திட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் (PMI) மதிப்புமிக்க 2020 – சிறந்த திட்ட முகாமைத்துவ விருதினை SLT மொபிடெல் வென்றது

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தரத்தில் சிறந்த தொலைத்தொடர்புச் சேவை வழங்குனர்களாக தங்கள் சிறப்பினை வெளிப்படுத்திய SLT Mobitel, மிகவும் மதிப்புமிக்க Project Excellence Award (PMI) 2020 விருதினை வென்றதன் மூலம் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லினை எட்டியது. இவ்விருதானது நிலை VIII இலிருக்கும் “Project Rural MPowerment” என்ற தொனிப்பொருளிலான திட்டத்திற்குரூபவ் திட்ட முகாமைத்துவ நிறுவனத்தினால் (PMI) வழங்கப்பட்டது.

ஒவ்வொரு இலங்கையரும் டிஜிட்டல் உள்ளடக்கத்தால் வலுவூட்டப்படுவதை கருப்பொருளாகக் கொண்ட இத்திட்டம் நாடு முழுவதுக்கும் 4G தொழில்நுட்பத்தினை வழங்குவதன் மூலம் கிராமப்புறங்களுக்கும் டிஜிட்டல் வசதியைப் பெற்றுக் கொடுத்தது. Huawei மற்றும் ZTE ஆகிய இரண்டு முன்னணி மூலோபாய பங்காளிகளுடன் 2018ஆம் ஆண்டில் இத்திட்டத்தினை ஆரம்பித்த மொபிடெல் குழு தம்மால் திட்டமிடப்பட்ட காலவரையறைக்கு 5 மாதங்களுக்கு முன்னதாகவே வெற்றிகரமாக முடித்தது. பல மில்லியன் டொலர் மதிப்புடைய இம்முயற்சியானது 3000 4G LTE nodes உட்பட 5400 க்கும் அதிகமான தள நிலையங்களை நிறுவுவதில் ஈடுபட்டுள்ளது. இதன் விளைவாக கிராமப்புறங்களுக்கும் அதைச்சுற்றியுள்ள மக்களுக்கும் மிகச்சிறந்த இணைப்பு மற்றும் நீட்டிக்கப்பட்ட ப்ரோட்பாண்ட் வலையமைப்பும் வழங்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டில் மட்டும் மொபிடெல் தமது வலையமைப்பினை விரிவுபடுத்துவதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளது. மேலும் ஒவ்வொரு இலங்கையருக்கும் சிறந்த இணைப்பு மற்றும் ப்ரோட்பாண்ட் அனுபவத்தினை வழங்கிட 2020 ஆம் ஆண்டில் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளது. கொவிட் 19 தொற்று பரவுவதற்கு சற்று முன்னர் இத்திட்டம் பாடசாலை மாணவர்களுக்கு மின் கற்றல் தளங்கள் மூலம் தங்கள் கல்வியைத் தொடர உதவியதுடன் எவ்வித தடங்கல்களும் இல்லாமல் வீட்டிலிருந்து வேலை செய்யும் றுகுர் என்ற கருதுகோளினை ஏற்றுக் கொள்ள பெருநிறுவனத் துறைக்கு உதவியது. மேலும் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கும் வெளி உலகுடன் இணைவதற்கு உதவியது மட்டுமல்லாமல் சிறிய மற்றும் நடுத்தர பொருளாதார துறைக்கு ப்ரோட்பாண்ட் அணுகலுடன் வலுவூட்டியது. இதனால் தேசிய பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பும் அதிகரித்தது.

இவ்வெற்றியைப் பற்றி Sri Lanka Telecom Group இன் குழுமப் பிரதான நிறைவேற்று அதிகாரி திரு. லலித் செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில், ´திட்ட முகாமைத்துவ நிறுவனத்தினால் தேசிய மட்டத்திலான ஓர் திட்டத்திற்கு சர்வதேச அளவில் அங்கிகாரம் பெற்றமை எமக்கு ஒரு மகத்தான பெருமையாகும். மேலும் இத்திட்டத்தினை சாதனை படைத்திடும் நேரத்தில் பூர்த்தி செய்தமைக்காக எமது மொபிடெல் குழுவுக்கு அவர்களது கடின உழைப்புக்கும் முயற்சிக்கும் மற்றும் விசுவாசத்திற்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த உயர்ந்த சாதனை இலங்கைக்கு பெருமை சேர்த்தது மட்டுமல்லாது சர்வதேச சந்தையில் போட்டி போடக்கூடிய வகையிலான உள்நாட்டு நிபுணர்களின் திறன்கள் மற்றும் இயலுமைகளையும் எடுத்துக் காட்டுகிறது. இந்த மதிப்புமிக்க அங்கிகாரத்தினை நாம் பெற தங்களது கடமைக்கும் அப்பாற்பட்டு எமக்கு உதவிய அத்தோடு அவர்களது மதிப்புமிக்க ஆதரவினையும் வழங்கிய எமது மதிப்புமிக்க பங்குதாரர்கள் அரச அதிகாரிகள் மற்றும் PMI Sri Lanka வின் கொழும்பு பிரிவினருக்கும் நான் எனது நன்றிகளைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.´ எனக் குறிப்பிட்டார்.

இவ்விருதினைப்பற்றி மொபிடெலின் பிரதான நிறைவேற்று அதிகாரி திரு. நளின் பெரேரா கருத்து தெரிவிக்கையில், ´இவ்விருதினை இரண்டாவது முறையும் வெல்வது உண்மையில் எமக்கு மிகவும் பெருமையாகவும் கௌரவமாகவும் உள்ளது. மொபிடெலில் நாம், இலங்கையை டிஜிட்டல் புரட்சியின் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம். சர்வதேச அமைப்புக்களின் இத்தகைய அங்கிகாரங்கள் மக்களை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களுக்கு நெருக்கமாக கொண்டு வரும் எமது நோக்கத்தினை மேலும் பலப்படுத்துகின்றது. அத்தோடு நான் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவிற்காக எமது பங்குதாரர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.´ எனக் குறிப்பிட்டார்.

PMI ஆனது அதன் உலகளாவிய ஒத்துழைப்பு, கூட்டிணைவு, கல்வி மற்றும் ஆராய்ச்சி மூலம் உலகளவில் 2.9 மில்லியனுக்கும் அதிகமான தொழில் வல்லுனர்களுக்கு தங்கள் தொழில் சார் வாழ்க்கையை திட்டங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் போர்ட்போலியோ முகாமைத்துவம் என்பவற்றின் மூலம் மதிப்பினை வழங்கி வருகிறது. PMI Project Excellence Award ஆனது வெற்றி பெற்ற 5 திட்டங்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. நிறுவன ரீதியான திட்ட முகாமைத்துவ நடைமுறைகளில் சிறந்த செயற்திறன் மற்றும் சமூகத்தில் சாதகமான தாக்கத்தினை செலுத்திடுதல் போன்ற சிறந்த நிறுவன ரீதியான முடிவுகளை வழங்குபவைகள் பிராந்திய ரீதியாக தேர்ந்தெடுக்கப்படும். இத்தகைய உலகளாவிய அங்கிகாரத்துடன் இவ்விருதை வென்றமையானது எமது குழுவை ஒரு புதிய நிலைக்கு உயர்த்தியுள்ளதுடன் உள்நாட்டு தொலைத்தொடர்புச் சந்தையில் மொபிடெலின் நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.