UK இன் BSc (Hons) Artificial Intelligence and Data Science பட்டப்படிப்பினை அறிமுகம் செய்துள்ள IIT

இலங்கையில் பிரித்தானிய உயர் கல்வியை வழங்குவதில் முன்னோடியாகவும், நாட்டிலுள்ள முதன்மையான தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறை பல்கலைக்கழகமாகவும் திகழும் Informatics Institute of Technology (IIT), Robert Gordon University (RGU) – UK இனால் வழங்கப்படும் இலங்கையின் முதல் BSc (Hons) Artificial Intelligence and Data Science பட்டப்படிப்பினை அண்மையில் நடைபெற்ற ஒன்லைன் நிகழ்வின் ஊடாக அறிமுகப்படுத்தியிருந்தது.

மிகவும் விளக்கமான இந்த ஒன்லைன் மன்றத்தில் கலாநிதி. ஜோன் ஐசாக்ஸ் – தலைவர், School of Robert Gordon University – UK , பேராசிரியர். நிர்மலி வீரதுங்க – பேராசிரியர், Intelligent Systems Research of Robert Gordon University – UK , ஷிவான் குணதிலக்க – தலைவர் மற்றும் பொதுமுகாமையாளர், Integration Business of WSO2, IIT இன்வேந்தர் நயோமி கிரிஷ்ணராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த மன்றத்தின் மட்டுறுத்துனராக கலாநிதி. தமித்த கருணாரத்ன – தலைவர், Department Computing of IIT செயற்பட்டிருந்தார்.

IIT’s BSc (Hons) Artificial Intelligence and Data Science கற்கைநெறியானது செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு விஞ்ஞானம் (AI மற்றும் DS) ஆகியவற்றில் திறன்களைக் கொண்ட ICT நிபுணர்களுக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், AI மற்றும் DS துறைகளில் நன்கு வெகுமதியளிக்கும் தொழிலில் இணைய விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்பை வழங்குகிறது. தற்கால AI மற்றும் DS இன் போக்குகள் மற்றும் நவீன தீர்வுகளை அபிவிருத்தி செய்வது தொடர்பான தொழில்நுட்பங்களைப் பற்றிய நடைமுறை புரிதலை மாணவர்கள் இதனூடாக பெறமுடியும். இந்த 4 ஆண்டு முழு நேர பட்டப்படிப்பானது ஒரு முறையான அணுகுமுறையை பின்பற்றுவதுடன், இதில் மாணவர் ஒவ்வொரு ஆண்டாக முன்னேறுகின்ற நிலையில் அலகுகள் பொதுவானவை முதல் குறிப்பிட்டவை வரை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் Systems, Mathematics, Programming மற்றும் AI மற்றும் DS போன்ற முக்கிய பிரிவுகளின் கீழ் பல வகையான அலகுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. பின்னர், மாணவர்கள் கட்டம் 1 இலிருந்து 4 இன் ஊடாக முன்னேறுகின்ற நிலையில் அவர்கள் படிப்படியாக AI மற்றும் DS அலகுகளில் நிபுணத்துவம் பெறுகின்றனர்.

இவை Programming, Database, Web, IoT, Algorithms, Deep Learning, Machine Learning, Machine Vision, Mathematics மற்றும் Statistics ஆகிய அலகுகளை உள்ளடக்குவதுடன், மாணவர்கள் கருத்தியல் கோட்பாடுகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆகிய இரண்டிலும் அறிவினைப் பெற்றுக்கொள்வர். இது automation, analytics மற்றும் AI ஆகியவற்றின் ஆற்றலைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பளிப்பதுடன், கற்கைநெறியை பின்பற்றும் போதும், பட்டப்படிப்பின் பின்னர் புத்தாக்கத்துக்கும் வழி வகுக்கும். அனைத்து IIT பட்டங்களையும் போல, 3 ஆம் ஆண்டில் கட்டாய 12 மாத தொழில்துறை வாய்ப்பும் இதில் அடங்குவதுடன், இது மாணவர்களுக்கு மேலதிக செயல்முறை சார்ந்த திறன்களையும், தொழிற் சந்தையில் மேலதிக நன்மையையும் வழங்கும். Data/Enterprise Architect, Application Architect, Data Scientist, Machine Learning Scientist/Engineer, Data Analyst, Data Science Consultant, Business Intelligence Engineer, Big Data Engineer/Application Developer மற்றும் Software Engineer என்பன AI மற்றும் DS ஆகியவற்றுடன் இணைந்த தொழில் வாய்ப்புகளில் சிலவாகும்.

IIT இன் வேந்தர் நயோமி கிரிஷ்ணராஜா, ஒன்லைன் பார்வையாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில், IIT ஸ்கொட்லாந்தின் Robert Gordon University (RGU) உடன் இணைந்து இன்று BSc (Hons) Artificial Intelligence and Data Science பட்டப்படிப்பினை அறிமுகப்படுத்துகின்றமையானது மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது. உள்நாட்டிலும், பிராந்திய ரீதியாகவும், சர்வதேச அளவிலும் தொழில்துறையினரால் AI மற்றும் Data Science நிபுணர்களின் வளர்ந்து வரும் தேவையானது இந்த பட்டத்தை நாம் தொடங்குவதற்கான முக்கிய காரணமாகும். IIT அதன் இளங்கலை ICT பட்டங்களுடன் மிகவும் வெற்றிகரமாக உள்ளதுடன், இந்தப் பட்டப்படிப்பு அதன் வளர்ந்து வரும் கற்கைநெறி வரிசையுடன் மேலதிகமாக இணைந்துள்ளது. IIT, 2016 முதல்RGU உடன் ஒரு வலுவான பங்காண்மையை உருவாக்கியுள்ளதுடன், MSc Big Data Analytics மற்றும் MSc Business Analytics ஆகிய கற்கைநெறிகளை வழங்கி வருகின்றது. இவை தொழில்துறையில் பணிபுரியும் பட்டதாரிகளால் அதிகம் விரும்பப்படுபவையாகும். இப் பட்டப்படிப்பானது பல்வேறு பிரிவுகளை (programming, systems மற்றும் artificial intelligence மற்றும் data science) உள்ளடக்குவதுடன் AI மற்றும் Data Science இல் சிறப்புத் தேர்ச்சியை நோக்கி படிப்படியாக நகர்கின்றது. ICT தொழிற்துறையுடனான IIT யின் வலுவான உறவு, துறைக்கு முன்கூட்டியே தேவைப்படும் திறன்களை அடையாளம் காணவும், அந்த பிரிவுகளில் மாணவர்கள் உலகத் தரம் வாய்ந்த தகுதிகளைப் பெறுவதற்கான பாதையை வழங்கவும் உதவுகிறது,” என்றார்.

இப் பல்கலைக்கழகத்திற்கு ஒரு அறிமுகத்தை வழங்கிய, ​​ Robert Gordon University – UK இன் தலைவர் கலாநிதி. ஜோன் ஐசாக்ஸ், “கற்பித்தல் மேன்மை கட்டமைப்பின் (TEF) மதிப்பாய்வில் RGUக்கு மிக உயர்ந்த மதிப்பீடான தங்க மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இது ஐக்கிய இராச்சியத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் சமர்ப்பிக்கும் ஒரு கட்டமைப்பாகும். சிறந்த கற்பித்தல், கற்றல் மற்றும் அதன் மாணவர்களுக்கான பிரதிபலன்களை தொடர்ந்து வழங்குவதை இது பிரதிபலிக்கிறது. இதன் இளங்கலை கற்பித்தல் மற்றும் கற்றலின் தரத்திற்காக ஐக்கிய இராச்சியத்தின் சிறந்த பல்கலைக்கழகங்களில் முதல் 20% இற்குள் பெயரிடப்பட்டுள்ளது. தேசிய மாணவர் மதிப்பீட்டு (NSS) முடிவுகளில் ஒட்டுமொத்த மாணவர் திருப்திக்காக RGU ஸ்காட்லாந்தில் 2 ஆவது இடத்தையும், ஐக்கிய இராச்சியத்தில் 2 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது, என்றார்.

இது தொடர்பில் தனது கருத்தினை வெளியிட்ட பேராசிரியர் நிர்மலி வீரதுங்க – ‘’ஸ்கொட்லாந்தின் RGU மற்றும் இலங்கையின் IIT ஆகியவற்றுடன் இணைந்து BSc (hons) Artificial Intelligence மற்றும் Data Science இனை வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். IIT வழங்கும் இக் கற்கைநெறியை நாங்கள் இணைந்து வடிவமைத்துள்ளோம். RGU தரத்தை உறுதி செய்வதோடு பட்டத்தினை வழங்குகின்றது. உடல்நலம், வாழ்க்கை விஞ்ஞானம், எரிசக்தி, நிதிச் சேவைகள், ஒட்டோமோடிவ், உற்பத்தி மற்றும் பொழுதுபோக்கு போன்ற தொழில்கள் அனைத்தும் தரவுகளிலிருந்து நன்மையடைகின்றன. தொழில்நுட்ப ஜாம்பவான்களான பேஸ்புக், கூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் போன்றன அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் தங்கள் ஆழமான கற்றல் தளங்களைத் திறக்கின்றன. தொழில்துறையின் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான அலகுகளுடன் நாம் இந்த பட்டப்படிப்பினை வடிவமைத்துள்ளோம். சுய-ஓட்டுநர் கார்கள், உங்கள் சார்பாக முன்பதிவு செய்யக்கூடிய தனிப்பட்ட உதவியாளர்கள் அல்லது ஸ்மார்ட் வீடுகளை நிர்வகிக்கக்கூடிய IoT சென்சிங் தளங்கள், தானியங்கி மொழி மொழிபெயர்ப்பு அல்லது மொபைல் சாதனங்களில் வீடியோ தலைப்பு இடும் முன்னணி அப்ளிகேஷன்கள் அனைத்தும் AI மற்றும் data science தொழில்நுட்பங்களை சார்ந்துள்ளன. இந்த பட்டப்படிப்பானது AI மற்றும் Data Science பின்னால் உள்ள தொழில்நுட்பங்களைப் பற்றிய வலுவான கருத்தியல் புரிதலை அளிப்பதுடன், வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான அணுகல் மற்றும் பொருத்தத்தை விரிவுபடுத்துவதுடன், தொழில்முறை வாழ்க்கையில் வளர்ச்சியையும் வழங்குகின்றது, என்றார்.

WSO2 இன் Integration Business இன் தலைவரும், பொது முகாமையாளருமான ஷிவான் குணதிலக்க கருத்து தெரிவிக்கையில், “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் முன்னேற்றங்கள் உலகளவில் அனைத்து தொழில்களிலும் நாங்கள் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதை மாற்றியமைத்து, மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. AI மற்றும் Data Science கற்கைநெறியானது IIT இனால் மிக சரியான நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கைத் தொழிற்துறைகளை மேம்படுத்துவதற்கும், உலகளாவிய ரீதியில் இவற்றை மேம்படுத்துவதற்கான நிபுணத்துவத்தை வழங்குவதற்கும் செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை கட்டமைக்க நாட்டின் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இது மிகவும் தேவையான திறன்களையும் அறிவையும் வழங்குகின்றது, எனக் குறிப்பிட்டார்.

1990 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட IIT ஆனது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவம் ஆகிய துறைகளில் சர்வதேச அங்கீகாரமுடைய பிரித்தானிய பட்டப்படிப்புகளை வழங்கும் இலங்கையின் முதலாவது தனியார் உயர்கல்வி நிறுவனம் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் University of Westminster மற்றும் Robert Gordon ஆகிய பல்கலைக்கழகங்களின் உள்வாரியான பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு கற்கைநெறிகளை வழங்கும் விருது பெற்ற கல்வி நிறுவனமாக IIT திகழ்கிறது. IIT ஆனது, உலகத் தரம் வாய்ந்த பட்டதாரிகளை உருவாக்குவதன் வாயிலாக இலங்கையின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவம் ஆகிய துறைகளை வலுப்படுத்துவதில் முக்கிய இடத்தை வகிக்கின்றது. 1990 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, IIT 5,000 இற்கும் அதிகமான பட்டதாரிகளை உருவாக்கியுள்ளதுடன், தற்போது 25 நாடுகளை தளமாகக் கொண்டுள்ளது.

இந்த பட்டதாரிகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச பெருநிறுவனங்கள் மற்றும் அரச தாபனங்களில் தகவல் தொழில்நுட்பம் அல்லது முகாமைத்துவ துறையிலான வல்லுனர்களாகத் திகழ்வதுடன், 250 பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் புளுசிப் கம்பனிகளில் உயர் பதவிகளை அலங்கரிப்பதன் வாயிலாக குறித்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பினை வழங்கி வருகின்றனர்.