Lincoln University College உடன் பங்காண்மை உடன்படிக்கையில் Northshore கைச்சாத்து

இலங்கையின் நவீன கற்றல் மற்றும் கற்பித்தல் வசதிகளைக் கொண்ட பல்கலைக்கழகமான Northshore International Campus, மலேசியாவைத் தளமாகக் கொண்டியங்கும் Lincoln University College (LUC) உடன் பங்காண்மை உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இதனூடாக, இலங்கை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற பட்டப்படிப்புகள் ஏராளமானவற்றை இலங்கையின் மாணவர்களுக்கு வழங்க முன்வந்துள்ளது.

Northshore International Campus மற்றும் LUC ஆகியவற்றுக்கிடையிலான பங்காண்மை டிசம்பர் 1ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டிருந்தது. இந்த பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் கற்கைகளில் அடிப்படைக் கற்கை முதல் பட்டமுன்படிப்பு மற்றும் கலாநிதிப் பட்டம் வரையில் அடங்கியுள்ளன. வணிகம், கணனி, பொறியியல், உயிரியல் தொழில்நுட்பம், உயிரியல் மருத்துவம், தாதியியல், பிசியோதெரபி, பார்மசி மற்றும் விளையாட்டு போன்ற பல பிரிவுகளில் இந்தக் கற்கைகளைத் தொடர முடியும்.

மலேசிய உயர் கல்வி அமைச்சு (MoHE) மற்றும் மலேசிய தகைமைகள் முகவர் அமைப்பு (MQA- National Accreditation Board) ஆகியவற்றின் அனுமதியைப் பெற்ற முன்னணி உயர் கல்விச் சேவைகளை வழங்கும் கல்வியகமாக LUC திகழ்கின்றது. 2019 ஆம் ஆண்டுக்கான Times Higher Education’s University Impact Rankings இன் பிரகாரம் மலேசியாவில் காணப்படும் சிறந்த ஒன்பது பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இது தரப்படுத்தப்பட்டுள்ளது. ISO 9001:2015 சான்றிதழைப் பெற்ற கல்வியகம் என்பதுடன், 2017 ஆம் ஆண்டில் மலேசியா உயர் கல்வி அமைச்சின் (MoHE) ஐந்து நட்சத்திர தரப்படுத்தலையும் LUC பெற்றுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள நவீன வசதிகளைக் கொண்ட கட்டடத்தினூடாக, Northshore International Campus இனால் பாதுகாப்பான முறையில், சிறந்த கற்றல் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நவீன வசதிகள் படைத்த விரிவுரை அறைகள் காணப்படுவதுடன், 700 இருக்கைகளைக் கொண்ட கேட்போர்கூடம், அதிகளவு இடவசதி கொண்ட உணவகம், நூலகம், போதியளவு வாகனத் தரிப்பிட வசதி, மாணவர் போக்குவரத்து வசதிகள், பல்வேறு மேலதிக செயற்பாடுகள் போன்ற பல வசதிகள் இந்தக் கல்வியகத்தில் காணப்படுகின்றன.

இந்தக் கல்வியகத்தில் பல்வேறு ஆய்வுகூடங்களும் காணப்படுகின்றன. இவற்றில் இலத்திரனியல் மற்றும் மின், ஹைட்ரோலிக், கட்டமைப்பு எந்திரவியல், புவிநுட்பவியல் மற்றும் மூலப்பொருள் பொறியியல், கணனி மற்றும் பல பகுதிகளும் நிறுவப்படுகின்றன. புதிதாக நிறுவப்படும் பகுதிகளில் மரபணுவியல், கல உயிரியல், நோய்எதிர்ப்பியல், நுண்ணுயிரியல் மற்றும் இரசாயனவியல் போன்றவற்றுக்கான பிரத்தியேகமாக ஆய்வுகூடங்கள் அமைந்திருக்கும்.

நான்கு ஏக்கர் காணியில் நான்கு மாடிக் கட்டடத்தில் காணப்படும் இந்த கல்வியகம், 140,000 சதுர அடி எனும் பகுதியில் அமைந்துள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கல்வியகத்தில் 2250 க்கும் அதிகமான மாணவர்களை கொண்டிருக்க முடியும். ஒரு தசாப்த காலப்பகுதிக்கு முன்னர் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக தனது செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது. மாணவர்களின் வெற்றிகரமான செயற்பாட்டுக்கான தனது அர்ப்பணிப்பை தொடர்ச்சியாக உறுதி செய்துள்ளது. உயர் தகைமை வாய்ந்த கல்வி வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கு தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், Northshore International Campus இனால் அதிகளவு தாக்கம் செலுத்தக்கூடிய ஆய்வில் கவனம் செலுத்தப்பட்டு, பல்வேறு துறைகளில் காணப்படும் அறிவை மேலும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தத் தொற்றுப் பரவல் காணப்படும் காலப்பகுதியில், Northshore International Campus இனால் சகல கற்பித்தல் வகுப்புகளும் ஒன்லைன் Northshore Learning Management System ஊடாக இடம்பெறுகின்றன. இந்தக் கல்வியகத்தினூடாக, தொழில்நிலை வழிகாட்டல், கல்விசார் ஆலோசனைகள் மற்றும் துறைசார் இணைப்புகள் போன்றனவும் வழங்கப்படுகின்றன. தற்போது, மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான சகல முற்காப்பு நடவடிக்கைகளையும் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

LUC உடனான பங்காண்மையின் மூலமாக, 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கான மாணவர் சேர்ப்பு தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. மேலதிக தகவல்களுக்கு 0715 500 200 அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ளலாம். www.northshore.lk எனும் இணையத்தளத்தையும் பார்வையிட முடியும்.