மேல் மாகாணத்தில் 111 பொலிஸ் நிலையங்களுக்கு தற்காலத்தின் முக்கிய தேவையான தனிநபர் பாதுகாப்பு கருவிகளை வழங்கிய செலிங்கோ லைஃப்

நாட்டில் பரவி வரும் கொவிட்-19 நோய் எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணியில் நின்று செயற்படும் பிரிவினருக்கான தனது ஆதரவை செலிங்கோ லைஃப் மீண்டும் உறுதி செய்துள்ளது. இலங்கை பொலிஸ் பிரிவுக்கு அது மிகவும் முக்கியமான தனிநபர் பாதுகாப்புக் கருவிகளை வழங்கி உள்ளது.

கொவிட்-19 பரவலின் இரண்டாம் அலையில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மேல் மாகாணத்தின் கீழ் வரும் மூன்று மாவட்டங்களிலும் உள்ள 111 பொலிஸ் நிலையங்களுக்கு ஆயுள் காப்புறுதித் தவைர்கள் முகக் கவசம், மீள் பாவனைக்கு உற்படுத்தக் கூடிய தனிநபர் பாதுகாப்பு கருவிகள் என்பனவற்றை வழங்கி உள்ளனர்.

கொழும்பு பெரு நகர் புறத்தில் உள்ள மூன்று பொலிஸ் நிலையங்களுக்கு செலிங்கோ லைஃப் தலைவர் ஆர்.ரெங்கநாதன் மற்றும் கம்பனியின் பணிப்பாளர்கள் அடையாளமாக இவற்றை வழங்கி வைத்து மேல் மாகாணத்துக்கான பொலிஸ் நிலையங்களுக்கு இவற்றை விநியோகிக்ககும் பணியைத் தொடக்கி வைத்தனர்.

கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் சிசிற குமார பொலிஸ் திணைக்களம் சார்பாக இந்த அன்பளிப்புக்களை ஏற்றுக் கொண்டார். கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள செலிங்கோ குழுவினர் அந்தந்த மாவட்டங்களில் இவற்றை தொடர்ந்து முறைப்படி விநியோகிப்பர்.

´இந்த இக்கட்டான நோய் பரவல் காலத்தில் நாட்டு மக்களைக் காப்பாற்றும் வகையில் ஆயிரக்கணக்கான பொலிஸார் தமது உயிர் ஆபத்தையும் பொருட்படுத்தாது களத்தில் நின்று மக்களுக்கு பெரும் சேவாற்றி வருகின்றனர். அதற்கான எமது பாராட்டின் ஒரு அடையாளமே இந்த அன்பளிப்பாகும்´ என்று கூறினார் செலிங்கோ லைஃப் முகாமத்துவப் பணிப்பாளர் துஷார ரணசிங்க.

அரச மருத்துவ நிலையங்களுக்கு அவசியமான உபகரணங்களை தொடர்ச்சியாக அன்பளிப்புச் செய்து வருகின்ற ஒரு நிறுவனமே செலிங்கோ லைஃப். இவ்வாண்டு ஏப்பிரல் மாதம் கம்பனி கொவிட்-19 ஆல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான அதி உயர் சுவாசக் கருவிகள் இரண்டை அரசுக்கு வழங்கியது. இவ்வாண்டு முற்பகுதியில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான முழுமையாகத் திருத்தி அமைக்கப்பட்ட கீமோதெரபி அலகொன்றை வழங்கியது. அதற்கு முன்னர் ஐந்து அரச ஆஸ்பத்திரிகளுக்கு முழு அளவிலான அதி உயர் சிகிச்சை பிரிவு அலகுகளும் வழங்கப்பட்டுள்ளன. கொழும்பில் உள்ள லேடி றிட்ஜ்வே ஆஸ்பத்திரி, தேசிய வைத்தியசாலை, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை, களுபோவிலை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை, கண்டி போதனா வைத்தியசாலை என்பனவற்றுக்கே இந்தப் பிரிவுகள் வழங்கப்பட்டுள்ளன.