தங்கக்கடன் வசதியினை விரிவாக்கி, வாடிக்கையாளர்களுக்கு பெறுமதிமிக்க சேவையை செலான் வங்கி வழங்குகிறது.

அன்புடன் அரவணைக்கும் செலான் வங்கி, தங்க கடனுக்கான வட்டியாக மாதாந்தம் 0.79% வரை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. COVID-19 காரணமாக நுகர்வோர் எதிர்கொள்ளும் நிதிச் சுமையைத் தணிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, செலான் தற்போது 24 கரட் தங்கத்திற்கு அதிகப்பட்ச முற்பணமான ரூ. 66,000 மற்றும் 3 மாதங்களுக்கு திருப்பிச் செலுத்தும் திட்டங்களுடன் வழங்குகிறது. அத்துடன் 1 வருட தங்கக்கடன் சேவையையும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப முன்னெடுத்து செல்லப்படுகிறது.

குறைந்தப்பட்ச ஆவணங்களுடன் உடனடியாக நிதி உதவியைப் பெறுவதற்காக சந்தையில் உள்ள நுகர்வோர் தேவையை செலான் குழு புரிந்துகொண்டது. எனவே, தங்கக்கடன் வசதியை வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட அல்லது வணிக நோக்கங்களுக்கான அவசர நிதித் தேவைகளுக்காக விரிவாக்கி வழங்கி வருகிறது. செலான் வங்கி ஏற்கனவே தனது கிளை வலையமைப்பின் பெரும்பகுதியை தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் செயல்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு தங்க கடன் சேவைகளை அறிமுகப்படுத்தி அதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள உதவுவதற்கு, தேவையான பயிற்சிகளை ஊழியர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

COVID-19 தொற்று நோய் காரணமாக தமது வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கும் நிதிச் சவால்களை ஆராய்ந்து, அவர்களது நிதி ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதை பொது நோக்காக ஆராய்ந்த செலான் குழு தனது வாடிக்கையாளர் தளத்தை வலுப்படுத்த தங்கக்கடன் வசதியை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் தங்கள் தங்கச் சொத்துக்களை, தமது வணிகங்களை புதுப்பிக்க தேவையான மூலதன கடன்களைப் பெற பயன்படுத்த வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது. குறைக்கப்பட்ட வட்டி விகிதங்கள் மற்றும் வங்கி வழங்கும் அதிக முன்பணத் தொகை ஆகியவை நுகர்வோருக்கு அவசர மருத்துவ செலவுகள், கல்விச் செலவுகள் மற்றும் அவசர வீட்டுத் தேவைகளுக்குத் தேவையான பணம் போன்ற அவசர பணத் தேவைகளுக்கு நிதியளிக்க உதவும்.

மேற்கூறியதுக்கு மேலாக; உற்பத்தித் துறையில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்களுக்கு கூடுதல் ஆவணங்கள் இல்லாது, இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கும், விவசாயிகள் மற்றும் விவசாயத் துறையில் உள்ளோர் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை கொள்வனவு செய்யவும், இளம் தொழில் முனைவோரின் சிறு வணிக திட்டங்களுக்கும், உயர் கல்வியை நாடும் இளம் நிர்வாகிகளும் செலான் தங்க கடன் வசதியை பெற்றுக்கொள்ளலாம். வங்கி மூலம் தங்கக் கடன்களைப் பெற விரும்பும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மிக உயர்ந்த பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை செலான் உறுதிப்படுத்துகிறது. இந்த சேவையை வழங்க தற்போது இயக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கிளைக்கும் செயல்பாட்டின் போது பொருட்கள் சேதமடையவில்லை என்பதை உறுதிப்படுத்தி தங்கத்தின் எடையை அடர்த்தி மீட்டர்கள் கொண்டு பரிசோதனை செய்ய மிக உயர்ந்த தரமான கருவிகள் பொருத்தப்பட்டுள்ள ஒரு தனி பிரிவு வழங்கப்பட்டுள்ளது. பலவிதமான ஆவண தேவைகள் மற்றும் வருமான இடைவெளிகளால் தனிப்பட்ட கடன்கள் அல்லது வணிகக் கடன்களைப் பெறுவதில் சிரமங்களைக் எதிர்நோக்கும் வாடிக்கையாளர்கள், அருகிலுள்ள செலான் கிளையை அணுகி வங்கிக்கடன் சேவையைப் பெற செலான் வங்கி அழைக்கிறது.

அன்புடன் அரவணைக்கும் வங்கி, செலான் வங்கி, அதிநவீன தொழில்நுட்பம், புதுமையான நிதி பொருட்கள் மற்றும் சிறந்த தரமான சேவைகள் மூலம் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு உன்னத வங்கி அனுபவத்தை வழங்குவதற்கான தொலைநோக்குடன் செயல்படுகிறது. சிறிய மற்றும் நடுத்தர, சில்லறை மற்றும் நிறுவனங்கள் என வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வங்கி, 173 கிளைகள் மற்றும் நாடு முழுவதும் பரந்துள்ள 216 ATM களைக் கொண்ட வலையமைப்புடன் அதன் கால்தடத்தை விரிவுபடுத்தியுள்ளது.

பிற்ச் மதிப்பீடுகளால் செலான் வங்கி, தேசிய நீண்டகால மதிப்பீட்டை ‘A (LKA)’ என ஒப்புதல் அளித்து, செயல்திறன் சிறப்பைக் கொண்ட நிதி ரீதியாக நிலையான அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்பரன்சி குளோபல் நிறுவனத்தால் நிறுவன அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மைக்காக பொது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில், செலான் வங்கி இரண்டாவது இடத்தைப் பிடித்தது, மேலும் வங்கி இப்போது S&P Dow Jones SL 20 குறியீட்டின் ஒரு பகுதியாகும். இந்த சாதனைகள் செலான் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் அனைத்து முயற்சிகளிலும் சிறந்து விளங்குவதற்கான உறுதியற்ற அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். நிதி பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு www.seylan.lk ஐ அணுகவும்.