வீடு, நில உடைமைகளில் முதலீடு செய்வதற்கு இது சிறந்த காலப்பகுதியா

கொழும்பு மத்தியில் வீடு, நில உடைமைகளை கொள்வனவு செய்வது என்பது பெரும்பாலான இலங்கையர்களுக்கு சில காலமாக நினைத்துக்கூடப் பார்க்க முடியாததாக அமைந்துள்ளது. ஆனாலும், என்றாவது ஒருநாள் அவ்வாறான முதலீட்டை மேற்கொள்ளும் எதிர்பார்ப்பை கொண்டிருப்பவர்களுக்கு தற்போது சிறந்த காலமாக அமைந்துள்ளது.

இலங்கையில் வட்டி வீதங்கள் மிகவும் குறைந்த மட்டங்களில் காணப்படுகின்றன. நிலையான வருமானமீட்டக்கூடிய தெரிவுகள் பெருமளவு குறைந்துள்ளன. வட்டி வீதங்கள் வீழ்ச்சியடைந்துள்ளதால் அதிகளவு தங்கியிருக்கக்கூடிய மற்றும் பாதுகாப்பான நிலையான வைப்புகள் என்பதும் கவர்ச்சியற்றுள்ளன. எனவே உங்கள் பணம் தொடர்ந்து வளர்ச்சியடைய வேண்டுமாயின் அல்லது அதன் பெறுமதி இறக்கமடையாமல் பேண வேண்டுமாயின் வீடு நில உடைமைகளில் முதலீடு செய்வது என்பது சிறந்த தெரிவாக அமைந்திருக்கும்.

வீடு நில உடைமைகளில் முதலீடு செய்வது என்பது இடர் இல்லாமலில்லை. குறிப்பாக நெரிசல் மிக்க சந்தைப்பகுதியில் தமக்கு காணப்படும் தெரிவுகளில் முதலீட்டாளர்கள் கவனமான தெரிவை மேற்கொள்ள வேண்டும். நகரின் வளர்ச்சி தொடர்பான புரிந்துணர்வு அவர்களுக்கு உதவியாக அமைந்திருக்கும்.

கொழும்பின் எதிர்காலம்

கொழும்பில் சுமார் 560,000 பேர் வசிக்கின்றனர் (கொழும்பு மாநகர வலயத்தினுள்), மேலும் தினசரி அரை மில்லியன் மக்கள் நகரினுள் பிரயாணிக்கின்றனர். போக்குவரத்து நெரிசல் அதிகளவு காணப்படுகின்றது. ஆனாலும், மக்கள் ஏன் தமது வாழ்நாளின் பல வருடங்களை போக்குவரத்து நெரிசலில் கழிக்க தெரிவு செய்கின்றனர்?

நாட்டின் பிரதான மையமாக கொழும்பு அமைந்துள்ளது என்பதில் எவ்வித மாற்றங்களும் இல்லை. உயர் சம்பளங்களுடனான பணிகள் முன்னணி பாடசாலைகள் வைத்தியசாலைகள் மற்றும் விற்பனைத் தொகுதிகள் போன்ற பல சமூக உட்கட்டமைப்புகள் கொழும்பில் காணப்படுகின்றன. மேலும் பல தசாப்த காலப்பகுதிக்கு இந்த நிலை தொடர்ந்து நிலவும்.

துரதிர்ஷ்டவசமாக மட்டுப்படுத்தப்பட்ட சகாயத்தன்மை கடன் வழங்கலில் குறைந்தளவு புத்தாக்கம் உயர்ந்து செல்லும் நிர்மாணச் செலவுகள் மற்றும் போதியளவு கொள்கை வழிகாட்டல்கள் இன்மை போன்றன கொழும்பில் வீடொன்றை கொண்டிருக்கும் பலரின் கனவை சிதறடிக்கச் செய்துள்ளன. எனவேரூபவ் பலர் தினசரி போக்குவரத்து நெரிசலில் தமது பொழுதை செலவிட்டு வாழப் பழகியுள்ளனர்.

மறுசீரமைக்கப்பட்ட பொதுப் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு சேவைகள் போன்றன இந்த நிலையில் பெருமளவு மாற்றத்தை ஏற்படுத்தினாலும் இவை சாத்தியமாவதற்கு பல காலங்கள் செல்லலாம். எந்த சந்தர்ப்பத்திலும் கொழும்பில் சொத்துக்களின் விலை தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லும் என்பதை உறுதியாகக் குறிப்பிடலாம். உங்களிடம் முதலீடு செய்ய பணம் இருக்குமாயின் அதனூடாக நீங்கள் இலாமீட்டிக் கொள்ள முடியும்.

தொற்றுப் பரவல் சூழலிலும், கொழும்பினுள் மக்கள் நடமாட்டத்துக்கு ஏதுவான சமூகப்பொருளாதாரக் காரணிகள் வேகமாக மாற்றமடையாது. பொருளாதாரங்களுக்கு வளங்கள் மற்றும் சேவைகளை இலகுவாக அணுகுவதற்கு (அல்லது விநியோகிப்பதற்கு) நகரங்கள் இலகுவானதாக அமைந்துள்ளன.

அடைமானத் தீர்வு

சௌகரியத்தை அணுகுவதற்கு அணுகல் தெரிவு மற்றும் ஆற்றலை அடைமானங்கள் வழங்குகின்றன. எனவே வீட்டு நிதித் துறை புத்தாக்கமடைவது என்பது மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது.

யூனியன் பிளேஸ் பகுதியில் நிர்மாணித்து வரும் நவீன வசதிகள் படைத்த தொடர்மனைத் தொகுதியான TRI-ZEN இல் சொத்துக் கொள்வனவை ஊக்குவிக்கும் வகையில் ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸில் நாம் அடைமானங்கள் தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்துகின்றோம். அண்மையில் நாம் அறிமுகம் செய்திருந்த புத்தாக்கமாக Freedom Mortgage ஐ குறிப்பிடலாம். இதனூடாக வீட்டுக் கொள்வனவாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் நெகிழ்ச்சித்தன்மையை வழங்கக்கூடியதாக உள்ளது.

Freedom Mortgage ஊடாக, தமது அடைமானத்தின் மீது இரண்டு வருடகால வட்டியில்லாத் தவணை உறுதி செய்யப்படுகின்றது. வாடிக்கையாளர் 20% தொகையை ஆரம்பத்தில் செலுத்துவதுடன், எஞ்சிய 80% ஐ வங்கி செலுத்தும். அந்த ஆரம்பக் கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டதும், மேலும் 2 வருட காலப்பகுதிக்கு வாடிக்கையாளர் எவ்விதமான கொடுப்பனவுகளையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. 2 வருடங்களின் பின்னர், வட்டிக் கொடுப்பனவு ஆரம்பமாகும். முதல் மீளச் செலுத்தல் அதன் பின்னர் 3 வருடங்களின் பின்னர் ஆரம்பிக்கும்.

கொமர்ஷல் வங்கியிடமிருந்து 5 வருடங்களுக்கு வட்டிவீதம் 8.75% ஆக அல்லது 10 வருடங்களுக்கு 9% ஆக அமைந்திருக்கும். இந்த காலப்பகுதியில் தொடர்மனையை விற்று, முழு இலாபத்தைப் பெற்றுக் கொள்வது என்பது சாத்தியமான தெரிவாக அமைந்துள்ளது.

முதலீட்டை மேற்கொள்ளும் போது அமைவிடம் மற்றும் காலம் முக்கியமானவை தொற்றுப் பரவலை மனிதகுலம் கடந்து செல்லும், அவ்வாறே கொழும்பும் கடந்து செல்லும். தொற்றுப் பரவல் காரணமாகவும், வெளிநாட்டவர்களின் வருகை வீழ்ச்சியினாலும், வாடகைப் பெறுமதிகளில் தற்காலிக வீழ்ச்சியை நாம் அவதானித்த போதிலும், இதுவும் மீண்டும் உயர்வடைவதை எம்மால் அவதானிக்க முடியும்.

வாய்ப்புகள் தொடர்பில் கவனம் செலுத்துவது முக்கியமானதாகும். ஆம், வட்டி வீதங்கள் குறைந்துள்ளதால் நிலையான வைப்புகள் மற்றும் இதர நிலையான வருமானமளிக்கக் கூடிய மூலங்கள் இன்று பணவீக்கத்திலிருந்து சற்று உயர்ந்த நிலையில் பேண உதவுகின்ற நிலையில் அடைமான வீதங்களும் குறைவாக காணப்படுகின்றன. வங்கிகளுக்கு கடன் வழங்குவதற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதால் வீட்டு அடைமானக் கடன்களில் சிறந்த பெறுமதியைப் பெறக்கூடியதாக இருக்கும்.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சொத்துக்களை நாடுவது என்பது கடினமான சூழலில் சௌகரியம் மற்றும் வாடகைக்கு வழங்கும் தன்மை ஆகியவற்றையும் கவனத்தில் கொண்டு அவற்றில் முதலீடு செய்ய வேண்டும். உறுதியான கடந்தகால செயற்பாடுகள் மற்றும் சரிவை சமாளிக்கக்கூடிய வடிவமைப்பாளர் ஒருவரை தெரிவு செய்வதும் முக்கியமானதாகும். குறிப்பாக நிர்மாணிக்கப்படும் நிலையிலுள்ள சொத்தாக இருப்பின் இது முக்கியமானதாகும். உங்கள் நிதி இருப்பு மற்றும் வாழ்க்கை முறைக்கு பொருத்தமான தீர்வை தெரிவு செய்வதும் முக்கியமானதாகும்.

சரியான இடத்தில் சரியான குடியிருப்பை நீங்கள் தெரிவு செய்து மத்தியளவு காலப்பகுதியில் வருமானமீட்ட எதிர்பார்ப்பவராயின் தற்போது நிலவும் நெருக்கடி சூழலை உங்களால் கடந்து செல்ல முடியும் என்பதுடன் இலாபமீட்டக் கூடியதாகவும் இருக்கும்.

x