அதிநவீன சாதனங்களுடன் இலங்கை இளைஞர் மத்தியில் துணிவோடு பாய்ந்து செல்லும் realme

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் பிராண்டான realme தனது தயாரிப்புகளை இலங்கையில் நவம்பர் அறிமுகப்படுத்தியது. Chanux bro மற்றும் realme ஸ்ரீ லங்கா அணியின் பங்கேற்புடன் நடந்த மெய்நிகர் வெளியீட்டு நிகழ்வின் போது, இலங்கை சந்தைக்கு உயர் தர டிரெண்ட்செட்டிங் realme தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த வெளியீடு உலகளவில் மிக வேகமாக 50 மில்லியன் தயாரிப்பு விற்பனையை எட்டிய ஸ்மார்ட்போன் பிராண்டின் வரம்பை, தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட் சாதனங்களில் மிகச் சிறந்ததைத் தேடும் இளம் பயனர்களின் ஒரு புதிய சந்தைக்கு விரிவுபடுத்துகிறது. இரண்டு வருடத்திற்குள் உலகளவில் 13 க்கும் மேற்பட்ட சந்தைகளில் முதல் 5 பிராண்டுகள் தரவரிசையில் உள்ள realme, உலகளவில் ஏழாவது இடத்தில் உள்ளது. துணிவோடு பாய்ந்து செல் (‘Dare to Leap’) என்ற முழக்கத்துடன் களமிறங்கும் realme, துணிச்சல் மிகு இளைஞர்கள் எதிர்பார்ப்புகளை மீறும் வகையில் நான்கு அதிநவீன தயாரிப்புகளை இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

realme 7 – கூர்மையான புகைப்படங்கள், சிறந்த கேம் ஆட்டம் உடன் வேகமான சார்ஜிங்

கூர்மையான புகைப்பட பிடிப்புகளுக்கான Sony IMX682 சென்சார் கொண்ட 64MP Quad Camera, சிறந்த கேம் ஆட்டத்திற்கான உலகின் முதல் MediaTek Helio G95 கேமிங் செயலி மற்றும் 5000mAh பேட்டரி 50% சார்ஜ் பெற 26 நிமிடங்கள் மட்டுமே ஆகும் 30W Dart Charge கொண்ட realme 7, இளைஞர்களின் கற்பனையை ஈர்க்கிறது. நேர்த்தியான இந்த ஸ்மார்ட்போன் 6.5″ 90Hz Ultra Smooth Display வுடன் 16MP In-display Selfie Camera செல்பி கேமரா மற்றும் Starry Mode பயன்முறையை கொண்டது.

TÜV Rheinland Smartphone Reliability நம்பகத்தன்மை தரத்தை எட்டிய முதல் ஸ்மார்ட்போனாகும் இது, அதன் பிரிவில் Sony 64MP Quad Camera வுடன் கூடிய முதல் ஸ்மார்ட்போனாகும். Sony IMX 682, f/1.8 துளை (aperture) மற்றும் 1 / 1.73 அங்குல அளவிலான தொழில்துறையில் முன்னணியான wide-angle Quad Camera, 64MP பயன்முறையில் 6944*9248 உயர் தெளிவுத்திறன் (high-resolution) புகைப்படங்களை உருவாக்கிறது. AnTuTu தரப்படுத்தலில் மிக உயர் மட்டத்திலுள்ள MTK Helio G95 Gaming Processor செயலியை உலகின் முதல் முறையாக கொண்ட realme 7 அற்புதமான கேமிங் அனுபவத்தை பெற்றுக்கொடுக்கும். இப்புதுமைகளுடன் 30W Dart Charge, 5000mAh பெரிய பேட்டரியும் சேர்ந்து, ஆற்றல்மிக்க இளைஞர்களது கட்டாய தேவையாக realme 7 ஐ தனித்து நிற்கச் செய்யும்.

realme C சீரீஸ் – நீண்ட ஆயுள் மற்றும் நவீன இன்றைய இளைஞர்களுக்கான அதிநவீன வடிவமைப்பு

இயல்பிலேயே துடுதுடுப்பான இளைஞர்கள் அழகாக இருக்க விரும்புகிறார்கள், மேலும் அவர்கள் பல மணிநேரங்களுக்கு தொடர்ந்து செயற்படுகின்றனர். ஒரு திடமான உடல், அதிநவீன வடிவமைப்புகள் மற்றும் ஆயுள் மிகுந்த பேட்டரியைக் கொண்ட realme C சீரிஸ் ஃபோன்கள் அவர்களுடன் எதிரொலிக்கின்றன.

இளம் ஃபோன் பயனர்கள் எப்போதும் எதிர்கொள்ளும் குறைந்த பேட்டரி நெருக்கடிக்கு தீர்வாக அறிமுகம் செய்த realme C12 இல் உள்ளடங்கிய 6000mAh பேட்டரி தொலைபேசியின் eight-core processor செயலியை வலுவூட்டும். 6.5 மெகா ஸ்கிரீன் மற்றும் டிரிபிள் கேமரா உடனான இந்த ஸ்மார்ட்போன், உயர்தர கைவினைத்திறனை இளம் மற்றும் நவீன வடிவமைப்போடு இணைத்து, இளைஞர்களுக்கு உலகை ஆராய்ந்து தங்களை மகிழ்விப்பதற்கு சரியான கருவியாக அமைகின்றது. Quad Camera கொண்ட முதல் C மாதிரியான realme C12, 13MP முதன்மை கேமராவைக் கொண்டு உங்கள் படங்களை தெளிவாகவும் பிரகாசமாகவும் மாற்றுகிறது.

40 நாட்கள் காத்திருப்பு பயன்முறையில் நீடிக்கும் 5000mAh பேட்டரி உள்ளடங்கிய realme C11, ஒரு புதிய சாதனத்தை கையில் கொண்ட இளைஞருக்கு ஒரு புதிய அடையாளமாக நிற்கிறது., பெரும்பாலும் முழு-திரை அனுபவத்தை பெற்றுத்தரும் 6.5″ 20:9 திரை, 13MP முதன்மை கேமரா, மற்றும் Nightscape பயன்முறையுடன் இரட்டை பின்புற கேமராவையும் கொண்ட சி 11 தனது பிரிவிள் சிறந்த, MediaTek Helio G35 செயலியைக் கொண்டுள்ளது.

realme Buds Q – இசை ஒருபோதும் நிற்காது

A4 காகிதத்தை விட எடைகுறைந்த realme Buds Q வயர்லெஸ் இயர்பட் 3.6 கிராம் மட்டுமே எடையுள்ளதாக இருக்கிறது. மேலும் அதன் கட்டமைப்பால் காது கால்வாயில் சரியாக பொருந்தக்கூடியதாகவும் நீண்ட நேரம் அணியும்போது கூட ஆறுதல் அளிக்கிறதாகவும் உள்ளது. சிறிய Buds Q இயர்பட் ஒவ்வொன்றிலும் 40mAh உள்ளமைக்கப்பட்ட பேட்டரி வலுவூட்டுகிறது. சார்ஜிங் கேஸ் இல் ஒரு பெரிய 400mAh பேட்டரியுடன் சேர்ந்து, realme Buds Q 20 மணிநேர பேட்டரி ஆயுளைக் கொண்டுள்ளது. இது நாள் முழுவதும் பயன்பாட்டை எளிதில் அனுமதிக்கும், இசை ஒருபோதும் நிற்காது என்பதை உறுதி செய்யும்.

realme பற்றி

‘Dare to Leap’ (துணிவோடு பாய்ந்து செல்) என்ற அதன் முழக்கத்தை பிரதிபலிக்கும் realme, உன்னத செயல்திறன் மற்றும் நவநாகரீக வடிவமைப்புடனான தரமான தயாரிப்புகளை அதன் இளம் கூட்டத்தினர் நாடுகின்ற மலிவான மற்றும் கவர்ச்சிகரமான விலை புள்ளிகளில் விற்பனை செய்வதற்கான ஒரு மூலோபாயத்தை பயன்படுத்துகிறது. இளம் நுகர்வோரைப் பொறுத்தவரை, ஸ்மார்ட் ஆடியோ,வீடியோ மற்றும் வாழ்க்கை முறை தயாரிப்புகள் போன்ற பல்வேறு வகையான AIoT தயாரிப்புகளை வழங்குவதற்காக realme விரைவாக விரிவடைந்துள்ளது. இதுவரை, realme 2020 ஆம் ஆண்டில் 50 க்கும் மேற்பட்ட AIoT தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது, 2021 ஆம் ஆண்டில் அதை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது. realme மூலம் வாழ்க்கையை முழுமையாக வாழ தேவையான கருவிகளை பெற்று, இளைஞர்கள் எதிர்காலத்தை நோக்கி துணிவோடு பாய்ந்து செல்ல இப்பொழுது முடியும்.