பொலிஸ் அதிகாரிகளையும் டயர் முகவர்களையும் பாதுகாப்பதற்கான இன்னோர் அன்பளிப்பை வழங்கி அரவணைப்பை வெளிப்படுத்தியது சியெட்

ஸ்ரீ லங்கா பொலிஸ்ரூபவ் நாடு முழுவதிலுமுள்ள டயர் முகவர்கள் ஆகியோருக்குத் தேவையான 1,000 பெட்டிகளைக் கொண்ட அத்தியாவசியப் பாதுகாப்புப் பொருட்களை வழங்கியுள்ள சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனம் கொவிட்-19 பரவலுக்கு எதிரான செயற்பாட்டுக்குத் தனது ஆதரவை இதன்மூலமாக மீளவும் வலியுறுத்தியுள்ளது.

ஒவ்வொரு பெட்டியிலும் ஒற்றைப்பயன் கையுறைகள் (disposable gloves) 100, மீளப்பயன்படுத்தப்படக்கூடிய முகமூடிகள் (reusable masks) ஐந்து, கைச்சுத்திகரிப்பான் (hand sanitiser) போத்தல்கள் ஐந்து ஆகியன உள்ளடங்கியுள்ளன. இவ்வுற்பத்திகள் அனைத்தும் சியெட் நிறுவனத்துக்கெனத் தனியாகத் தயாரிக்கப்பட்டுரூபவ் நிறுவனத்தின் பெயரைத் தாங்கிக் காணப்படுகின்றன. இப்பெட்டிகளில் 450 பெட்டிகளை பொலிஸாரின் பாவனைக்கென சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனிடம் சியெட் நிறுவனம் அண்மையில் வழங்கியிருந்தது. எஞ்சியுள்ள 550 பெட்டிகளும் வாடிக்கையாளர்களோடு இணைந்து செயற்பட வேண்டிய டயர் முகவர்களின் ஊழியர்களுக்கு வழங்குவதற்கென விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மேலதிகமாக டயர் முகவர் நிலையங்களில் சமூக இடைவெளி பேணலை ஏற்படுத்துவதற்கு உதவும் வகையில் தரையில் ஒட்டப்படும் விசேடமாக வடிவமைக்கப்பட்ட ஸ்டிக்கர்களைகளையும் சியெட் களனி நிறுவனம் வழங்கியுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சியெட் களனி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ரவி டட்லானி பூகோளப் பெருந்தொற்று நிலைமையை எமது நாட்டில் சிறப்பாகக் கட்டுப்படுத்த வேண்டுமானால் இந்நிலைமை காரணமாக அவசியமாக மாறியுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பல மாதங்களுக்கு இன்னும் பின்பற்றுதல் அவசியமாகும். இதற்கு வழிவகுப்பதற்கு நிறுவனங்கள் தம்மால் இயன்ற அனைத்தையும் மேற்கொள்ள வேண்டுமென நாம் நம்புகிறோம். எமது நிறுவன நடவடிக்கைகளின்போது விதிக்கப்பட்டுள்ள அனைத்து நெறிமுறைகளையும் அமுல்படுத்துவதற்கு மேலதிகமாக பொலிஸார் எமது முகவர்கள் ஆகியோர் முன்னரங்குகளில் நின்று செயற்படுவதன் காரணமாக அவர்களுக்கு உதவுவது எமது கடமையாகுமென நாம் கருதுகிறோம் என்று தெரிவித்தார்.

கொவிட்-19 ஐக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் முன்னிலையில் செயற்படும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் சுகாதார அமைச்சு ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை அவ்வைத்தியசாலையின் பட்டப்பின் மருத்துவப் பயிற்சி நிலையம் லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை பதுளை பொது வைத்தியசாலை ஸ்ரீ லங்கா பொலிஸ் ஆகிய முக்கியமான அரச நிறுவனங்களுக்கு 10 மில்லியன் ரூபாய்க்கும் மேற்பட்ட பெறுமதியுடைய கருவிகளையும் நுகர்பொருட்களையும் இவ்வாண்டு ஆரம்பத்தில் சியெட் களனி நிறுவனம் அன்பளித்திருந்தது.

தனியான வேறோர் அன்பளிப்பாக 2 மில்லியன் ரூபாயை கண்டி பல்லேகெலயில் அமைக்கப்பட்டுவரும் 106 படுக்கைகளைக் கொண்ட இராணுவ மருத்துவமனையின் நிர்மாணப் பணிகளுக்காக சியெட் களனி நிறுவனம் பங்களித்திருந்தது.

இந்த அன்பளிப்புகளுக்கு மேலதிகமாக நீண்டகாலத் திட்டமொன்றையும் சியெட் நிறுவனம் அமுல்படுத்தியிருந்தது. இதன்படி பயணிகளினதும் பஸ் பணியாளர்களினதும் பாதுகாப்பையும் சுகாதார வசதிகளையும் மேம்படுத்தவும் லொறிகளில் பணியாற்றுபவர்களுக்குப் பாதுகாப்புக் கருவிகளை வழங்குவதோடு முக்கியமான இடங்களில் சேவையாற்றும் லொறிகளுக்குக் கிருமிநீக்கம் செய்வதன் மூலமாக உதவி வருகிறது. அதேபோன்று நாடு முழுவதிலுமுள்ள டயர் விநியோக நிறுவனங்கள் தமது பணியாளர்களைத் தொடர்ந்தும் பணியிலமர்த்துவதற்கும் உதவி வருகிறது.

கொழும்பு மாவட்டத்தில் செயற்படும் 350 பஸ்களில் பயணிகள் ஏறும்போது அவர்களின் தேவைக்கெனக் கைச்சுத்திகரிப்புத் திரவங்களை வழங்குதல் சியெட் களனி நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்களில் ஒன்றாகும். இந்த பஸ்களுக்கான கைச்சுத்திகரிப்புத் திரவங்களை மூன்று மாதங்களுக்கு வழங்குவதற்கும் மூன்று மாதங்களுக்குத் தேவையான தனிப்பட்ட பாதுகாப்புக் கருவிகளை பஸ் ஓட்டுநர்களுக்கும் நடத்துநர்களுக்கும் வழங்குவதற்கும் சியெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது. ஒவ்வொரு தொகுதியும் ஆறு முகமூடிகள் ஆறு சோடிக் கையுறைகள் தனிப்பட்ட கைச்சுத்திகரிப்புத் திரவங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.

இந்தியா – இலங்கை இணைந்த பங்குடைமை நிறுவனங்களில் உற்பத்தித் துறையில் மிகவும் வெற்றிகரமானவற்றுள் ஒன்றாக சியெட் களனி ஹோல்டிங்ஸ் கருதப்படுகிறது. இந்த இணைந்த பங்குடைமை இதுவரை இலங்கையில் 8 பில்லியன் ரூபாய் முதலீட்டை மேற்கொண்டுள்ளது. இதனுள் உற்பத்தி அளவை அதிகரித்தல் தொழில்நுட்பத் தரமுயர்த்தல் புதிய உற்பத்தி அபிவிருத்தி ஆகியவற்றுக்காக 2018ஆம் ஆண்டு ஜனவரியில் அர்ப்பணிக்கப்பட்ட 3 பில்லியன் ரூபாயும் உள்ளடங்குகிறது.

இலங்கையில் காணப்படும் நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள் மூலமாக ரேடியல் (பயணிகள் கார்கள் வான்கள் எஸ்.யு.வி வாகனங்கள்) வர்த்தக வகை (பயாஸ்-ப்ளை ரேடியல்) மோட்டார் சைக்கிள் முச்சகரவண்டி விவசாய வாகனப் பிரிவுகள் ஆகியவற்றுக்கான காற்றடைத்த டயர்கள் உற்பத்திசெய்யப்படுகின்றன.