HNB குழுமம் முதல் அரையாண்டிற்காக 5.5 பில்லியன் ரூபா வரிக்கு பின்னரான இலாபத்தை ஈட்டியுள்ளது

HNB குழுமம் கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட எதிர்பாராத இடையூறுகளுக்கு மத்தியிலும் 2020 முதல் அரையாண்டிற்காக 2019 இதே காலப்பகுதிக்கு சமாந்திரமாக 6.8% அதிகரித்து 5.5 பில்லியன் ரூபா வரிக்கு பிந்தைய இலாபமாகவும் மற்றும் HNB கடந்த வருடம் இதே காலப்பகுதிக்கு சமாந்திரமாக 4.5 பில்லியன் ரூபாவினை பதிவு செய்து துறையில் வலிமை மிக்க நிதி அறிக்கையொன்றை வெளியிட முடிந்துள்ளது.

கொவிட்-19 தொற்றுநோயை கட்டுப்படுத்துகையில் இலங்கை காட்டிய செயல்திறன் விசேடமானதாககும். அதனால் ஏற்பட்ட சுகாதார ரீதியான இடையூறுகளை பெரும்பாலும் கட்டுப்படுத்த முடிந்த போதிலும் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார அழுத்தங்கள் பெரும் சவாலாகவே அமைந்துள்ளது. இவ்வாறான பொருளாதார சவால்களை எதிர்கொள்கையில் பொருளாதார நடவடிக்கைகளை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்காக நிதிக் கொள்கைகளை சிறந்த விதத்தில் தளர்த்தவும் கடன் தவணை தாழ்த்தல் போன்றவை மூலம் தொற்றுநோயினால் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக அரசாங்கத்தினால் தைரியமான நடவடிக்கையொன்று எடுக்கப்பட்டது. அதன் விளைவாக கொவிட்-19 தொற்றுநோய் உலகளாவிய ரீதியில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட விதத்துடன் நடுத்தர கால பொருளாதார மீட்புடன் இணைக்கப்படுகிறது. என இதுதொடர்பாக கருத்து தெரிவித்த HNB இன் தலைவர் தினேஷ் வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

குறைந்த வட்டி வீத அடிப்படையின் விளைவாக, பிரதான கடன் விகிதம் (AWPLR) டிசம்பர் 2019 முதல் 130 bps வரை குறைந்தமையாலும், முதல் அரையாண்டில் கடனுக்கான தேவையும் குறைந்து காணப்பட்டமையாலும் இது வட்டி வருமானத்தை பாதித்ததுள்ளது. இது கடந்த வருடத்தின் இதே காலப்பகுதிக்கு சமாந்திரமாக 8.8%ஆல் குறைவடைந்து 53.8 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்தது. வட்டி செலவினங்களும் 5.2% குறைந்து 31.4 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது. இது தேறிய வட்டி வருமானம் (NII) 13.3% குறைந்து 22.4 பில்லியனாக குறைந்துள்ளது.

தொற்றுநோயின் விளைவாக, அத்தியாவசியமற்ற இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகள் காரணமாகவும், ஏற்றுமதியில் ஒட்டுமொத்த வீழ்ச்சியினாலும் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களால் கடன் அட்டைகளின் பாவனைகள் குறைந்தமையினாலும் தேறிய கட்டண வருமானம் 22.2% குறைந்து 3.5 பில்லியனாக இருந்தது. எனினும், டிஜிட்டல் வங்கிச் சேவைகளுக்கான தேவை அதிகரித்ததால் டிஜிட்டல் சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரிக்க முடிந்தது.

கொவிட்-19 தொற்றுநோய் பரவும் அபாயத்துடன் இந்த புதிய நிலைமைக்கு ஏற்ற விதத்தில் எமது முன்னுரிமைகளை மீண்டும் சிந்தித்துப் பார்ப்பதற்கும் மற்றும் நடவடிக்கைகளை மீண்டும் திட்டமிடுவதற்கும் எமக்கு விரைவாக செயற்படுவதற்கும் ஏற்பட்டது. அதன்படி, எமது பிரதானமான கவனமானது எமது ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்காக உச்சளவு சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்தி வங்கியின் நிலைத் தன்மையுடன் நடத்திச் செல்லுதல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப பரிமாற்றத்தை நோக்கி நாம் செல்லும் பயணத்தை துரிதப்படுத்தி தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே எமது முக்கிய கவனமாகவுள்ளது.

கொவிட் lock down காலப்பகுதி முழுவதும் எமது SOLO, MoMo மற்றும் IPG டிஜிட்டல் கட்டணம் செலுத்தும் சேவைகள் ஊடாக வங்கியின் வாடிக்கையாளர்கள் மட்டுமன்றி வர்த்தகர்களுக்கும் எவ்வித இடையூறுகளும் இன்றி கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொடுத்தோம். அதேபோன்று, எமது மற்றுமொரு படிமுறையை முன்வைத்து 2020 மே மாதத்தில் அனைத்து வர்த்தக பிரிவினருக்கும் இலகுவாக மற்றும் விரைவாக தொடர்ச்சியாக e-commerce திறன்களை நிறுவ இயலுமையுள்ள AppiGo எனும் புரட்சிகரமான இணையத்தள பொருட்கள் மற்றும் சேவைகள் விற்பனை தளமொன்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. மேலும், இலகுவாக மற்றும் வேகமாக நிர்வகிக்கக் கூடிய எமது புதிய கட்டணம் செலுத்தும் Appஆன HNB SOLO மேலதிக அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன் ஆகஸ்ட் மாதத்தில், எமது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உயர்ந்த வங்கிச் சேவை அனுபவத்தை பெற்றுக் கொடுக்கக் கூடிய வகையில் எமது பிரதான வங்கிக் கட்டமைப்பு Finacle இன் புதிய வடிவத்தில் புதுப்பிப்பதற்கு எமக்கு முடிந்தது. என HNBஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனதன் அலஸ் தெரிவித்துள்ளார்.

மொத்த கடன்கள் 2019 டிசெம்பர் முதல் 772.5 பில்லியனாகவே தொடர்ந்தும் காணப்பட்டது. ஆண்டின் முன்னோடியில்லாத சூழ்நிலைகள் இருந்தபோதிலும், HNB இன் மொத்த வைப்புக்கள் 55.3 பில்லியன் ரூபாவால் அதிகரித்து 865.3 பில்லியனாக அதிகரித்துள்ளன, அதேநேரத்தில் குறைந்த விலை வைப்புக்கள் அடிப்படையில் 34.4 பில்லியன் ரூபாவாக அதிகரித்து 2020 இன் முதல் அரையாண்டின் போது 319.1 பில்லியனாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2020 முதல் காலாண்டிற்குள் வங்கியின் ஒட்டுமொத்த சொத்துக்களின் அளவு 4% ஆல் அதிகரித்து 1.17 டிர்லியன் ரூபாவாக இருந்ததுடன் Tier 1 மூலதன தேவையின் விகிதமானது 15.25% ஆகவும் மற்றும் ஒட்டுமொத்த மூலதன தேவையின் விகிதமானது 19.07% உடன் துறையின் சிறந்த மூலதன வங்கிகளுக்குள் HNB நிலைத்திருக்கிறது.

HNB குழுமம் 2020 முதல் காலாண்டிற்காக 5.5 பில்லியன் ரூபா வரிக்கு பின்னரான இலாபம் ஈட்டியுள்ளது. குழுமத்தின் இலாபம் 2019 இது காலத்திற்கு சமாந்திரமாக 6.8%ஆல் அதிகரித்தமைக்கு காரணமாக அமைந்தது Acuity Partners நிறுவனத்தின் முதலீட்டு வங்கியின் பிரதான விநியோக பிரிவு மற்றும் HNB Assurance நிறுவனத்தின் பலமான செயற்பாடுகளாகும்.