இலங்கையர்களுக்கு பங்குச் சந்தை எண்மின் நிலைப்படுத்தல் அனைத்து வசதியினையும் மற்றும் சந்தையை இலகுவாக அணுகுதலையும் உருவாக்கியுள்ளது.

இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் கொழும்பு பங்குப்பரிவர்த்தனை ஆகியவற்றால் இலங்கை பங்குச்சந்தையின் எண்மின்நிலைப்படுத்தலை (Digitalization) முன்னிட்டு இலங்கையின் பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆதரவுடன் ஒரு விசேட சந்தை ஆரம்ப நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த அறிமுக நிகழ்வு “Hyper Leap to the future” என்ற கருப்பொருளைக் கொண்டிருந்ததோடு கௌரவ. இராஜாங்க அமைச்சர் அஜிட் நிவார்ட் கப்ரால், கௌரவ. இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் இலங்கையின் வெளிநாட்டு தூதுக் குழுக்கள், பங்குத்தரகர் நிறுவனங்கள், பட்டியற்படுத்தப்பட்ட கம்பனிகள் மற்றும் இலங்கை வணிகக் கழகங்கள் என்பவற்றிலிருந்தான விருந்தினர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.

கொழும்பு பங்குச்சந்தை அதனது அடிப்படை நடவடிக்கைகளை எண்மின்நிலைப்படுத்துவதற்கு அவசியமான அளவீடுகள் மற்றும் பொறிமுறைகளை அடையாளம் காணும் நோக்குடன் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் திரு. விராஜ் தயாரட்னவினால் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் கொழும்பு பங்குப்பரிவர்த்தனை ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு இணைந்த குழு உருவாக்கப்பட்டது. மேலும் ஒரு வினைத்திறனான பாவணையாளர் இடைமுகப்பு மற்றும் பாவணையாளர் அனுபவம் என்பவற்றுடன் அனைத்து பங்குபற்றுநர்களுக்கும் இடையிலான தொடர்பை எண்மின்நிலைப்படுத்துவதற்காக ஒரு தந்ரோபாயம் உருவாக்கப்பட்டது.

இந்த முயற்சியின் முதற் கட்டமாக, ஆவணங்கள் அடிப்படையிலான கூற்றுக்களை இலத்திரனியல் முறைமைக்கு மாற்றுதல் மற்றும் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியற்படுத்தப்பட்டுள்ள கம்பனிகள் பங்குதாரர்களுக்கு இலத்திரனியல் முறையில் பங்கிலாபங்களை வழங்குவதற்கு வசதியளித்தல் ஆகியன காணப்படுகின்றன. முயற்சியின் இரண்டாம் கட்டத்தின் ஒரு அங்கமாக, கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் புதிய கையடக்கத் தொலைபேசி பிரயோகத்தின் ஊடாக எண்மின்நிலைப்படுத்தல் சேவையினை இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் கொழும்பு பங்குப்பரிவர்த்தனை இன்று அறிமுகப்படுத்தின.

இலத்திரனியல் இணைப்பு மற்றும் இணையவழி மூல கணக்குத் திறப்பு பன்புகள் புதிய முதலீட்டாளர்கள் சந்தைக்குள் வருவதிலுள்ள தடைகளை நீக்கியுள்ளதோடு எதிர்கால முதலீட்டாளர்கள் கிளைக் காரியாலயங்களுக்கு வருகை தராமல் நாட்டின் எந்தவொரு பகுதியிலிருந்தும் மத்திய வைப்புத்திட்ட கணக்கினை திறந்து கொள்ள முடியும். இந்த நிகழ்வில், இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு, கொழும்பு பங்குப்பரிவர்த்தனை மற்றும் மத்திய வைப்புத்திட்ட முறைமை ஆகியவற்றின் புதிய வலைத்தளங்கள் உள்ளிட்ட இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் கொழும்பு பங்குப்பரிவர்த்தனை என்பவற்றின் எண்முறை தொடு புள்ளிகளின் மறுசீரமைப்பு இடம்பெற்றது, அவை பயனர் நட்பு இடைமுகங்களுடன் மீண்டும் தொடங்கப்பட்டன, மேலும் உலாவிகளுக்கு வர்த்தக தகவல், ஒழுங்குமுறை தகவல்கள் மற்றும் முதலீட்டாளர்களை மையமாகக் கொண்ட தகவல்களை உள்ளடக்கிய ஒரு தகவல் உலாவல் மத்திய வைப்புத்திட்ட முறைமையினால் பராமரிக்கப்படுகிறது. ஒரு முதலீட்டாளர் கல்வி மற்றும் நிதி கல்வியறிவை மையமாகக் கொண்ட யூடியூப் சேனல், வருங்கால முதலீட்டாளர்களுக்கு நவீன மற்றும் எண்முறை கற்றல் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், எளிதில் அணுகக்கூடிய கற்றல் வாய்ப்புகளுக்கான வளர்ந்து வரும் தேவைக்கு ஏற்பவும் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவால் அறிமுகப்படுத்தப்பட்டது.

கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் கையடக்கத் தொலைபேசி பிரயோகம் வழங்கும் புதிய இணைய வழி கணக்கு திறப்பு அம்சத்துடன், வருங்கால முதலீட்டாளர்கள் தற்போது தங்கள் கணக்கு திறப்பு, வர்த்தகம் மற்றும் தீர்வு மூலம் உடனடியாக முதலீடு செய்வதைத் ஆரம்பிக்கவும் மற்றும் எங்கும் எந்த நேரத்திலும் தங்கள் கணக்குகளை கண்காணிக்கவும் முடியும். அனைத்து வகையான முதலீட்டாளர்களுக்கும் ஏற்றவாறு ஆராய்ச்சி அறிக்கைகள் மற்றும் கல்வி உள்ளடக்கம் உள்ளிட்ட தகவலறிந்த முதலீட்டுத் தீர்மானங்களை மேற்கொள்ள குறிப்பாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பங்கு வர்த ;தகத்தின் அடிப்படைகளுக்கு அப்பால் மதிப்பைச் சேர்க்கவும், ஊடக வெளியீடுகளை விநியோகிக்கவும் பெரு நிறுவன வீடியோக்களை தொகுப்புச் செய்யவும் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஈர்க்கக்கூடிய எண்மின்நிலை அனுபவத்தை உருவாக்கவும் இந்தத் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பங்குப்பரிவர்த்தனை மற்றும் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு ஆகியன அதன் தொடக்கத்திலிருந்தே பங்குச் சந்தை வியாபார நிலைமாற்றத்திற்கு முன்னோடியாக இருந்து வருகின்றன, மேலும் இலங்கையின் நிதி நிலப்பரப்பை மறுவரையறை செய்யும் நோக்கில் உள்ளன. முதலீட்டாளர்கள், பங்குத்தரகர்கள், பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கான முதலீட்டு அனுபவத்தை மேம்படுத்துகிறன. கொழும்பு பங்குச் சந்தையின் எண்மின்நிலைப்படுத்தல் எதிர் காலத்தில் இலங்கையை உலகளாவிய நிதி மையமாக நிலை நிறுத்தவும், பங்குச் சந்தை நிலப்பரப்பை மறுவரையறை செய்யவும் உதவுவதாக அமையும்.

கொழும்பு பங்குப் பரிவர்த்தனை பற்றி

இலங்கையிலுள்ள ஒரேயொரு பங்குச் சந்தையை கொழும்பு பங்குப்பரிவர்த்தனை இயக்குவதுடன் கம்பனிகளும் முதலீட்டாளர்களும் ஒன்றிணையக்கூடிய ஓர் வெளிப்படையான மற்றும் முறைமைப்படுத்தப்பட்ட சூழலை வழங்குவதற்கும் பொறுப்பாயுள்ளது. கொழும்பு பங்குப் பரிவர்த்தனையானது இலங்கையின் சட்டங்களுக்கமைய ஸ்தாபிக்கப்பட்ட உத்தரவாதத்தினால் பொறுப்பு வரையறுக்கப ;பட்ட ஓர் கம்பனியாகும். இந்நிறுவனம் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் உரிமமளிக்கப்பட்டுள்ளதுடன் இது 15 அங்கத்தவர்களையும் 14 வியாபார அங்கத்தகவர்களையும் உள்ளடக்கிய ஓர் பரஸ்பரமுள்ள பரிமாற்றகமாகும். அனைத்து அங்கத்தவர்கள் மற்றும் வியாபார அங்கத்தவர்கள் பங்குத் தரகர்களாகச் செயற்படுவதற்கு இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் உரிமமளிக்கப்பட்டுள்ளார்கள். மேலதிகத் தகவல்களுக்கு www.cse.lk பார்க்கவும்.