கொவிட் -19 இன் பரவலைத் தடுக்க CHEC கொழும்பு துறைமுக நகரம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறது

நவம்பர் 11, 2020 அன்று, கொழும்பு 13, கொட்டாஞ்சேனையில் உள்ள மற்றொரு CHEC செயற்திட்டத்தில் பணிபுரிவதுடன், கொழும்பு துறைமுக நகர கட்டுமானத் தளத்தில் உள்ள தங்குமிட வசதிகளில் ஒன்றில் தற்காலிகமாக வசித்து வந்த இரண்டு உள்ளூர் தொழிலாளர்களுக்கும் மற்றும் நான்கு சீனர்களுக்கும் அனைத்து ஊழியர்களுக்குமான சோதனையின் போது கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தங்குமிட வசதியானது குறிப்பிட்ட அந்த செயற்திட்டத்திற்காக பணியாற்றிய தொழிலாளர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்பதுடன் கொழும்பு துறைமுக நகர தளம் அல்லது அதன் ஊழியர்களுடன் எந்தவொரு தொடர்பையும் இவர்கள் பேணியிருக்கவில்லை மற்றும் இங்கு பணி புரியவுமில்லை என பொதுமக்களுக்கு இத்தால் அறியத்தரப்படுகிறது.

தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கூறிய தங்கும் விடுதி உடனடியாகப் பூட்டப்பட்டதுடன், தளத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செல்வதும் தடைசெய்யப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி தளத்திலுள்ள தங்குமிட வசதிகள் மற்றும் பிற பகுதிகளும் தொற்று நீக்கம் செய்யப்பட்டன. கொழும்பு துறைமுக நகரம் அன்றாட நடவடிக்கைகளைத் தொடங்கியதிலிருந்து, அனைத்து துறைமுக நகர பணியாளர்களும் இந்த செயற்திட்டத்தில் பணியாற்றுவதற்கு முன்பு பி.சி.ஆர் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்தும் எழுந்தமான அடிப்படையில் அவர்களுக்கு பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொற்று உள்ளதாக இதுவரை எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையில் தொற்று ஏற்பட்டுள்ள முதலாவது நபர் கண்டு பிடிக்கப்பட்டதிலிருந்து, துறைமுக நகரம் அரசாங்க விதிமுறைகளைப் பின்பற்றி, தள கட்டுமானத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இயக்கி, வைரஸ் பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. தற்காலிக தங்கும் விடுதி மற்றும் பணிபுரியும் தளத்திற்கு இடையில் போக்குவரத்து ஏற்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகள் இந்த வெளி பணியாளர்கள் மற்றும் துறைமுக நகர பணியார்களுக்கிடையில் தொடர்பு ஏற்படாமல் அல்லது இடையில் நிறுத்தப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படுகின்றன.

கொழும்பு துறைமுக நகரம் தொடர்ந்தும் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து, பொதுமக்களுக்கு பொருத்தமான மற்றும் சரியான நேரத்தில் தகவல் விபரங்களை வழங்கும். வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துறைமுக நகரம் முன்னெடுத்துள்ளதுடன், இலங்கை அரசாங்கம், ஜனாதிபதி செயலகம், சுகாதார அதிகாரிகள், முன்னிலை பணியாளர்கள் மற்றும் பிறருக்கு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மிகுந்த மற்றும் தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் வழங்கும்.

x