மற்றுமொரு புதிய வசதியை அறிமுகப்படுத்துவதிலும் கொமர்ஷல் வங்கி

கொமர்ஷல் வங்கியின் கடனட்டைகளைக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள் தமது கடனட்டையில் செலுத்தப்பட வேண்டிய தொகையை மாதாந்தக் கடனட்டைக் கூற்றுக்களில் காணப்படும் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமாகச் சௌகரியமாகவும் உடனடியாகவும் செலுத்தும் வசதியை அவ்வங்கி ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு QR குறியீடு மூலமாகக் கடனட்டைக் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு வழியேற்படுத்திய இலங்கையைச் சேர்ந்த முதலாவது வங்கியாகரூபவ் இதன்மூலமாக கொமர்ஷல் வங்கி மாறியுள்ளது.

ஒவ்வொரு கடனட்டைக் கூற்றுடனும் தனித்துவமான QR குறியீடொன்றை வங்கி இப்போது அச்சிட்டு அனுப்புகிறது. இந்த QR குறியீட்டை LANKAQR தரநிலையின் கீழ் உருவாக்கப்பட்டட இலங்கையின் முதலாவது QR அடிப்படையிலான செயலியான ComBank Q+ செயலி, கொமர்ஷல் வங்கியின் Flash செயலி, LANKAQR தரநிர்ணயத்தின் கீழான வேறு ஏதாவது QR கொடுப்பனவுச் செயலி, மாஸ்டர்கார்ட் QR அல்லது விஸா QR செயலிகளுக்கு ஆதரவளிக்கும் வேறு ஏதாவது செயலி ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.

கொடுப்பனவுச் செயன்முறையின்போது கடனட்டை விவரங்களை உள்ளிட வேண்டிய தேவை இல்லாமற் செய்யப்படுகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு மேலும் சௌகரியத்தை வழங்குகிறது என வங்கி தெரிவித்தது. கடனட்டைக் கூற்றில் காணப்படும் ஞசு குறியீட்டை ஸ்கேன் செய்ததும் திரையில் தோன்றும் ஆறு இலக்க கடனட்டைக் கணக்கு இலக்கம் சரியானதா என்பதைச் சரிபார்ப்பது மாத்திரமே, வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டிய ஒன்றாக இப்போது உள்ளது.

குறைந்தபட்சக் கொடுப்பனவுக்குச் சமனான அல்லது அதைவிட அதிகமான எத்தொகையையும் இதன் மூலமாகச் செலுத்த முடியுமென்பதோடு, முழுமையான மீதித் தொகையையும் இம்முறையில் செலுத்த முடியுமென வங்கி தெரிவித்தது. வங்கிக் கிளையொன்றுக்கு விஜயம் செய்யாமல், தாம் இருக்கும் இடத்திலிருந்தே பாதுகாப்பான முறையில் கொடுக்கப்பட வேண்டிய தொகையைச் செலுத்துவதற்கான வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு இது ஏற்படுத்துகிறது.

கொமர்ஷல் வங்கியின் கடனட்டைகளை வைத்திருப்போருக்கு இந்த வசதி மேலதிகக் கட்டணங்கள் எவையுமின்றி வழங்கப்படுவதோடு, கொடுப்பனவுகளை மேற்கொள்ளும்போது அது தொடர்பில் குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலமாக உடனடியாகவே அறிவிக்கப்படும்.

நாடு முழுவதும் மொபைல், டிஜிட்டல் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு LANKAQR முறையை அறிமுகப்படுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியால் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட ரட்டபுராம LANKAQR (Ratapuraama LANKAQR) திட்டத்துக்கு இம்முன்னெடுப்பு ஆதரவளிக்கிறது என கொமர்ஷல் வங்கி தெரிவித்தது.

கொமர்ஷல் வங்கியின் இணையத்தளத்தில் தோன்றும் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமாக கடனட்டைக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்காக QR கொடுப்பனவுகளை இலங்கையில் முதன்முறையாக அறிமுகப்படுத்திய வங்கியாகவும் கொமர்ஷல் வங்கி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகின் ஆயிரம் தலைசிறந்த வங்கிகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையின் ஒரே வங்கியான கொமர்ஷல் வங்கி தொடர்ந்து பத்து வருடங்களாக அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இவ்வாண்டு வங்கி அதன் 100 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. 2019ல் 50க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளுர் விருதுகளை வென்றுள்ள கொமர்ஷல் வங்கி இலங்கையில் 268 கிளைகளுடனும் 875 ATM வலையமைப்புடனும் செயற்படுகின்றது.

பங்களாதேஷ் செயற்பாடுகளுக்கு அப்பால் கொமர்ஷல் வங்கியின் கடல் கடந்த செயற்பாடுகள் மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும் நேய்பியுடோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது.