கொமர்ஷல் வங்கியாள் பெருந்தொற்றுப் பாதிப்புகளுக்கு மத்தியிலும் நிலையான அடைவுகளை வெளிப்படுத்தியது

அரசாங்கப் பங்குரிமைச் சான்றிதழ்கள் (securities), அந்நியச் செலாவணி (FX) பரிமாற்ற வர்த்தகம், FX வர்த்தக நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் கிடைத்த அடைவுகள் காரணமாக, கடந்தாண்டின் மூன்றாவது காலாண்டுடன் ஒப்பிடும்போது குறைந்த வட்டி வருமானம், கணிசமானளவு அதிகரித்த வலுக்குறை ஒதுக்கீடுகள் போன்ற கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளை ஓரளவுக்கு மட்டுப்படுத்துவதற்கு கொமர்ஷல் வங்கியால் முடிந்துள்ளது.

இலங்கையின் மிகப்பெரிய தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கி, அதன் துணை நிறுவனங்கள், இணை நிறுவனமொன்று ஆகியவற்றை உள்ளடக்கிய குழுமம், செப்டெம்பர் 30, 2020 அன்று நிறைவடைந்த ஒன்பது மாதங்களில் மொத்தச் செயற்பாட்டு வருமானமாக 55.818 பில்லியன் ரூபாயைப் பதிவுசெய்து, 11.84 சதவீத வளர்ச்சியை அடைந்தது. இக்காலப்பகுதியில் வங்கியின் பிரதான வருமான வகையான வட்டி வருமானம் 1.02 சதவீதம் என்ற குறைவான வீதத்தில் அதிகரித்து 36.796 பில்லியன் ரூபாயை வழங்கிய போதிலும், ஏனைய வருமானத்தை 5.804 பில்லியன் ரூபாயிலிருந்து 12.262 பில்லியன் ரூபாயாக இரு மடங்குக்கு மேல் அதிகரித்து, இந்த அடைவை வங்கி பெற்றிருந்தது.

கொழும்பு பங்குப் பரிவர்த்தனையிடம் சமர்ப்பித்த நிதியியல் அறிக்கைகளின்படி, நிதியியல் சொத்துக்களின் வகையீட்டை அகற்றியதன் (de-recognition) மூலமாக திறைசேரி முதலீடுகளில் கிடைத்த மூலதன வருமானம் 4.658 பில்லியன் ரூபாயாக அமைந்தது. கடந்தாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் பெறப்பட்ட 444.754 மில்லியன் ரூபாயோடு ஒப்பிடும்போது, 10 மடங்குக்கும் அதிகமாக வளர்ச்சியாக இது அமைந்தது. திறைசேரிப் பட்டியல்களிலும் பிணையங்களிலும் பெறப்பட்ட அதிகரித்த வருமானமானது, வர்த்தகத்தில் இழக்கப்பட்ட 294.249 மில்லியன் ரூபாயை ஈடுசெய்து, நிகர வருமானமாக 749.059 மில்லியன் ரூபாயை இந்த ஒன்பது மாதங்களில் பதிவுசெய்தது. FX பரிமாற்ற வர்த்தகத்திலும் ஏனைய அந்நியச் செலவாணி வர்த்தக நடவடிக்கைகளிலும், அதேபோல் இக்காலப்பகுதியில் டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 2 சதவீதத்தால் வீக்கமடைந்ததன் காரணமாகப் பெறப்பட்ட வருமானங்களின் காரணமாகவும், பரிமாற்று இலாபம் 25.2 சதவீதத்தால் அதிகரித்து 6.586 பில்லியன் ரூபாயாகப் பதிவானது.

வட்டி வீதங்கள் குறைவடைந்த நிலையில், வட்டிச் செலவுகளைக் குழுமம் 7.70 சதவீதத்தால் குறைத்து, 56.240 பில்லியன் ரூபாயாக மாற்றியதோடு, இதே காலப்பகுதியில் வட்டி வருமானமானது பெருந்தொற்று நிவாரணமாக வழங்கப்பட்ட வட்டிச் சலுகைகளால் பிரதானமாகப் பாதிக்கப்பட்டு 4.44 சதவீதத்தால் குறைவடைந்து 93.035 பில்லியன் ரூபாயாக அமைந்தது என வங்கி தெரிவித்தது. இதன் காரணமாக, ஆண்டின் முதலாவது பாதியின் முடிவில் வட்டி வருமானமானது 5.71 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், ஒன்பது மாதகாலப் பகுதியின் இறுதியில் வட்டி வருமானமானது 1.02 சதவீதத்தால் முன்னேற்றமடைந்தமை குறிப்பிடத்தக்கதாகக் காணப்படுகிறது. இந்தப் பெரு மாற்றமானது மூன்றாவாது காலாண்டுப் பகுதியில் நிகர வட்டி வருமானம் 14.26 சதவீத்தால் அதிகரித்தமையின் விளைவாகச் சாத்தியப்பட்டிருந்தது.

இதேவேளை, இந்த ஒன்பது மாதங்களில் நிகரக் கட்டணங்களும் தரகுத் தொகையும் 11.97 சதவீத்தால் வீழ்ச்சியடைந்து, 6.760 பில்லியன் ரூபாயாகக் குறைவடைந்திருந்தது. பிரதானமாக வர்த்தகம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளிலும் இலங்கை மத்திய வங்கியால் பணிக்க்கப்பட்டதற்கமைய வங்கியால் அறவிடப்பட்ட கட்டணங்களிலும் அறவீடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட குறைப்பு போன்ற கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்படுத்தப்பட்ட தடங்கல்களால் இது ஏற்பட்டிருந்தது.

இந்த அடைவுகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் தலைவர் திரு. தர்ம தீரசிங்க, ஏனைய வணிகங்களைப் போல வங்கிகளும், பூகோளரீதியாக ஏற்பட்ட பெருந்தொற்றின் தாக்கங்களை எதிர்கொண்டு பயணிக்க வேண்டியுள்ளது. எங்களது ஒன்பது மாதங்களும் அதையே பிரதிபலிக்கின்றன.

வங்கியின் பிரதானமான ´கடன் வழங்கல் எதிர் வைப்பு´ என்ற இயங்கியல் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, முதலீடுகள், வர்த்தகம், சேவைகள், ஏனைய வருமானம் ஈட்டும் நடவடிக்கைகள் ஆகியவற்றைச் சிறப்பான முறையில் முகாமை செய்தமையின் காரணமாக, இலாபம் பாதிக்கப்பட்டாலும், வங்கி தொடர்ந்தும் நிதியியல் ரீதியாகப் பலமாகவும் நிலையாகவும் காணப்படுவதோடு, வெளிப்புறப் பாதிப்புகளைச் சமாளித்துப் பயணிக்கக்கூடியதாக உள்ளது, என்று தெரிவித்தார்.

வங்கியின் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்குக் குழுமம் எடுத்த செயற்பாடுகள் காரணமாக, இந்த ஒன்பது மாதங்களில் அச்செலவுகள் வெறுமனே 2.52 சதவீத்தால் அதிகரித்து, 19.633 பில்லியன் ரூபாயாகக் காணப்பட்டன என, கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. எஸ். ரெங்கநாதன் வெளிப்படுத்தினார். நிகர செயற்பாட்டு வருமானம் 5.50 சதவீதத்தால் குறைவடைந்து 39.085 பில்லியன் ரூபாயாகக் காணப்பட்டது. வலுக்குறை ஒதுக்கீடுகள், ஏனைய செலவுகள் ஆகியன கடந்தாண்டின் முதல் ஒன்பது மாதங்களோடு ஒப்பிடும்போது 95.83 சதவீதத்தால் அதிகரித்து 16.733 பில்லியன் ரூபாயாகக் காணப்பட்டமையின் விளைவாகவே இந்நிலை பிரதானமாக ஏற்பட்டது என அவர் தெரிவித்தார்.

கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக மிக அதிகமாகப் பாதிக்கப்படக்கூடிய துறையாக அடையாளங்காணப்பட்ட சுற்றுலாத்துறைக்கு நாம் மேலதிகமான சலுகைகளை வழங்கியிருந்தோம் என, திரு. ரெங்கநாதன் தெரிவித்தார். தொடர்ந்து அவர், ஆனால் கொமர்ஷல் வங்கியின் சொத்துக்கள் பன்மைப்படுத்தப்பட்ட கட்டமைப்பில் காணப்படுவதன் காரணமாக இக்காலத்தில் ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்கு நாம் ஏனையோரை விடச் சிறந்த நிலையில் இருக்கிறோம் என நம்புகிறோம் எனத் தெரிவித்தார்.

வங்கியின் ஒன்பது மாதகாலக் கணக்குகள் இறுதிசெய்யப்பட்ட பின்னர் பெருந்தொற்றோடு சம்பந்தப்பட்டதாக மற்றுமொரு கடன் தவணை நீடிப்பை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளதை திரு. ரெங்கநாதன் சுட்டிக்காட்டினார். மேலதிகமான இச்சலுகைகளின் தாக்கம் இன்னமும் அறியப்படவில்லை என்பதோடு இறுதிக் காலாண்டுக்கான நிதியியல் அறிக்கைகளில் அது பிரதிபலிக்கப்படும். உயர் வலுக்குறைக் கட்டணங்கள் கடன் பெற்றோருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள பெருந்தொற்றுக்காலச் சலுகைகள் ஆகியன, மீளாய்வுக்கான ஒன்பது மாதங்களில் நிதியியல் சேவைக்கு முன்னரான செயற்பாட்டு இலாபத்தைப் பாதித்துள்ளன. அது 12.42 சதவீதத்தால் குறைவடைந்து 19.452 பில்லியன் ரூபாயாகக் காணப்பட்டது. இதேவேளை, கடன் மீள்செலுத்துகைத் தீர்வை, தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி ஆகியன முறையே ஜனவரி 2020, டிசெம்பர் 2019 ஆகிய காலங்களிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிதியியல் சேவைகள் மீதான வரிகள் 44.11 சதவீதத்தால் குறைவடைந்து 3.060 பில்லியன் ரூபாயாகக் காணப்பட்டன.

இதன் விளைவாக, குறிப்பிட்ட காலத்துக்கான வருமான வரிக்கு முன்னரான இலாபம் 2.10 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து, 16.394 பில்லியன் ரூபாயாகக் காணப்பட்டது. குறித்த காலப்பகுதிக்கான குழுமத்தின் வருமான வரி 5.219 பில்லியன் ரூபாயாகக் காணப்பட்டதோடு, இது 0.15 சதவீத வீழ்ச்சியாகும். மீளாய்வு செய்யப்பட்ட ஒன்பது மாதங்களுக்கான நிகர இலாபம் 11.175 பில்லியன் ரூபாயாக இருந்ததோடு, இது 2.98 சதவீதம் என்ற வீழ்ச்சியை வெளிப்படுத்தியது.

தனிப்பட நோக்கும்போது, கொமர்ஷல் வங்கி வரிக்கு முன்னரான இலாபமாக இந்த ஒன்பது மாதங்களில் 4.43 சதவீத வீழ்ச்சியுடன், 15.566 பில்லியன் ரூபாயை வெளிப்படுத்தியது. இலாபத்துக்குப் பின்னரான இலாபம் 5.60 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து 10.596 பில்லியன் ரூபாயாக அமைந்தது. குழுமத்தின் மொத்தச் சொத்துகளின் அளவு 2019 டிசெம்பர் 31ஆம் திகதியிலிருந்து 254.14 பில்லியன் ரூபாயால் அல்லது 18.04 சதவீதத்தால் அதிகரித்து, 2020 செப்டெம்பர் 30 ஆம் திகதியன்று 1.663 ட்ரில்லியன் ரூபாயாகக் காணப்பட்டது. மொத்தச் சொத்துகள் ஓராண்டு காலப் பகுதியில் பெற்றுக்கொண்ட வளர்ச்சியாக 21.36 சதவீதம் அல்லது 292.730 பில்லியன் ரூபாய் என்ற அளவில் காணப்பட்டது.

நிகரக் கடன்களும் முற்பணங்களும் 2019ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து 2.03 சதவீதத்தால் அல்லது 18.935 பில்லியன் ரூபாயால் வளர்ச்சியடைந்து மீளாய்வு செய்யப்பட்ட காலப்பகுதியில் 949.672 பில்லியன் ரூபாயாகக் காணப்பட்டது. கொவிட்-19 காரணமாகப் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 20 பில்லியன் ரூபாய் பெறுமதியான கடன்களும் இதில் உள்ளடங்குகின்றன. இதற்கு முன்னைய 12 மாதகாலப் பகுதியில் நிகரக் கடன் புத்தக வளர்ச்சியானது 5.51 சதவீதம் என்ற ஓராண்டுகாலப் பகுதிக்கான வளர்ச்சியை வெளிக்காட்டிரூபவ் 49.554 பில்லியன் ரூபாயாகக் காணப்பட்டிருந்தது.

இந்த ஒன்பது மாதங்களில் மொத்த வைப்புகள் 152.774 பில்லியன் ரூபாய் அல்லது 14.29 சதவீதத்தால் வளர்ச்சியடைந்து செப்டெம்பர் 30, 2020 அன்று 1.222 ட்ரில்லியன் ரூபாயாகக் காணப்பட்டன. இது, மாதாந்தம் 16.975 பில்லியன் ரூபாய் என்ற சராசரி வளர்ச்சியைக் காண்பித்தது. செப்டெம்பர் 30, 2019 இலிருந்து குழுமத்தின் வைப்பு வளர்ச்சியாக 174.619 பில்லியன் ரூபாய் அல்லது 16.68 சதவீதம் காணப்பட்டதோடு, இது மாதாந்த சராசரி வளர்ச்சியாக 14.551 பில்லியன் ரூபாயைக் காண்பித்தது.

x