கட்டணக் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் வசதியை வழங்குகிறது ComBank Q+ செயலி

கொமர்ஷல் வங்கியின் வாடிக்கையாளர்கள் தமது கடனட்டை டெபிட் கார்ட் அல்லது முற்கொடுப்பனவு அட்டையோடு இணைக்கப்பட்ட ComBank Q+ செயலி மூலமாக கட்டணக் கொடுப்பனவுகளை உடனடியாக மேற்கொள்ளும் வசதி இப்போது ஏற்பட்டுள்ளது. செயலிக்குள்ளேயே கட்டணக் கொடுப்பனவுகளை (In-App Bill Payments) மேற்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே இவ்வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ComBank Q+ செயலியில் ஏற்படுத்தப்பட்ட சமீபத்திய புதுப்பிப்பானது தரவு மீளேற்றங்கள் (data reloads), முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு அலைபேசிகள், நிலையான தொலைபேசி இணைப்புக்கள் பொதுப்பயன் வசதிகள் (utilities), நீரும் மின்சாரமும் (இலங்கை மின்சார சபை, LECO), தொலைக்காட்சிக் கட்டணங்கள் என ஆறு வகையான கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் வசதியை வழங்கியுள்ளது. கல்வி நிறுவனங்கள் காப்புறுதி நிறுவனங்கள் கடனட்டைக் கொடுப்பனவுகள் முற்கொடுப்பனவு அட்டை மீளேற்றம் போன்ற வசதிகள் மிக விரைவில் இச்செயலியில் இணைக்கப்படுமென வங்கி தெரிவித்தது.

ComBank Q+ செயலி ஊடாகக் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு, செயலியில் காணப்படும் ´Bill Payment´ என்பதைத் தெரிவு செய்து மேற்கொள்ள விரும்பும் கொடுப்பனவு வகையை அழுத்தினால், கொடுப்பனவு விவரங்களை வழங்க முடியும். இவ்வாறு இலகுவாக இக்கொடுப்பனவை மேற்கொள்ள முடியும்.

செயலியின் தனிப்பட்ட அடையாள இலக்கம் (PIN) மூலமாக இக்கொடுப்பனவை உறுதிப்படுத்திய பின்னர் தெரிவுசெய்யப்பட்ட கார்ட் இலிருந்து பணம் பற்று வைக்கப்படும். வாடிக்கையாளர்கள் தமது தொடரும் கட்டணக் கொடுப்பனவுகளை ´Favourites´ என்ற tab-இல் சேர்ப்பதன் மூலம், கணக்கு விவரங்களை மீளவும் உட்செலுத்துவதைத் தவிர்க்க முடியும். கட்டணக் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்குத் தனிப்பட்ட அடையாள இலக்கம் தேவைப்படுவதன் காரணமாக பாதுகாப்பான செயன்முறையாக இது காணப்படுகிறது என வங்கி தெரிவித்தது.

இணையக் கொடுப்பனவுகளுக்கு நிகழ்நேரத்தில் புதுப்பிப்புகளை இச்செயலி வழங்குவதோடு, பாவனையாளர்களுக்கு நேயமாக இடைமுகத்தை இச்செயலி கொண்டிருப்பதன் காரணமாக, இலகுவாகப் பயன்படுத்தக்கூடியதாகவும் உள்ளது. அத்தோடு, அநேகமான கட்டண நிறுவனங்களுக்கு கட்டண இலக்கத்தை உறுதிப்படுத்தும் வசதியை இது வழங்குகிறது. உடனடியாகவே பதிவுசெய்யக் கூடியதாக உள்ளமை, கடினமில்லாத கட்டணக் கொடுப்பனவுத் தெரிவுகள், LANKAQR வசதியைக் கொண்டுள்ள வணிக நிறுவனங்களில் பொருட்களையும் சேவைகளையும் கொள்வனவு செய்யும்போது QR குறியீடுகளை ஸ்கேன் செய்து கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் வசதி போன்ற ஏனைய கொடுப்பனவுத் தெரிவுகளையும் கொண்டிருத்தல் உள்ளிட்ட வசதிகளை, ComBank Q+ செயலியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பெறுகின்றனர்.

அன்ட்ரொய்ட், iOS கருவிகளில் செயற்படும் கம்பீரமானதும் அதி நவீனமானதுமான அலைபேசிச் செயலியாக ComBank Q+ காணப்படுகிறது. LANKAQR தர நியமத்தின் கீழ் வெளியிடப்பட்ட முதலாவது QR அடிப்படையிலான கொடுப்பனவுச் செயலியாக இது அமைந்ததோடு, கார்ட்களை வைத்திருப்போருக்கும் வணிகர்களுக்கும் கடினமில்லாத மாற்றுக் கொடுப்பனவு வசதியாக அமையும் வண்ணம் இது வடிவமைக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் தமது கொமர்ஷல் வங்கி மாஸ்டர்கார்ட், விஸா கடனட்டை, டெபிட் கார்ட், முற்கொடுப்பனவு அட்டை போன்றவற்றைப் பயன்படுத்திப் பதிவுசெய்துகொள்ள முடியும்.

உலகின் ஆயிரம் தலைசிறந்த வங்கிகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையின் ஒரே வங்கியான கொமர்ஷல் வங்கி தொடர்ந்து பத்து வருடங்களாக அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இவ்வாண்டு வங்கி அதன் 100 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. 2019ல் 50க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளுர் விருதுகளை வென்றுள்ள கொமர்ஷல் வங்கி இலங்கையில் 268 கிளைகளுடனும் 875 ATM வலையமைப்புடனும் செயற்படுகின்றது.

பங்களாதேஷ் செயற்பாடுகளுக்கு அப்பால் கொமர்ஷல் வங்கியின் கடல் கடந்த செயற்பாடுகள் மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும் நேய்பியுடோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது.