மாற்றுத்திறனிற்கான நம்பகத்தன்மை மாற்றுதிறனாளிகளிற்கு தேசிய தொழில் தகுதிகளை அணுக உதவுதல்

S4IG மற்றும் TVEC ஆகியன தேசிய தொழில் தகுதி (என் வி கியூ) இறுதி மதிப்பீடுகளின் போது மாற்றுத்திறன் கொண்ட பயிற்சி பெறுநர்களிற்கான நியாயமான மாற்றங்களை வழங்குவதை ஆதரிப்பதற்கான அரசாங்க சுற்றறிக்கையொன்றையும் கையேடு; அறிமுகப்படுத்துகின்றன.

அதிமேதகு ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ அவர்கள் இந்த ஆண்டின் உலக இளைஞர் திறன் தினமான ஜூலை 15ம் திகதியன்று நிலைபேறான மற்றும் உள்ளடக்கிய அபிவிருத்திக்கான திறன் அபிவிருத்திக்கு 2021-2030 வரையான காலப்பகுதியை ´திறன் மேம்பாட்டு தசாப்தமாக´ அறிவித்தார்.

கடந்த காலங்களில்ரூபவ் திறன் மேம்பாட்டு சேவைகளை அணுகும்போதோ அல்லது அவர்களின் திறன்களை மதிப்பீடு செய்தலிலோ அல்லது தொழிலாளர் சந்தையில் அதிக வேலைவாய்ப்பு பெறுவதற்கான அவர்களின் விருப்பத்தையும் திறமையையும் முதலாளிகளுக்கு வெளிப்படுத்தி அங்கீகரிக்கப்படுதலிலோ பல சவால்களை மாற்றுத்திறனாளிகள் எதிர்கொண்டனர்.

இதைக்கருத்தில் கொண்டு இலங்கை திறன் மேம்பாட்டு தொழில் கல்விரூபவ் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சகத்துடன் இணைந்து அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் முன்முயற்சியான உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் (S4IG) என்பது இலங்கையிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாடு, அங்கீகாரம் மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிறுவுதலின்போது இலங்கைக்கான அவுஸ்ரேலிய செயல் உயர் ஸ்தானிகர் அமண்டா ஜுவல் ´நாம் இன்று இங்கு கொண்டாடும் இந்த முயற்சிகள் மாற்றுவலுவுள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் பங்களிப்பை TVEC அமைப்பில் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் அனைத்து இலங்கையர்களுக்கும் வாய்ப்புகளிற்கான சமமான அணுகல் இருப்பதை உறுதிசெய்கின்றன.´ என குறிப்பிட்டார்.

இந்த முயற்சியானது, நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் மாற்றுத்திறனாளிகள் செயற்றிறன்மிக்க வேலை வாய்ப்புக்களில் இணைய உதவி செய்யும் என்று அரச அமைச்சர் டாக்டர் சீதா அரம்பேபோலாவும் அவரது உரையில் பாராட்டினார்.

நவம்பர் 17ம் திகதி, 2020 அன்று அரசாங்க சுற்றறிக்கை மற்றும் கையேட்டின் வெளியீடானது நடைபெற்றது. இந்த வெளியீட்டைக்குறித்து S4IG இன் குழுத் தலைவர் டேவிட் அப்லெட் குறிப்பிடுகையில் ´S4IG ஆனது TVEC உடன் இணைந்து செயல்படுவதில் பெருமிதம் கொள்கிறது முறையான மாற்றங்கள் வேலைவாய்ப்பு விளைவுகளுடன் தொடர்புடைய திறன் மேம்பாட்டு அமைப்பில் ஈடுபடும் அனைத்து இலங்கையர்களுக்கும் செழிப்பை இது உறுதி செய்கின்றது என குறிப்பிட்டார்.

இந்த பயன்படுத்துவதற்கு இலகுவான கையேடானது, NVQ மதிப்பீட்டாளர்களுக்கு மாற்றுத்திறன்கொண்ட பயிற்சி பெறுனரின் மாற்றுத்திறனுக்கேற்ப பரந்தளவிலான காட்சி மற்றும் செயன்முறை நியாயமான மாற்றங்களை வழங்குவதற்கு உதவிசெய்கின்றது.

TVEC யினால் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்கள் உள்ள தடைகளை நீக்குவதுடன் அனைவருக்கும் அணுகக்கூடிய திறன் அங்கீகாரத்தையும் வழங்கும் என மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணையத்தின் (TVEC) பணிப்பாளர் (செயல்) நாயகம் ஜானக்க ஜயலத் அவர்கள் பெருமையுடன் குறிப்பிட்டார்.