பேருவளை கடற்கரையை பாதுகாக்க சினமன் பே பேருவளை பிளாஸ்டிசைக்கிள், மற்றும் MEPA

சினமன் பே பேருவளை கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (MEPA) மற்றும் பிளாஸ்டி சைக்கிள்- ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சமூக தொழில் முயற்சி திட்டத்துடன் MEPA வின் பீச் கேயார் டேக்கர் திட்டத்தில் நவம்பர் மாதம், 27ம் திகதி இணைந்துகொண்டது. ரிசார்ட்டை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியை பாதுகாக்கவும் பராமரிக்கவும் இந்த கூட்டு உறுதியளித்தது.

இலங்கையின் கடற்கரையோரம் கடல் பல்லுயிர்களால் நிறைந்துள்ளது. இதில் கவர்ச்சியான மீன் இனங்கள் மற்றும் கடல் ஆமைகள் போன்ற கடல் பாலூட்டிகள் உள்ளடங்கும். ஆவை. இனப்பெருக்கத்திற்காக கடற்கரைகளை சார்ந்துள்ளன. இருப்பினும், இந்த தனித்துவமான சூழல்களும் வாழ்விடங்களும் சுற்றுலா நடவடிக்கைகள் மற்றும் விடுமுறைக்கு செல்பவர்களின் செயல்கள் ஆகியவற்றால் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளால் பெரும் சவாலினை எதிர்நோக்குகின்றனர்.

ஜனவரி 2020ல், பிளாஸ்டிசைக்கிள் மற்றும் சினமன் ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்கள் பீச் கேயார் டேக்கர் திட்டத்தின் முதல் கட்டத்தினை ஹிக்கடுவையிலுள்ள ஹிக்கா டிரான்ஸ் பை சினமனில் ஆரம்பித்தனர்.

கடற்கரையை பாதுகாப்பதற்கான தொடர்ச்சியான நீண்டகால நடவடிக்கைகளின் மூலம் அறிவை பரிமாற்றல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் நிலையான சுற்றுலா துறையொன்றை மேம்படுத்துதல் ஆகியவை திட்டத்தின் நோக்கங்களாகும். இதற்காக கைடட் ஸ்நோர்க்லிங் போன்ற இளைஞர் திட்டங்களை உருவாக்குதல், சுற்றுச்சூழலுக்கு குறைந்தபட்ச தீங்கு விளைவிக்கும் வகையில் நிலையான மற்றும் தொழில்முறை வணிகத்தை உருவாக்குவதற்கான சமூக விழிப்புணர்வு திட்டங்களை கட்டியெழுப்புதல், மற்றும் சுற்றுலா பார்வையாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

கையெழுத்திடும் விழாவில் பேசிய நகர்ப்புற மேம்பாடு, கடலோர பாதுகாப்பு, கழிவுகளை அகற்றுதல் மற்றும் பொது சுகாதாரம் துறை அமைச்சர், கலாநிதி நாளக கோடஹேவா, பொது மற்றும் தனியார் துறைகள் MEPA உடன் கைகோர்த்துக் கொள்வதன் மூலம், கடற்கரையை பாதுகாக்கும் பொதுவான குறிக்கோளை அடைய முடியும் என்றும் இது சமூகத்திற்கு ஒரு சிறந்த சேவையாக அமையும் எனவும் அவர் கூறினார்.

சினமன் பேயில் பணிபுரியும் தன்னார்வலர்களால் தவறாமல் நடத்தப்படும் கடற்கரை துப்புரவுகளுக்கு மேலதிகமாக, கடற்கரைக்குச் செல்வோர் அனைவரும் தங்கள் பிளாஸ்டிக் கழிவுகளை பொறுப்புடன் அப்புறப்படுத்துவதனை ஊக்குவிப்பதற்காக தொடர்ச்சியான பிரத்யேக பிளாஸ்டிக் கழிவு சேகரிப்புத் தொட்டிகளும் ரிசார்ட்டுக்கு அருகாமையில் வைக்கப்படும்.

சினமன் பேயின் பொது மேலாளர் திரு. மைக். எம். ஜவாட், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சுற்றுச்சூழல் மற்றும் அதன் பாதுகாப்பிற்கான இலட்சியமிக்க மற்றும் உறுதியான அர்ப்பணிப்பு, மற்றும் MEPA வழங்கும் கூட்டு ஆதரவும் கடற்கரை மற்றும் திட்டுகள் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான சினமன் பேயின் துணிச்சலான இலக்கை உறுதிப்படுத்துகிறது. நச்சுத்தன்மையற்ற கடல் வாழ்வை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், கடலின் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்தவும் நாங்கள் முயற்சிகளை செய்கிறோம்.

பிளாஸ்டிசைக்கிள் கொழும்பு பங்கு பரிமாற்றத்தில் இலங்கையின் பெரியளவிலான நிறுவனமாக பட்டியலிடப்பட்ட கூட்டு நிறுவனமான ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி (ஜே.கே.எச்) இன் சமூக தொழில் முயற்சி திட்டமாகும். 7 வகையான பரந்துபட்ட தொழில் துறைகளில் 70 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களை நடாத்தும் ஜான் கீல்ஸ் குழு, 2020 ஆம் ஆண்டில் வணிகத்தில் காலடி வைத்து மற்றும் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கு பங்களித்த 150 ஆண்டுகளைக் கொண்டாடுகிறது. 14,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிப்பதோடு ஜான் கீல்ஸ் குழுமம் எல்.எம்.டி இதழால் கடந்த 14 ஆண்டுகளாக இலங்கையின் மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனம் என்று பெயர் பெற்றுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் முழுமையான அங்கத்தவராக இருக்கும் அதே வேளை ஐ. நா குளோபல் கொம்பக்டின் அங்கத்துவத்தையும் கொண்ட ஜே. கே. எச் ஆனது ஜோன் கீல்ஸ் ஃபவூண்டேஷன் ஊடாக எதிர்காலத்திற்கான நாட்டினை கட்டியெழுப்புதல் நோக்கினை நோக்கி பயணிக்கின்றதுடன் இலங்கையில் பிளாஸ்டிக் மாசினை குறைக்க ஒரு ஊக்கியாக பிளாஸ்டிசைக்கிள் ஊடாக செயற்படுகின்றது.