அபிலாஷைகளை வலுவூட்டும் வெற்றிகரமான 25 ஆண்டுகளை CDB கொண்டாடுகிறது

பெரியளவிலானதும் இலங்கையிலுள்ள வங்கியல்லாத நிதி நிறுவனங்களுள் மிக வெற்றிகரமானவற்றுள் ஒன்றானதும் மற்றும் அறிவுக்கூர்மையுள்ளதும் நிலைபேறானதுமான இலங்கைக்கு அதிகாரமளிப்பதற்கான தனது அர்ப்பணிப்பினால் பலப்படுத்தப்பட்டுள்ளதுமான சிட்டிசன் டெவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பீஎல்சீ (CDB), வெற்றிகரமான 25 ஆண்டுகளை 2020 செப்டம்பர் 7 இல் கொண்டாடுகின்றது. இலங்கையின் நிதியியல் அமைப்பினை உருமாற்றும் குறிக்கோளை நோக்கி செயலாற்றிக்கொண்டு CDB இனது பயணம் கடந்த இரண்டரை தசாப்தங்களாக உண்மையிலேயே குறிப்பிடத்தக்கதாக அமைந்திருக்கின்றது.

நாடெங்கிலுமுள்ள அனைத்து சமூக அடுக்குகளிலுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி அண்ணளவாக ரூ 100 பில்லியனை சொத்து அடிப்படையாகக் கொண்டு இலங்கையிலுள்ள வங்கியல்லாத நிதி நிறுவனங்களுள் பெரியளவிலானவற்றுள் ஒன்றாக CDB இன்று வளர்ந்திருக்கிறது. நாடு பூராகவும் 71 கிளைகளையும் 1,700 ஊக்கம் பெற்ற தனிநபர்களையும் கொண்டு இந்நிறுவனம் அதன் இறக்கைகளை விரித்துள்ளது. இந்நிறுவனம் வெற்றியை நோக்கிய தனது அர்ப்பணிப்பை நிலைநாட்டி 2019 இல் மதிப்புமிகு பிஸ்னஸ் டுடே முதல் 30 (Business Today Top 30) இல் தனது இடத்தை கைப்பற்றியது.

CDB இனது நிர்வாக பணிப்பாளர் / தலைமை நிர்வாக அதிகாரி மஹேஷ் நாணயக்கார 25 வருட பயணத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் “CDB தனது 25 ஆண்டுகால வெற்றிப் பயணத்தைக் கொண்டாடும் இன்று இத்தருணத்தில் நான் உண்மையாகவும் தாழ்மையுடனும் பெருமை கொள்கிறேன். கடந்த இரண்டரை தசாப்தங்களுக்கு மேலாக பல்வேறு சவால்களையும் தாண்டி சிறந்தவற்றுள் ஒன்றாக எமது இடத்தைக் கைப்பற்றுவதற்கு உதவிய சிறந்த செயல்நோக்கத்துடனும் உறுதியுடனும் CDB அணி முழுமுனைப்புடன் முன்னேறிச் சென்றது. தைரியம் நிறைந்த எமது முயற்சிகளை மீள உறுதிசெய்யும் வகையில் இந்நிறுவனம் அனைத்து இலங்கையர்களதும் அபிலாஷைகளை வலுவூட்டுவதற்கான சிறந்த நிதியியல் தீர்வுகளை வழங்குவதில் ஒற்றை எண்ணம் கொண்ட கவனத்துடன் வெற்றிகரமான நிறுவனமாக தொடர்ந்தும் வளர்ச்சியடைகின்றது.´

´´CDB தனது மக்களில் நம்பிக்கை கொண்டுள்ளது. மேலும் அவர்களை சிறந்த சாதனையாளர்களாக மாற்றுவதற்கு இந்நிறுவனம் முதலீடு செய்துள்ளது. நாம் பணிக்கமர்த்தியுள்ளவர்களில் நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் ஒரு விளைவாக இன்று CDB தனது பெயரில் பல்வேறு பாராட்டுக்களையும் பெற்று இந்நாட்டின் வங்கியல்லாத நிதி நிறுவனங்களுள் முதல் ஐந்து நிறுவனங்களுள் ஒன்றாக உள்ளது. பூகோளரீதியான பெருந்தொற்றையும் பொருட்படுத்தாது இத்தருணத்திற்கான நிதியியல் தேவைகளுக்குப் பொருந்தக்கூடியவாறு தனது தயாரிப்புகளையும் சேவைகளையும் ஏற்றுக்கொண்டதனாலும் மாற்றிக்கொண்டதனாலும் CDB இனால் 2020 இல் தனிச்சிறப்புவாய்ந்த நிதியியல் விளைவுகளை அறிக்கையிடக் கூடியதாகவிருந்தது.

இவ்வெற்றிக்களிப்புடைய மைல்கல்லை கொண்டாடுகையில் அடுத்த தசாப்தத்திற்கான எமது இலக்கு ஓர் அறிவுக்கூர்மையுள்ள நிலைபேறான இலங்கையை கட்டியெழுப்புவதாகும். எம் முன்னாலுள்ள எந்தவொரு தடையையும் எதிர்கொள்வதற்கும் நாம் தயாராக இருப்பதுடன் எமது வெற்றி நடையை தொடர்ந்தும் கொண்டுசெல்ல உறுதிபூண்டுள்ளோம்´ என அவர் மேலும் தெரிவித்தார்.

நிலைபேறுதன்மை என்பது இந்நிறுவனத்திற்குள்ளேயான வளர்ச்சியின் முக்கிய தூண்களில் ஒன்று என்பதுடன் சிறுவர் சுகாதாரம் மற்றும் கல்வி சமூக வலுவூட்டல் மற்றும் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பு என்பவற்றை மேம்படுத்துவதற்காக கடந்த வருடங்களில் CDB பல்வேறு முன்னெடுப்புக்களைக் கொண்டு நிலைபேறுதன்மையை ஏற்றுக்கொண்டுள்ளது. CDB இல் நிலைபேறுதன்மையானது வெறும் நன்கொடைகளுக்கும் அப்பால் சென்று குறிக்கோளை ஆதரிப்பதற்காக தனது வியாபார மாதிரியை அடிமட்டத்திலிருந்து மாற்றுவதிலும் மேம்படுகின்றது. இக்குறிக்கோளை நோக்கிய நிறுவனத்தின் அர்ப்பணிப்பு மற்றும் ரூடவ்டுபாட்டின் விளைவாக CDB தென்னாசியாவில் ISO 14064 -1 கார்பன் உறுதிசெய்யப்பட்ட முதலாவது நிதி நிறுவனமானது.

தொடர்ந்து கொண்டிருக்கும் முயற்சிகள் 2019 சிலோன் சாம்பர் (Ceylon Chamber) இனால் நிலைபேறான கூட்டாண்மைகளுக்கான விருது வழங்கும் விழாவில் இலங்கையிலுள்ள சிறந்த கூட்டாண்மைகளில் முதல் பத்து நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது உள்ளடங்கலாக பல்வேறு பாராட்டுக்களை இந்நிறுவனத்திற்கு ஈட்டித் தந்திருக்கின்றன.