கொமர்ஷல் வங்கியுடன் கைகோர்த்துள்ள மொபிடெல்

mCash வர்த்தகர்கள் QR அடிப்படையிலான கொடுப்பனவுகளை ஏற்றுக் கொள்ளும் வசதிகளை வழங்க கொமர்ஷல் வங்கியும் மொபிடெல்லும் பங்குடமை ஒன்றை ஏற்படுத்தி உள்ளன. இதன்படி LANKAQR இல் பதிவு செய்யப்பட்டுள்ள எந்தவொரு நடமாடும் செயலி ஊடாகவும் கொமர்ஷல் வங்கியின் அதி நவீன QR Plus இயந்திரத்தைப் பயன்படுத்தி கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்தப் பங்குடமையானது வர்த்தகர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அதி உச்ச வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் கொடுப்பனவுக்கான நேரம் குறைக்கப்பட்டு பாதுகாப்பானதும் விரைவானதும் ஆற்றல் மிக்கதுமான ஒரு தளம் அவர்களது கை விரல்களுக்குள் கொண்டு வரப்படுகின்றது.

mCash உடனான LANKAQR இன் அறிமுகம் சிறிய வர்த்தகம் முதல் பெரிய அளவிலான தொழில்முயற்சிகளுடைய அஊயளா வர்த்தகங்களுக்கு LankaQR, Visa QR அல்லது மாஸ்டர் பாஸ் ஆதரவுடன் கூடிய QR கொடுப்பனவு நடமாடும் செயலி ஐப் பாவிக்கும் எந்தவொரு வாடிக்கையாளரிடமிருந்தும் எந்தவொரு கொடுப்பனவையும் பெற்றுக் கொள்ள வழியமைக்கின்றது.

mCash வர்த்தகர்களால் வழங்கப்படும் LANKAQR குறியீடுகள் லங்காபே விஸா மற்றும் மாஸ்டர் கார்ட் வலையமைப்பின் ஊடாக வழங்கப்படும் கொடுப்பனவுகளை ஏற்றுக் கொள்ளும். இதன்மூலம் சந்தைக்கு விடப்படும் முழு அளவிலான LANKAQR குறியீடாக இது அமைகின்றது. இந்த QR குறியீடுகள் LankaPay இன் உத்தரவாதம் பெற்ற ஏனைய பிரயோகங்களுடனும் முழு அளவிலான இணக்கப்பாடு கொண்டதாகும்.

வாடிக்கையாளர்கள் வர்த்தகர்களிடம் உள்ள QR குறியீட்டை மிக இலகுவாக ஸ்கேன் செய்து தமக்கு விருப்பமான ஒரு வலையமைப்பின் ஊடாக கைடயக்க அடிப்படையிலான QR கொடுப்பனவின் மூலம் தங்களது கொடுப்பனவுகளை செய்து கொள்ளலாம். இந்தக் கொடுக்கல் வாங்கலானது கொமர்ஷல் வங்கியின் Q Plus பொறிமுறையூடாகவும் அஊயளா ஊடாகவும் செயல்படுத்தப்படும். இவை மிகக் குறுகிய காலத்தில் விரைவாகவும் பாதுகாப்பாகவும் இணையவழியூடாகப் பூர்த்தி செய்யப்படுகின்றன.