ஐரோப்பிய போக்குவரத்து சேவை Bolt இலங்கைக்கு

நகரப்புற பயணத்தை எளிதாகவும், விரைவாகவும், நம்பகமானதாகவும் மாற்ற உறுதிபூண்டுள்ள முன்னணி ஐரோப்பிய போக்குவரத்து தளமான Bolt சவாரிகளை ஏற்கத் தயாராக உள்ள 2000 க்கும் மேற்பட்ட ஓட்டுனர்களுடன், நவம்பர் 25, 2020 அன்று கொழும்பில் அதன் சேவையை ஆரம்பித்து இலங்கை சந்தையில் நுழைவதை அறிவித்தது. தெற்காசியாவில் முதன்முறையாக Bolt சேவைகளைப் பெறுகின்ற நாடாக இலங்கையை தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மலிவு பயணங்கள் மற்றும் மகிழ்ச்சியான ஓட்டுனர்கள் என்ற உறுதிப்பாட்டில் உள்ள நிறுவனம், ஓட்டுநர்களுக்கு தனது தளத்தைப் பயன்படுத்துவதற்கு கட்டணங்கள் வசூலிக்கப்போவதில்லை என்றும் ஏனைய போட்டியாளர்களை விட 20% குறைவான பயணக் கட்டணங்களை, குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. சிறந்த உபாயமூலத்துடன் நிறுவனத்தை வளர்ப்பதனாலும், செயல்திறனை மையப்படுத்தி செயல்பாடுகளை மேற்கொள்வதனாலும் வாடிக்கையாளர்கள், பயணிகள் மற்றும் ஓட்டுநர்களுக்கு Bolt மூலம் இவ்வாறான சேமிப்பை வழங்க முடிகிறது.

மக்களுக்கு நகரத்தில் போக்குவரத்து தேவைகள் தொடர்ந்தும் உள்ளதென்ற உறுதியான நம்பிக்கையும், அவர்களுக்கு உதவுவதற்கான பணியை நிறைவேற்ற தம்மால் முடிந்த அனைத்தையும் செய்யவேண்டும் என்ற ஆர்வத்தினாலும், கோவிட் -19 நெருக்கடியின் உச்சக்கட்டத்தின் போது இலங்கைக்குள் நுழைய Bolt தீர்மானித்தது. தற்போது கொழும்பில் மட்டுமே கிடைக்கும் Bolt சேவைகளை, Apple App Store அல்லது Google Play Store இலிருந்து பாதுகாப்பான மற்றும் இலவச Bolt பயன்பாட்டைப் பதிவிறக்கி (app download) பயனர் சுயவிவரத்தை அமைப்பதன் மூலம் பயணிகளால் அணுக முடியும். Bolt உடன் ஓட்டுநராக சேர விரும்பும் எந்தவொரு நபரும், https://partners.bolt.eu/driver-signup இணையவழி மூலம் விவரங்களை பூர்த்தி செய்வதன் மூலமாகவோ அல்லது Apple App Store மற்றும் Google Play Store இல் கிடைக்கும் Bolt டிரைவர் ஆப் (Bolt Driver App) மூலமாகவோ நிறுவனத்துடன் எளிதாக பதிவு செய்துகொள்ள முடியும்.

சவாரி மேற்கொள்ள விரும்பும் பயணிகள், பயன்பாட்டைத் திறந்து, அவர்களின் இருப்பிடத்தையும் அவர்கள் செல்ல விரும்பிய இடத்தையும் குறிக்கலாம். அதன் பின்னர் பயணத்திற்கான வெளிப்படையான செலவு மதிப்பீட்டை பயன்பாடு வழங்குகிறது. பயண மதிப்பீட்டை பயணிகள் ஏற்றுக்கொண்டவுடன், சவாரிக்கு ஏற்ற அருகிலுள்ள ஓட்டுனர்களை பயன்பாடு அறிவுறுத்துகிறது. பயணிகளின் பாதுகாப்பை பயன்பாட்டின் மூலம் உறுதிசெய்வதற்கு, பயணிகள் தங்கள் ஓட்டுநரின் விவரங்களைக் காணவும், ஓட்டுநரை நிகழ்நேரத்தில் கண்காணிக்கவும் அனுமதித்து, சரியான ஓட்டுநருடன் சரியான வாகனத்தில் பாதுகாப்பாக செல்வதை எளிதாக்குகிறது. சவாரி முடிந்ததும், பணம் செலுத்தும் வசதியுள்ளது. WHO மற்றும் நாட்டின் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும், அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் மேற்கொளளவும் தளத்தில் உள்ள அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்கு போல்ட் உறுதியாக அறிவுறுத்துகிறது.

நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, மார்கஸ் விலிக் தனது சகோதரர் மார்ட்டினுடன் 2013 இல் கட்டியெழுப்பிய போல்ட், தற்போது உலகளவில் 35 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் 150 நகரங்களிலும் செயல்படுகிறது. மேலும் தளத்தில் 30 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் மற்றும் 1 மில்லியன் ஓட்டுநர்கள் உள்ளனர். ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவில் உள்ள 13 நாடுகளில் Bolt Food செயல்பட்டு வருகிறது, மேலும் நிறுவனம் ஐரோப்பா முழுவதும் 45 நகரங்களில் மின்-ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளுடன் போக்குவரத்து சேவைகளை வழங்குகிறது. Financial Times இன் படி, போல்ட் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக வேகமாக வளர்ந்து வரும் 3 வது ஐரோப்பிய நிறுவனமாகும், மேலும் The Europas விருதுகளால் Europe’s Hottest Unicorn என்று பெயரிடப்பட்டது.