கொமர்ஷல் வங்கி காலி கோட்டை கிளையை புனரமைத்து வரலாற்றுக்கு புகழ் சேர்த்துள்ளது

கொமர்ஷல் வங்கி இவ்வாண்டு கொண்டாடிய அதன் நூற்றாண்டு விழா தொடர்பான பல்வேறு நிகழ்வுகளின் இறுதி நிகழ்வாக வரலாறையும் கடந்த கால பெருமையையும் ஒன்றாக மீட்டெடுக்கும் ஒரு நிகழ்வாக இவ்வாரம் காலி கோட்டையில் உள்ள அதன் கிளை அதே இடத்தில் மீண்டும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

வங்கித் தலைவர் தர்மா தீரசிங்க முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ரெங்கநாதன் பிரதம செயற்பாட்டு அதிகாரி சனத் மனதுங்க மற்றும் கூட்டாண்மை முகாமைத்துவத்தின் உறுப்பினர்கள் பலர் 19ம் நூற்றாண்டின் ஆரம்ப கால பழைய கட்டிடமான இலக்கம் 22 சேர்ச் வீதியில் அமைந்துள்ள கட்டிடம் மீள் நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்ட சம்பிரதாயபூர்வ நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர். இந்தக் கட்டிடம் அதன் காலணித்துவ பிரம்மாண்டத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

கொமர்ஷல் வங்கிக் கட்டிடங்களில் இது மிகவும் பழமையானதாகும். அத்தோடு இது தென் மாகாணத்தில் உள்ள மிகப் பழைய கட்டிடங்களில் ஒன்றாகவும் உள்ளது. ஜோர்ஜ் ஹென்றி பொக்கர் என்பவர் தான் இதன் முதலாவது உரிமையாளர் என்று பதிவுகள் கூறுகின்றன. ஒரு காலத்தில் ஓல்ட் மென்ஷன் என்ற பெயரில் ஒரு ஹோட்டலாகவும் இது இருந்துள்ளது. மேர்கன்டைல் பேங்க ஒப் இந்தியாவின் காலி கிளையாகவும் இது இருந்துள்ளது. 1973ம் ஆண்டு இந்த மேர்கண்டைல் வங்கியின் மூன்று முக்கிய பிரிவுகளை கொமர்ஷல் வங்கி பொறுப்பேற்ற கையோடு இந்தப் பாரம்பரிய கட்டிடமும் வங்கியின் வசமானது.

காலி மரபுரிமை மன்றம் தொல்பொருள் திணைக்களம் என்பனவற்றின் ஆலோசனைகளைப் பெற்று பழமைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்தக் கட்டிடம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. பசுமைக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு திருத்தி அமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டிடம் சூரிய சக்தி மின் வசதிரூபவ் விஷேடமான பசுமைத் தரம் கொண்ட மூலப் பொருள்கள்ரூபவ் மழைநீர் சேமிப்பு வசதி உணவு அறைகளில் வீணாக்கப்படும் உணவை மீள் சுழற்சி செய்யும் வசதிரூபவ் உக்காத பொருள்களை சுற்றாடலுக்கு இசைவான விதத்தில் மீள் சுற்றுக்கு உற்படுத்தும் வசதி என்பனவற்றை உள்ளடக்கி உள்ளது.

மீள் அமைப்புச் செய்யப்பட்ட இந்தக் கட்டிடத்தின் சம்பிரதாயபூர்வ திறப்பு விழா இம்மாதம் 15ம் திகதி இடம்பெற்றது. கொமர்ஷல் வங்கியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக இது அமைந்திருந்தது. மூன்று மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடம் மரப்பலகைகளினால் ஆன மாடிகளைக் கொண்டுள்ளது. அதுபோலவே அதன் யன்னல்கள் கதவுகள் என்பனவும் அந்தக் காலத்து கட்டிடக் கலையின் பிரம்மாண்டத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன. இங்கு தான் வங்கியின் தென் பிராந்திய அலுவலகமும் அமைந்துள்ளது. ஒரு சிறிய கேற்போர் கூடம் வங்கியில் உள்ள வரலாற்றுப் பொருள்களை உள்ளடக்கிய ஒரு சிறிய நூதனசாலை ஊழியர்களுக்கான விடுமுறை பங்களா என்பனவும் இங்கு அமையப் பெற்றுள்ளன.

கொமர்ஷல் வங்கியின் சொந்த வரலாறு 1920ல் தொடங்குகின்றது. அப்போது தான் வங்கியின் முந்திய கட்ட ஈஸ்டர்ன் பேங்க் அன்றைய இலங்கையில் அல்லது சிலோனில் ஸ்தாபிக்கப்பட்டது. 1969ல் தான் இன்றைய கொமர்ஷல் வங்கி ஒருங்கிணைக்கப்பட்டது.

வங்கியின் நூற்றாண்டு விழா நாட்டின் பிரதான நான்கு சமயங்களையும் நினைவு கூறும் வகையில் சமய அனுஷ்டானங்களோடு இடம்பெற்றது. இவ்வாண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் நாட்டின் சகல பகுதிகளையும் சேர்ந்த 4000 ஊழியர்களை ஒன்றிணைக்கும் வகையிலான நிகழ்வுகள் இடம்பெற்றன. இதனை முன்னிட்டு விஞ்ஞானம் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களில் நவீன கற்றல் அனுபவத்தை வழங்கக் கூடிய 100 STEM வகுப்புக்களை குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு ஸ்தாபித்துக் கொடுப்பதற்கான பொறுப்பினையும் வங்கி இக் காலப்பகுதியில் ஏற்றுள்ளது. அதேபோல் 100 ஹெக்டெயர் காணியில் மீள காடு வளர்ப்பிற்கான பொறுப்பையும் வங்கி ஏற்றுள்ளது.