைகளுக்கு அனுமதி வழங்கி துறைக்கு தேவையான உரிய ஒழுங்குபடுத்தல் ஆவணங்களை ஸ்தாபிக்க நேர்மையான கலந்துரையாடல்கள் ஊடாக மட்டுமே முடியும்.

ஈ) அரச தனியார் இணைந்து பணியாற்றல் (PPP)
அரச தனியார் இணைந்து பணியாற்றுவதை மேம்படுத்துவதற்கு ஆரம்ப திட்டம் இருந்தபோதிலும், அது எமது நோக்கம் போல் இடம்பெறவில்லை. பயிற்சி அளித்தல், அபிவிருத்தி மற்றும் மருத்துவ சுற்றுலா வியாபாரத்தை மேம்படுத்துவதற்கு நாம் இணைந்து பணியாற்றுவதை சிறிய அளவில் மீள ஆரம்பிக்க வேண்டும்.

உ) மத்திய மற்றும் சிறு வைத்தியசாலைகளுக்கு நிதி உதவி
மாகாண மட்டத்தில் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தும்போது சுகாதார துறைக்கு தீர்மானமிக்க பொறுப்பை நிறைவேற்ற முடியும். அதற்கமைய கடனுக்கு இலகுவான பிரவேசத்தை கொடுப்பதன் ஊடாக நாம் இந்த வைத்தியசாலைகளுக்கு உதவலாம்.

ஊ) முக்கியமான சுகாதார பிரச்சினைகளை வெளிக்கொணருதல் மற்றும் அவற்றுக்கு விடை அளிக்கும் செயற்திட்டங்களுக்காக விசேட வரி மற்றும் முதலீட்டு அனுகூலங்கள்

தொற்றாக நோய்கள் (NCDs) மற்றும் புற்றுநோய் மேலோங்கி வரும் சுகாதார பிரச்சினை என்றபோதிலும் அதற்கு முற்கூட்டியே சிகிச்சை வழங்கல், முற்கூட்டியே அறிந்துகொள்வதால் ஏற்படும் நன்மைகளை இனங்காணல், தடுப்பு திட்டங்கள், பாடசாலை மட்டத்தில் இது தொடர்பாக அறிவுத்தல் போன்ற திட்டங்களுக்கு முதலீடு செய்வதற்கு இந்த பிரிவிற்கு எந்தவித ஊக்கமும் கொடுக்கப்படுவதில்லை. ஆகையால் இது தொடர்பாக மக்களை அறிவுறுத்த தனியார் துறை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

எ) மனித வளங்களை ஏற்படுத்தல்
மனித வளங்கள் இன்றி சுகாதார சேவையால் வளர்ச்சியடைய முடியாது. அதற்கமைய வைத்தியர்கள், தாதியர்களை அறிவுறுத்துவதற்காக அரசாங்கத்தின் நிகழ்ச்சிகள் இருக்க வேண்டும் என்பதுடன் அதற்காக அரசாங்க சான்று கொண்ட தனியார் சுகாதார சேவை கல்வி நிறுவனங்களும் அதிக மனித வளங்களை வழங்க நடவடிக்கை எடுக்கும்.

8. நாட்டில் மருத்துவ சுற்றுலா வர்த்தகத்தை மேம்படுத்த எடுத்த நடவடிக்கைகள் யாவை?

கொவிட்டிற்கு பிற்பட்ட காலத்தில் சுகாதாரத்துறை முன்நோக்கி செல்கையில் மருத்துவ துறை மற்றும் Wellness tourism இல் இலங்கை சுகாதார சேவையானது எதிர்பார்ப்பு மிக்க முக்கிய காரணியாகும் என APHNH எதிர்பார்க்கின்றது. சிகிச்சை பெற இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் சத்திரசிகிச்சை, பல் மருத்துவ சேவை மற்றும் புனருத்தாபனம் போன்ற செயற்பாடுகள் ஊடாக நோய் குணமாக்கிக்கொள்ள எதிர்பார்ப்பர். இருதய மற்றும் இரத்த அழுத்தம், பக்கவாதம், புற்றுநோய், பல் தொடர்பான அழகு சிகிச்சை ஆகியன இதில் உள்ளடங்கும். பலமான சிகிச்சை கட்டுப்பாட்டு வியூகம், பூகோளத்தின் சிறந்த பாவனைகள், தரம் மற்றும் பயிற்சிபெற்ற மருத்துவர்கள் தவிர இலங்கை போன்ற நாட்டின் பிரதான நன்மையாக அமைவது தாய்லாந்து, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற துறையின் ஏனைய ஜாம்பவான்களுடன் ஒப்பிடுகையில் விலை குறைவாக இருப்பதாகும். உதாரணமாக சிங்கப்பூரில் இதயம் சார்ந்த பைபாஸ் சத்திரசிகிச்சை செய்வதற்கு 17,200 அமெரிக்க டொலர்கள் செலவாகின்ற அதேநேரம், இலங்கையில் அதனை செய்வதற்கு 6,000 இற்கு சற்று அதிகமான அமெரிக்க டொலர்களே செலவாகின்றது.

இப்போது அரசாங்கம் இது தொடர்பாக கலந்துரையாட ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் கீழ் ஆலோசனை குழுவொன்றை நியமித்துள்ளதுடன் இலங்கையானது வலயத்தில் முன்னேறி வரும் பிரதான சுகாதார மத்திய நிலையமாக மாற்றுவதற்;கு தனியார் துறையுடன் ஒத்துழைப்பு வழங்கி பணியாற்ற வேண்டும்.