கொமர்ஷல் வங்கி உணவில் தன்னிறைவை நோக்கி இலங்கையை முன்னேற்றும் இலங்கை இராணுவத்தின் துரு மித்துரு செயற்றிட்டத்தோடு இணைந்தது

அத்தியாவசிய உணவுத் தேவையில் இலங்கையைத் தன்னிறைவு அடைந்த நாடாக மாற்றும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள துரு மித்துரு நவ றட்டக் (Thuru Mithuru Nawa Ratak) முன்னெடுப்பின் இரண்டாவது கட்டத்துக்கு நிதியளிப்பதற்காக இலங்கை இராணுவத்துடன் பங்குடைமை ஒன்றை கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது.

இச்செயற்றிட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் 150 விவசாயக் குடும்பங்களைப் பயன்படுத்தி 125 ஏக்கர் நிலத்தில் நாட்டின் தேவையைக் கருத்திற்கொண்டு பல்வேறான பயிர்களைப் பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தின் நெருங்கிய மேற்பார்வையின் கீழ் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவையான வசதிகளையும் திறன்களையும் இலங்கை இராணுவம் வழங்கவுள்ளதோடு செயற்றிறன் மிக்க பயிர்ச்செய்கை தொடர்பான அறிவை இக்குடும்பங்களுக்கு வழங்கி அவர்களது காணியில் பயிரிட்டு நாட்டின் உள்நாட்டு விவசாயப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஊக்குவிப்பை வழங்கும்.

கொமர்ஷல் வங்கியின் கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பு நிதியத்தால் அன்பளிக்கப்பட்டுள்ள நிதியானது கை உழவு இயந்திரங்கள் சிறு உழுகருவிகள் (mini cultivators) சிறிய சுழல் பொடிப்பிகள் (mini rotary slashers) தூர்வாரும் கருவியொன்று (tine tiller) உள்ளிட்ட விவசாயக் இயந்திரங்களையும் கருவிகளையும்ரூபவ் 1000 லீற்றர் தண்ணீர்த் தாங்கிகள் ஒன்பது தண்ணீர்ப் பம்பிகள் போன்ற நீர்ப்பாசன வசதிகளையும் 620 கிலோ கிராம் கரட் அவரை சோள விதைகளையும் கொள்வனவு செய்யப் பயன்படுத்தப்படும்.

இம்முன்னெடுப்பில் வங்கியின் பங்குபற்றல் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. எஸ். ரெங்கநாதன் வங்கியின் விவசாய – நுண் நிதி அலகுகள் மூலமாக விவசாயத் துறையிலுள்ள நுண் சிறிய – நடுத்தரத் தொழில்முயற்சிகளுக்கான மிகப்பெரிய ஆதரவாளர்களில் ஒன்றாக கொமர்ஷல் வங்கி இதுவரை இருந்து வந்திருக்கிறது. இலங்கையின் கிராமியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயத்துறை இருக்கிறது என்பதை நாம் நம்புவதன் காரணமாகவே நாம் இப்பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறோம். இலங்கை இராணுவத்தின் மேன்மையான இம்முன்னெடுப்புக்கு நிதியளிப்பதன் மூலமாக இலங்கையை உணவுப் பாதுகாப்பு உணவில் தன்னிறைவு ஆகியவற்றை நோக்கி அழைத்துச்செல்லும் திட்டத்தின் ஓர் அங்கமாக நாம் மாறியிருக்கிறோம். இந்நாட்டுக்கான எமது எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்றதாக இது அமைந்திருக்கிறது என்று குறிப்பிட்டார்.

துரு மித்துரு நவ றட்டக் என்பது பாதுகாப்புப் பணியாட் தொகுதியின் பிரதானியும் இலங்கை இராணுவத் தளபதியுமான லெப்டினன் கேணல் ஷவேந்திர சில்வா அவர்களால் முன்னெடுக்கப்பட்ட பாரியளவிலான நிகழ்ச்சித் திட்டமாகும். இலங்கை இராணுவப் பணியாட் தொகுதிப் பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் எஸ். குணவர்தனாவால் இத்திட்டம் தலைமை தாங்கப்படுகிறது. நாட்டிலுள்ள இராணுவத் தளங்களின் உதவியோடு விவசாய நிலங்களைப் புத்தெழுச்சி பெறச் செய்வதற்காக விதைகளையும் தாவரங்களையும் விநியோகித்து உள்நாட்டு விவசாயத்தை ஊக்குவிப்பதற்கு இத்திட்டம் எதிர்பார்க்கிறது.

மூன்று கட்டங்களாக இத்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. முதலாவது கட்டமாக இராணுவ முகாம்களுக்குள் காணப்படுகின்ற 1500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் இலங்கை இராணுவம் பயிரிடுவது அமைந்திருந்தது. வங்கியால் ஆதரவளிக்கப்படும் இரண்டாவது கட்டம் பூர்த்தியடைந்த பின்னர் மூன்றாவது கட்டத்தில் பயிர்ச்செய்கையை மேலும் விரிவுபடுத்துவதற்காக நாடு முழுவதிலும் காணப்படும் அரச நிலங்களை இலங்கை இராணுவம் கொள்வனவு செய்யும்.

பாடசாலையை விட்டு விலகியோருக்கான தகவல் தொழில்நுட்ப அறிவு இணையக் கல்வி தொழிற்பயிற்சி, மருத்துவமனைகளுக்கான அத்தியாவசியக் கருவிகளை அன்பளித்தல், வரலாற்று, கலாசார, அல்லது சமய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைப் பாதுகாத்தலுக்கும் மறுசீரமைத்தலுக்கும் உதவுதல்ளூ சூழல் காப்பை ஊக்குவித்தல்ளூ சமுதாயங்களுக்குத் தேவையான நேரங்களில் உதவுதல் உள்ளிட்ட சமுதாய முன்னெடுப்புகளை மேற்கொள்ளும், பல்வகையிலான, விரிவான செயற்பாடுகளை, கொமர்ஷல் வங்கியின் கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பு நிதியம் மேற்கொண்டு வருகிறது.

உலகின் ஆயிரம் தலைசிறந்த வங்கிகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையின் ஒரே வங்கியான கொமர்ஷல் வங்கி தொடர்ந்து பத்து வருடங்களாக அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இவ்வாண்டு வங்கி அதன் 100 வது அண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. 2019ல் 50க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளுர் விருதுகளை வென்றுள்ள கொமர்ஷல் வங்கி இலங்கையில் 268 கிளைகளுடனும் 873 ATM வலையமைப்புடனும் செயற்படுகின்றது.

கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பங்களாதேஷில் 19 கிளைகளைக் கொண்டதாகவும் மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும் நேய்பியுடோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது.