ஐடியல் மோட்டார்ஸ் உடன் இணைந்து வசதியான லீசிங் தீர்வுகளை வழங்கும் செலான் வங்கி

மஹிந்திரா மோட்டார் வாகனங்களை வாங்க விரும்பும் நுகர்வோருக்கு லீசிங் குத்தகை தீர்வுகளை வழங்குவதற்காக, ஐடியல் குழுமத்தின் துணை நிறுவனமும், இலங்கையில் மஹிந்திரா மோட்டார் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தருமான ஐடியல் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் செலான் வங்கி கூட்டுசேர்ந்தது.

செலான் லீசிங் மூலம் மோட்டார் கார்கள், இலகுரக டிரக்குகள், கனரக வணிக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்கள் உள்ளிட்ட மஹிந்திரா வாகனங்கள் கொள்வனவு செய்ய தகுதியான வாடிக்கையாளர்களுக்கு இந்த கூட்டாண்மை மூலம் சிறப்பு வட்டி விகிதங்கள் மற்றும் இலவச வாகன பதிவு, 1 வருடம் அல்லது 50,000 கிலோமீட்டர் வரை உத்தரவாதம், ரூ. 10,000 முதல் ரூ. 50,000 வரை சிறப்பு கொள்முதல் தள்ளுபடிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீட்டு கூட்டாளர்கள் மூலம் சிறப்பு காப்புறுதி வெகுமதிகள், அபல்லோ டயர்களுக்காக 20% தள்ளுபடி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட செலான் க்ரெடிட் கார்டுகள் ஆகிய சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலே குறிப்பிட்டுள்ள நன்மைகளுக்கு மேலதிகமாக, குறைந்தபட்ச ஆவணங்களுடன் நுகர்வோரின் கொடுப்பனவு திறனுக்கு ஏற்றவாறு தனிப்பயனாக்கப்பட்ட லீசிங் கட்டமைப்புகளை வழங்க செலான் குழு தயாராக உள்ளது. செலான் வாடிக்கையாளர்களுக்கு இப்போது அதிக வருமானம் உள்ள மாதங்களில் அதிக வாடகை அல்லது மொத்தமாக பணம் செலுத்தும் வாய்ப்பும், சராசரி வருமானம் பெரும் மாதங்களில் குறைந்த அல்லது வழக்கமான வாடகையும் செலுத்த வாய்ப்பு உள்ளது.தேசம் மெதுவாகவும் சீராகவும் இயல்பு நிலைக்கு திரும்பும் இந்த நேரத்தில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், புதிய தொழில்முனைவோராக முன்னேற வாய்ப்புகளைத் தேடும் நுகர்வோருக்கும் இந்த வாய்புக்கள் தனித்தனியாக கட்டமைக்கப்பட்டுள்ளன.

அன்புடன் அரவணைக்கும் வங்கி, செலான் வங்கி, அதிநவீன தொழில்நுட்பம், புதுமையான தயாரிப்புகள் மற்றும் வகுப்பில் சிறந்த சேவைகள் மூலம் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு உன்னத வங்கி அனுபவத்தை வழங்குவதற்கான தொலைநோக்குடன் செயல்படுகிறது. சிறிய மற்றும் நடுத்தர, சில்லறை மற்றும் நிறுவனங்கள் என வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வங்கி, 172 கிளைகள் மற்றும் நாடு முழுவதும் பரந்துள்ள 215 ATM களைக் கொண்ட வலையமைப்புடன் அதன் கால்தடத்தை விரிவுபடுத்தியுள்ளது. பிற்ச் மதிப்பீடுகளால் செலான் வங்கி, தேசிய நீண்டகால மதிப்பீட்டை ‘A (LKA)’ என ஒப்புதல் அளித்து, செயல்திறன் சிறப்பைக் கொண்ட நிதி ரீதியாக நிலையான அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்பரன்சி குளோபல் நிறுவனத்தால் நிறுவன அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மைக்காக பொது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில், செலான் வங்கி இரண்டாவது இடத்தைப் பிடித்தது, மேலும் வங்கி இப்போது S&P Dow Jones SL 20 குறியீட்டின் ஒரு பகுதியாகும். இச்சாதனைகள் செலான் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் அனைத்து முயற்சிகளிலும் சிறந்து விளங்குவதற்கான உறுதியற்ற அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். செலான் வங்கியின் நிதி பொருட்கள் மற்றும் சேவைகளைப் பற்றிய மேலும் தகவலுக்கு www.seylan.lk ஐ அணுகுங்கள்.

ஐடியல் குழுமம் ஆரம்பத்தில் இலங்கையில் இலகுரக டிரக்குகள் பிரிவில் செயல்படத் தொடங்கியது, பின்னர் அதன் வரம்பை தனிப்பட்ட வாகனப் பிரிவுக்கு விரிவுபடுத்தியதுடன் மஹிந்திரா KUV 100 வாகனத்தை இலங்கையில் பாகங்கள் ஒன்று திரட்டி (assemble) வெளியிட்டனர்.ஒப்பிடமுடியாத விற்பனைக்கு பிந்தைய சேவை மற்றும் முன்னணி தொழில்துறை நிபுணத்துவத்துடன் கூடிய ஐடியல் குழுமம், மோட்டார் வாகனங்களை ஒன்று திரட்டல், இறக்குமதி செய்தல் மற்றும் விநியோகித்தல், வாகனங்கள் விற்பனைக்கு பிந்தைய சேவை, பல வர்த்தக நாமங்களுக்கு கீழான உதிரி பாகங்கள் இறக்குமதி மற்றும் பல சேவைகளில் நிபுணத்துவம் பெற்றது. மஹிந்திரா மற்றும் ஐடியல் கூட்டாண்மை குறுகிய காலத்திற்குள் நாட்டிற்குள் 55% சந்தைப் பங்கைக் கொண்டு வந்துள்ளது, மேலும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையுடன் முன்னேறிச் செல்கிறது. ஐடியல் குழுமத்தின் துணை நிறுவனமான ஐடியல் மோட்டார்ஸ், இலங்கை முழுவதும் அதன் நாடளாவிய Ideal First Choice சேவை மையங்கள், விற்பனை ஷோரூம்கள், உதிரி பாகங்கள் விநியோகஸ்தர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சேவை விநியோகஸ்தர்கள் ஆகியோருடன் ஒரு பெரிய கால் தடம் பதித்துள்ளது. தயாரிப்புகள் மற்றும் சேவைகள் குறித்த கூடுதல் தகவலுக்கு, www.idealmotors.lk ஐப் பார்வையிடவும்.