“நல்வாழ்வு, நல்வியாபாரம்” எனும் கொள்கையை உலகுக்கு கொண்டு செல்வதில் GLX முக்கிய பங்களிப்பு

தொழில்நுட்ப தீர்வுகளில் பெருமளவில் தங்கியுள்ள ஆரம்ப நிலையிலுள்ள நிறுவனங்களின் வியாபாரச் செயற்பாடுகளை மேம்படுத்தி அவற்றுக்கு உதவிகளை வழங்குவதற்கான இனங்காணல் செயற்பாடுகளுடன் தனது பயணத்தை 2018 ஆம் ஆண்டில் GoodLife X (GLX) ஆரம்பித்திருந்தது. ஆரம்ப-நிலை மற்றும் சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகள் (மற்றும்/அல்லது தொழில்நுட்பம் செயற்படுத்தப்பட்ட) வியாபார மாதிரிகளில் GLX கவனம் செலுத்துகின்றமையானது, அடுத்த தசாப்த காலப்பகுதிகளுக்கு நுகர்வோரின் செயற்பாடுகளை மாற்றியமைப்பதுடன், சூழல் மற்றும் சமூக சவால்களை தீர்ப்பதற்கு, உணவு மற்றும் விவசாயம், ஆரோக்கியம் மற்றும் பிரயாணம், அலங்காரம், மற்றும் வலுத் துறைகள் போன்றவற்றுக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் வகையிலும் அமைந்திருக்கும்.

நிகழ்ச்சிப் பணிப்பாளர் ரந்துலா டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “மேற்படி துறைகளின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கும் பெரும்பாலான செயற்பாடுகளுக்கு மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. தொழில்நுட்ப ரீதியில் இயங்கும் புத்தாக்கவியலாளர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்கள் மத்தியில் தொடர்பற்ற நிலையை கடந்த காலங்களில் அவதானிக்க முடிந்தது. புத்தாக்கமான உயர் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முனைவுகள், உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலமாக அமைந்திருக்கும். இலங்கையில் அவை தொடர்பில் போதியளவு கவனம் செலுத்தப்படவில்லை. எனவே, இந்த விடயம் தொடர்பில் புரட்சிகரமான மற்றம் மற்றும் புத்தாக்கம் போன்றன அவசியமாகின்றன.” என்றார்.

GoodLife X என்பது, இலங்கையில் புத்தாக்கமான மற்றும் ஈடுபாட்டைப் பேணும் தொழில் முயற்சியாளர்களுக்கும் அவர்களின் நிலைபேறான வியாபார சிந்தனைகளுக்கும் சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு கட்டமைப்பாக அமைந்துள்ளது. தொழில்முயற்சியாளர்களின் இடர்களை உள்வாங்குவது மற்றும் சர்வதேச அறிவு மற்றும் வலையமைப்பு, சந்தை புலனாய்வு மற்றும் நிதி வழங்கும் வாய்ப்புகள் போன்றவற்றினூடாக புத்தாக்கத்தை செயற்படுத்துவது போன்றன GLX இனால் பிரதான கவனம் செலுத்தப்படும் பிரிவுகளாக அமைந்துள்ளன.

ஆர்வமுள்ள நிறுவனங்கள் பிரத்தியேகமாக கட்டமைக்கப்பட்ட வியாபாரத் திட்டங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், அறிவு, நிபுணத்துவம், கைகோர்ப்புகள், சர்வதேச சந்தைகளுக்கு பிரவேசம், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் நிதி வழங்கல்கள் போன்றவற்றை அணுகுவதற்கு வாய்ப்பை வழங்கும் வகையில் அமைந்துள்ளன. இலங்கையில் காணப்படும் உணவு, கட்டமைப்பு, பிரயாணம் மற்றும் ஆரோக்கியம், GLX உதவியுடனான ஆரம்ப நிலை நிறுவனங்கள் மற்றும் முதிர்ச்சி நிலை நிறுவனங்கள் போன்றவற்றுக்கு GLX Business Accelerator மற்றும் GLX Garage ஆகிய இரு பிரதான நிகழ்ச்சிகளினூடாக கவனம் செலுத்தப்படுகின்றன.

GLX Business Accelerator என்பது 16 வார காலப்பகுதிக்கு முன்னெடுக்கப்படும் ஆர்வமுள்ள, துரித மற்றும் உள்ளார்ந்த வியாபார அபிவிருத்தித் திட்டமாக அமைந்துள்ளது. இதன் போது பயிற்சிகள், ஆலோசனைகள் மற்றும் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு வித்து நிதியளிப்புகள் வழங்கப்படும். ஸ்தாபகர்களுக்கு தமது நிறுவனத்தை அளவுக்கட்டமைத்துக் கொள்ள உதவுவதில் கவனம் செலுத்துவதுடன், உள்ளக மற்றும் வெளியக செயன்முறைகளை மேம்படுத்துவது மற்றும் பிராந்தியங்கள் மற்றும் கண்டங்களில் தமது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை சென்றடைய உதவிகளை வழங்குவது போன்றவற்றிலும் கவனம் செலுத்துகின்றது.

வியாபாரங்கள் மற்றும் பொருளாதாரத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவலின் தாக்கத்துக்கு பதிலாக, பிரயாணம், ஆரோக்கியம், உணவு மற்றும் அலங்காரத்துறைகளைச் சேர்ந்த நிலைபேறான சிந்தனைகளைக் கொண்ட சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு 5 மாத காலப்பகுதிக்கான விசேட GLX Garage நிகழ்ச்சித் திட்டம் “வியாபாரத்தில் நல்லநிலையில் ஈடுபடுவது” என்பதை குறிக்கும் வகையில் தமது வியாபாரங்களை சந்தைப்படுத்தல் தந்திரோபாயம், புதிய சந்தைகளை அணுகல் மற்றும் சர்வதேச பங்காண்மைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதாக அமைந்துள்ளது.

இலங்கை சுற்றுலாத்துறை கூட்டணியுடன் அண்மையில் GoodLife X ஏற்படுத்தியிருந்த கைகோர்ப்பினூடாக, தேசத்தின் சுற்றுலாத் துறைக்கு உதவும் வகையில் துறையைச் சேர்ந்த சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கான சுற்றுலாத் துறை மறுசீரமைப்புக்கு மானியம் எனும் நிகழ்ச்சியை முன்னெடுக்கின்றது. இலங்கையில் முதன் முறையாக முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டம், சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளை மாறிவரும் சூழலுக்கேற்ப வெற்றிகரமான வழிநடத்துவதாக அமைந்திருப்பதுடன், தற்போது உலகளாவிய ரீதியில் காணப்படும் இடர்களின் மத்தியில் காணப்படும் வாய்ப்புகளை இனங்கண்டு அவற்றை பயன்படுத்திக் கொள்ள உதவுவதாகவும் அமைந்துள்ளது.