Happy inside பண்டிகைக்கால கார்ட் சலுகைகளுடன் பல வரிசைகளான தள்ளுபடிகளை வழங்குகிறது HNB

இலங்கையில் மிகவும் பிரபலமான சில்லறை வங்கியான HNB PLC கார்ட் உரிமையாளர்களுக்கான விரிவான சிறப்பு சலுகைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதில் 70% வரை தள்ளுபடி மற்றும் இந்த பண்டிகைக் காலங்களில் நாடு முழுவதிலும் 300க்கும் மேற்பட்ட பிரபலமான வர்த்தகங்களின் பரந்த தேர்விலிருந்து தனித்துவமான சலுகைகளை வழங்குகிறது.

பிரபலமான உள்நாட்டு மற்றும் சர்வதேச பிராண்டுகளின் (Brand) பரந்துள்ள தேர்வுகளின் இந்த கூட்டு – சில்லறை விற்பனை, சிறந்த உணவு, ஓய்வு மற்றும் விருந்தோம்பல் முதல் தனிப்பட்ட இலத்திரனியல் பொருட்கள், ஆடைகள் மற்றும் உதிரிப்பாகங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியுள்ளது.

காப்புறுதி, கல்வி மற்றும் மருத்துவமனை ஆகிய கட்டணங்களை செலுத்துவதற்கான வட்டி இல்லாத தவணைத் திட்டத்தை 3, 6 மற்றும் 12 மாதங்களுக்கு HNB அட்டை உரிமையாளர்களுக்கு வழங்குவதுடன், 2020 டிசெம்பர் 31 வரை வங்கி வழங்கும் கையாளுதல் கட்டணத்தில் தள்ளுபடியுடன் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஒவ்வொரு ஆண்டும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பண்டிகைக் காலத்திற்கான சிறந்த விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் தள்ளுபடியை வழங்குவதற்காக நாங்கள் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். நிச்சயமாகவே கடந்த ஆண்டு குறிப்பாக சவாலானது, எனவே எங்கள் அட்டை உரிமையாளர்களுக்கு சந்தையில் கிடைக்கக்கூடிய சிறந்த தெரிவுகளை பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்த நாங்கள் கடுமையாக உழைக்க தீர்மானித்தோம்.” என HNB பிரதி பொது முகாமையாளர் வாடிக்கையாளர் வங்கி நடவடிக்கைகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வங்கி நடவடிக்கைகள் – சஞ்ஜேய் விஜேமான்ன தெரிவித்தார்.

இந்த ஆண்டின் ஊக்குவிப்பு நடவடிக்கையின் மூலம், வாடிக்கையாளர்கள் 100க்கும் அதிகமான பெஷன் பிராண்டுகள், 50க்கும் அதிகமான பயண மற்றும் ஹோட்டல் கூட்டாளர்கள், வாகன பராமரிப்பு, நகை விற்பனையாளர்கள், பல்பொருள் அங்காடிகள் (Supermarket) மற்றும் ஒன்லைன் வணிக தளங்களில் இருந்து தள்ளுபடிகள் மற்றும் சிறப்புச் சலுகைகளையும் பெறலாம். குறிப்பிடத்தக்க வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்டோமொபைல் வர்த்தகர்களிடமிருந்து 50% வரை தள்ளுபடி பெற HNB Prestige Prime அட்டைத்தாரர்களுக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

இணையத்தள வலைப்பின்னலைப் பயன்படுத்தி ஒன்லைனில் கொடுக்கல் வாங்கல் செய்யவதை ஆர்வம் காட்டும் வாடிக்கையாளர்களுக்கு வட்டியில்லாத இலவச தவணைக் கட்டணம் செலுத்தும் திட்டங்கள் – 24 மாதங்கள் வரை மற்றும் 50% வரை விரிவான தள்ளுபடிகள் ஆகியவற்றுடன் பலனளிக்கும் ஒரு சிறந்த இடத்தை வழங்க HNB பரந்த அளவிலான ஒன்லைன் வணிக தளங்களுடன் கூட்டுசேர்ந்துள்ளது.

மேலும் கிரெடிட்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் அன்றாட ஷொப்பிங் நடவடிக்கையின் போது சிறந்த மதிப்பை வழங்க HNB முன்னணி வணிக உரிமையாளர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மாலை 4-8 மணி வரை அனைத்து கீல்ஸ் சுப்பர் மார்க்கெட்டுகளிலும் 3,500 ரூபாவுக்கு மேல் தொகையுள்ள ரசீதுகளுக்கு 10% தள்ளுபடி மற்றும் அதிகபட்சமாக 1,000 ரூபா வரை தள்ளுபடி ஆகியவை இதில் அடங்கும்.

அதேபோல், Softlogic GLOMARK விற்பனை நிலையங்களிலும், www.glomark.lk இல் ஷொபிங் செய்யும் கார்ட் உரிமையாளர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கிரெடிட் கார்டுகளில் 20% தள்ளுபடி மற்றும் டெபிட் கார்டுகளில் 10% மொத்த பில் 4,000 ரூபா முதல் 1,000 ரூபா வரையான பில்களுக்கு தள்ளுபடி சலுகைப் பெறுவார். அதிகபட்சமாக கிரெடிட் கார்ட்டுகள் மூலம் கொள்வனவிற்கு 2,000 ரூபா தள்ளுபடியும் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 1,000 ரூபா தள்ளுபடியும் வழங்கப்படும்.

இந்த நிலையில், எந்தவொரு Arpico Supercentres, Superstores and Daily Outletsஇல் வார இறுதிகளில் தங்களது கிரெடிட் கார்ட் மூலம், 2,500 ரூபாவுக்கும் மேல் புதிய பழங்கள், காய்கறிகள் மற்றும் மீன் வகைகள் ஆகியவற்றைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் 25% தள்ளுபடியை பெற்றுக் கொள்வார்.

மேலும், எந்தவொரு Cargills Food Cityஇலும் ஷொபிங் செய்யும் கார்ட் உரிமையாளர்கள் 2020 டிசெம்பர் 28ஆம் திகதி திங்கட்கிழமை அன்று கிரெடிட் காட்களில் செய்யப்படும் ரூ. 3,000க்கும் அதிகமாக கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் 10% தள்ளுபடிக்கு தகுதிபெறுவார்கள், அதிகபட்சமாக 1,000 ரூபா வரை தள்ளுபடியை பெற்றுக் கொள்வார்கள்.

விடுமுறைக்கால சலுகைகளில் HNBஇன் மதிப்பு மிக்க விருந்தோம்பல் பங்குதார வலைப்பின்னலில் 75% வரை உற்சாகமான நன்மைகள் மற்றும் தள்ளுபடிகள் காணப்படுகின்றன, அதேநேரம் பயணம் செய்ய விரும்பும் கார்ட் உரிமையாளர்களுக்கு வட்டி இல்லாத தவணை செலுத்தலுக்காக முன்னணி சுற்றுலா நிறுவனங்கள் HNB உடன் கைகோர்த்துள்ளன.

கார்ட் உரிமையாளர்கள் நாடு முழுவதிலுமுள்ள முன்னணி வாழ்க்கை முறை பிராண்டுகள் மற்றும் வாகன பராமரிப்பு வர்த்தகர்களிடமிருந்து 50% வரை தள்ளுபடிகளைப் பெற்றுக் கொள்ளலாம். தற்போது HNB கார்ட் வகைகளில், Visa Classic, Gold, Platinum, Signature மற்றும் Infinite போன்றவை மட்டுமன்றி Master Card Regular, Gold, Platinum மற்றும் World ஆகிய கார்ட்களும் உள்ளடங்குகின்றன. அத்துடன் இந்த கார்ட் உரிமையாளர்களுக்கும் கவர்ச்சிகரமான கட்டண தள்ளுபடி மற்றும் உடனடியாக குடும்ப அங்கத்தினர்களுக்கு எவ்வித வருடாந்தர கட்டணம் மற்றும் இணைப்புக் கட்டணம் இன்றி 3D பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட [One Time Password (OTP)] கடவு இலக்கம் ஆகியவை மிகவும் பாதுகாப்பான ஒன்லைன் ஷொபிங்கிற்கு உத்தரவாதமளிப்பது உள்ளிட்ட பல கவர்ச்சிகரமான அம்சங்களை உள்ளடக்கிய அனுபவத்தை வழங்குகிறது.

அத்துடன் HNB கார் உரிமையாளர்களுக்கு Visa Airport Companion மற்றும் MasterCard LoungeKey ஊடாக 1000க்கும் அதிகமான விமான நிலையங்களில், சுகாதார, சுற்றுலா காப்புறுதி மற்றும் விமான நிலையங்களில் ஓய்வெடுப்பதற்கான வசதிகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் ஏனைய Infinite மற்றும் Signature கார்ட் வைத்திருப்போருக்கு 365 நாட்களும் 24 மணித்தியாலத்திற்குள் உலகம் முழுவதும் செயற்படும் விமானங்கள், உல்லாச விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு இலகுவாக மீள்செலுத்தும் முறை அடிப்படையில் இடஒதுக்கீடுகள் மேற்கொள்வதற்கும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

300க்கும் அதிகமான கூட்டிணைந்த வர்த்தகர்களின் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள HNB இணையத்தளத்தின் கார்ட் பிரிவிற்குச் பிரவேசிக்க https://www.hnb.net/personal/promotions/card-promotion பயன்படுத்தவும். வாடிக்கையாளர் நிலையங்கள் 252ஐ நாடு முழுவதிலும் நடத்திச் செல்லும் HNB டிஜிட்டல் வங்கியியலில் புதிய முன்மாதிரியை முன்னோக்கி நகர்த்தும் நோக்கில் வெளிநாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இலங்கையின் பிரமாண்டமான மற்றும் மிகுந்த தொழில்நுட்ப புத்தாக்கங்களைக் கொண்ட வங்கியாகும். அண்மையில் வங்கி தொடர்ச்சியாக பல விருதுகளை வென்றதுடன் த பேங்கர் சஞ்சிகையினால் உலகில் சிறந்த 1000 வங்கிகள் பெயர் பட்டியலில் இடம்பிடித்தமைக்கு மேலதிகமாக இலங்கையின் விசேட வாடிக்கையாளர் வங்கியென்ற விருதினை 11வது தடவையாகவும் வென்றது. உள்ளுரில் பிஸ்னஸ் டுடே Top 10 தரப்படுத்தலில் முன்னிலையிலுள்ள HNB 2019ஆம் ஆண்டுக்கான Best Corporate Citizen Sustainability என்ற விசேட விருது வழங்கும் நிகழ்வில் ஏழு விருதுகளை வென்றெடுத்தது. சர்வதேச கடன் தரப்படுத்தலைப் பெற்றுக் கொண்ட இலங்கையின் முதலாவது வங்கியான HNBக்கு Moody’s Investors Serviceஇனால் B1 தரப்படுத்தலும் வழங்கப்பட்டது. அண்மையில் Fitch ratings மூலம் HNBஇன் தேசிய நீண்டகால வகைப்படுத்தல் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு அங்கு Fitch ratings இன் இரண்டு இடங்களைக் கடந்து மேலே சென்று ‘AA+(lka)’ கடன் தரப்படுத்தலைப் பெற்றுக் கொள்ள HNBக்கு முடிந்தமை விசேட அம்சமாகும்.

x