ஒரு தசாப்த காலப் பூர்த்தியை கொண்டாடும் Rakuten Viber

உலகின் முன்னணி தொடர்பாடல் appகளில் ஒன்றான Rakuten Viber, இலங்கையர்களின் வாழ்க்கையை வளமூட்டுவதில் அர்த்தமுள்ள தொடர்பாடல் சேவைகளை வழங்குவதில் ஒரு தசாப்த காலப் பூர்த்தியைக் கொண்டாடுகின்றது. 2010 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட Viber, தொடர்பாடலுக்கு மாற்று ஊடகமாக திகழ்வதை இலக்காகக் கொண்டிருந்தது. குறிப்பாக மொபைல் பாவனையாளர்களுக்கு இலவசமாக சர்வதேச அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதை நோக்காகக் கொண்டிருந்தது. கடந்த தசாப்த காலப்பகுதியில், Viber தனது இலவச, ஈடுபாட்டுடன் கூடிய மற்றும் பாதுகாப்பான தகவல் பரிமாற்ற ஊடகமாக திகழ்வதன் காரணமாக இலங்கையில் மிகவும் பிரபல்யம் பெற்றுள்ளது. மக்களுக்கு தாம் விரும்பிய வழியில் எவருடனும் இணைப்பை ஏற்படுத்தக்கூடிய வசதியை வழங்குவதாக அமைந்துள்ளது.

2014 ஆம் ஆண்டில், Rakuten Inc.இன் அங்கத்துவத்தை Viber பெற்றுக் கொண்டது. e- வணிகம் மற்றும் நிதிச் சேவைகளை வழங்குவதில் உலகின் முன்னோடியாகவும் திகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டில், ‘communities’ அறிமுகம் செய்யப்பட்டிருந்தமையானது, நிறுவனத்துக்கு பாரிய மைல்கல் சாதனையாக அமைந்திருந்தது. adminகளுக்கு supergroup chatகளை உருவாக்கி வரையறைகளற்ற நபர்களை அதில் உள்ளடக்கும் வசதியை வழங்கியிருந்தது. அதனைத் தொடர்ந்து வந்த ஆண்டில், group voice calls உள்ளம்சமும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இன்று வரையில் Rakuten Viber பாரியளவு வளர்ச்சியடைந்து, துறையில் புரட்சியை ஏற்படுத்தி, பரிபூரண தொடர்பாடல் கட்டமைப்பாக திகழ்வதுடன், தகவல்கள், group chats, audio மற்றும் video calls, communities மற்றும் chatbots போன்ற வசதிகளை வழங்கி, பாவனையாளர்களுக்கு தனிப்பட்டதன்மை எனும் உறுதி மொழியைப் பேணி வருகின்றது.

Rakuten Viber இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜமெல் அகவுவா கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த 10 வருட காலங்களில் Viber இன் பயணம் என்பது, உலகின் மில்லியன் கணக்கான மக்களின் ஆதரவு மற்றும் நம்பிக்கை என்பதில் பெருமளவு தங்கியிருந்தது. அவர்களின் பிரத்தியேக தொடர்பாடல்களின் போது, அவர்களுடன் நாம் இணைந்திருந்ததுடன், அவர்களின் ஆதரவுடன் இன்று எம்மால் இந்நிலைக்கு வளர்ச்சியடைய முடிந்தது. பாவனையாளர்களுக்கு நாம் வழங்கும் உறுதிமொழி என்பதுடன், எப்போதும் அவர்களுக்கு இலவசமாகவும் பாதுகாப்பாகவும் உலகின் எந்தப் பகுதியுடனும் இணைந்திருக்கும் வழியை ஏற்படுத்திக் கொடுப்பது என்பதுமாகும். எமது வாழ்க்கையில் தொழில்நுட்பம் அதிகளவு ஆக்கிரமித்து வரும் நிலையில், தகவல் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமைந்துள்ளது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த விடயம் தொடர்பில் Viber ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர். உங்களில் பலருக்கு அவர்கள் அநாமநேயமானவர்களாக அமைந்துள்ளனர். ஆனாலும், அவர்கள் சிறந்த அணியினராக அமைந்துள்ளனர்.” என்றார்.

மேலும், Viber இன் செயற்பாடுகள் படிப்படியாக நிதித் தொழில்நுட்பத்துக்கும் மாற்றமடைந்த வண்ணமுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இலங்கையில் Viber பெருமளவு வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2020 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் தினசரி செயற்படுத்தல்கள் 39% அதிகரிப்பை பதிவு செய்திருந்தன. குழுநிலை தகவல்கள் அனுப்பலில் 34% அதிகரிப்பு பதிவாகியிருந்தது. மேலும் 1க்கு 1 தகவல் அனுப்புகை 37% இனால் அதிகரித்திருந்ததுடன், Community view என்பது 118% இனால் அதிகரித்திருந்தது.

இலங்கையின் முன்னணி நிறுவனங்களுடன் கைகோர்த்து செயலாற்றியிருந்தமை முக்கிய மைல்கல் சாதனைகளாக குறிப்பிட முடியும். பத்து வருட பூர்த்தியை முன்னிட்டு, Viber இலங்கையின் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் இணைந்துஈ சகல பாவனையாளர்களுக்கும் மீள வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்துகின்றது. wheel of fortune chatbot ஐ அழுத்தும் சகல பாவனையாளர்களுக்கும் Viber இடமிருந்து கூப்பன்கள், விசேட விலைக்கழிவுகள் மற்றும் வவுச்சர்கள் போன்றன வழங்கப்படுகின்றன. இதற்காக இணைந்துள்ள பங்காளர்களில் Fashion Bug இல் கொள்வனவுகளை மேற்கொள்ளும் போது ரூ. 500 விலைக்கழிவு, மொபிடெலிடமிருந்து 1 GB இலவச டேடா சலுகை, Kapruka – தெரிவு செய்யப்பட்ட பொருட்களின் மீது 20-30% விலைக்கழிவுகள், Ustore.lk இடமிருந்து ரூ. 50 – 10,000 பெறுமதியான பண வவுச்சர்கள் மற்றும் யுனிலீவர் தயாரிப்புகள் மீது 15-50% வரை விலைக்கழிவுகளையும் வழங்குகின்றது. மேலும் டொமினோசிடமிருந்து மூன்று இலவச கார்லிக் பிரெட் வழங்கப்படுகின்றது. Viber Wheel of Fortune chatbot இலிருந்து இந்த இனிய அன்பளிப்புகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். link ஐ பயன்படுத்தி wheel ஐ Spin செய்யவும்.