Decathlon கொழும்பின் மிகப்பாரிய விளையாட்டுப் பொருட்கள் காட்சியறையை தற்போது யூனியன் பிளேஸில் திறந்து வைத்துள்ளது

உலகின் மிகப்பாரிய விளையாட்டுப் பொருட்கள் சில்லறை விற்பனையாளரான Decathlon சமீபத்தில் கொழும்பு நகரத்தின் மையத்தில் தனது 2 ஆவது மிகப் பாரிய விளையாட்டுப் பொருட்கள் காட்சியறையைத் திறந்து வைத்துள்ளமையை கொண்டாடியுள்ளதுடன் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவதற்கு மக்களை ஊக்குவிப்பதற்கான தனது அர்ப்பணிப்பைத் தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுத்து வருகிறது. இப்புதிய கிளை 500 சதுர மீட்டர் பரப்பளவில் விசாலமான உயர்தர உற்பத்தி வரிசையை வழங்குவதுடன் இலக்கம் 323 யூனியன் பிளேஸ் கொழும்பு 02 என்ற முகவரியில் இக்காட்சியறை அமைந்துள்ளது.

விளையாட்டு மீதான தனது பேரார்வத்தை வெளிப்படுத்தும் வகையில் தனித்துவமான ஒரு விளையாட்டு காட்சியறை எண்ணக்கருவை Decathlon வழங்குவதுடன் இது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அவர்களின் தேவைக்கேற்ற பிரத்தியேகமான சேவையுடன் ஒரே கூரையின் கீழ் 50 இற்கும் மேற்பட்ட விளையாட்டுகளுக்கான பொருட்களையும் உபகரணங்களையும் வழங்குகிறது. ஆரம்ப நிலை முதல் மேல் நிலை வரை அனைத்து நிலை விளையாட்டு ஆர்வலர்களுக்கும் தேவையானவற்றை இக்காட்சியறை வழங்குவதுடன் ஆண்டில் 365 நாட்களும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வியாபார நடவடிக்கைகளுக்காக இது திறந்திருக்கும்.

இந்த விஸ்தரிப்பு நடவடிக்கை குறித்து Decathlon Sri Lanka வின் இலங்கைக்கான முகாமையாளரான மெலிஸ் குர்டில்மாஸ் கூறுகையில், “Decathlon ஏற்கனவே இலங்கையில் ஒரு தசாப்த கால அடிச்சுவட்டைக் கொண்டுள்ளதுடன் தனது முக்கிய உற்பத்தி தொழிற்சாலைகளில் ஒன்றையும் இங்கே தளமாகக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் 18 தொழிற்சாலைகளில் 15 வழங்குனர்கள் உட்பட 20,000 ஊழியர்களை Decathlon கொண்டுள்ளது. இந்நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் உலகளவில் 2000 இற்கும் மேற்பட்ட கொள்கலன்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த விஸ்தரிப்பு நடவடிக்கை அனைத்து இலங்கையர்களுக்கும் கட்டுபடியான ஆனால் பெறுமதிமிக்க விளையாட்டு அனுபவத்தை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மேலும் காண்பிக்கிறது. இலங்கையின் அனைத்து பாகங்களையும் எட்டும் முயற்சியை நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம். ஆரம்பத்தில் கொழும்பு மற்றும் அதன் புறநகரப் பகுதிகளை மையமாகக் கொண்டு Decathlon ஐ முன்பை விட உங்களுக்கு நெருக்கமாக கொண்டு வருகிறோம் ´ என்று குறிப்பிட்டார்.

அனைவரும் விளையாட்டை அனுபவிக்கக்கூடிய வகையில் தேவையான பொருட்கள் மற்றும் உபகரணங்களை அவர்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற பேரார்வத்தை எங்கள் தொழிலாகக் கொண்டுள்ள விளையாட்டு வீரர்களாகிய நாங்கள் அனைவரும் இந்த வாய்ப்பையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். இப்போது நான்கு தசாப்தங்களாக Decathlon அணிகள் உலகெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர்களின் பயிற்சியில் இணைந்து துணை புரிந்து புரட்சியை ஏற்படுத்தியுள்ளன´ என்று மெலிஸ் குர்டில்மாஸ் அவர்கள் மேலும் கூறினார்.

இலங்கை சந்தையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், Decathlon தனது தொழில்துறை பங்காளர்களின் ஈடுபாட்டுடன் 45 மில்லியனுக்கும் அதிகமான உற்பத்திகளை தயாரித்துள்ளது.

Decathlon சில்லறை வர்த்தகத் துறை தலைமை அதிகாரியான மிஹாய் மிர்ட் கூறுகையில் இலங்கையில் மிகவும் அபிமானம் பெற்ற விளையாட்டு வர்த்தகநாமமாக மாறுவதற்கான எங்கள் பயணத்தை நாம் சிறப்பாக முன்னெடுத்து வருகிறோம். எங்கள் தரமான உற்பத்திகளை வியப்பூட்டும் விலையில் வழங்குவதில் நாம் பெயர் பெற்றுள்ளோம். எங்கள் அணியில் 30 இற்கும் மேற்பட்ட பேரார்வம் கொண்ட விளையாட்டு அபிமானிகள் உள்ளதுடன் இலங்கையில் அனைவரும் விளையாட்டுகளை அனுபவிக்கச் செய்வதற்கு உண்மையிலேயே அர்ப்பணிப்புடன் கூடிய பல்வேறு விளையாட்டுகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்´ என்று குறிப்பிட்டார்.

மேலும் டிஜிட்டல்ரீதியாக முன்னெடுக்கப்படுகின்ற தீர்வுகளைப் பயன்படுத்துவதை விஸ்தரித்து தங்குதடையற்ற ஷொப்பிங் அனுபவம் சௌகரியமான இணைய வழி கொள்வனவு மற்றும் கொழும்புக்குள் ஒரே நாளில் விநியோகம் செய்யப்படுவதை உறுதிசெய்கிறது. மற்றும் www.decathlon.lk வழியாக மேற்கொள்ளப்படும் ஆர்டர்களுக்கான பொருட்கள் மற்றும் உபகரணங்களை காட்சியறைக்குச் சென்றும் பெற்றுக்கொள்ள முடியும்.

எங்களைப் பற்றி:

1976 ஆம் ஆண்டில் பிரெஞ்சு வடிவமைப்பாளர் மைக்கேல் லெக்லெர்க் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக Decathlon விளையாட்டுத் துறையில் சில்லறை வியாபாரத்தில் ஒரு முன்னோடியாக இனங்காணல் அங்கீகாரத்தைச் சம்பாதித்து சிறந்த பெறுமதி கொண்ட உயர் தரமானரூபவ் பேண் தகைமை கொண்ட மற்றும் செலுத்தும் பணத்திற்கு சிறப்பான பெறுமானத்தை கட்டுபடியான விலைகளில் உற்பத்திகளை வழங்குகிறது. எங்கள் நெறிமுறைகள் ஆழமான பொறுப்புணர்வால் சமநிலைப்படுத்தப்படுகின்றன: நமக்காக ஒருவருக்கொருவர் எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் பூமியின் எதிர்காலம்.