உலகின் முன்னிலை Hybrid Storage Inverter உற்பத்தியாளரான GoodWe- நிறுவனத்துடன் Brantel

முன்னணி தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனமான Brantel Lanka (Pvt) Limited, உலகின் கலப்புச் சேமிப்பு நேர்மாற்றி (hybrid storage inverter) உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நிறுவனமான ´GoodWe´ உற்பத்திகளை இலங்கையில் விநியோகிப்பதற்கான உரிமையைப் பெற்றுள்ளது. இதன்மூலம் Brantel நிறுவனம் இன்னொரு முன்னணித் தொழில்நுட்ப நிறுவனத்தைத் தன்னுடன் இணைத்துக்கொண்டுள்ளது.

வலையமைப்பில் இணைக்கப்பட்ட (grid-connected) Hybrid கட்டமைப்புக்கள் பகலில் சூரியக்கலங்கள் மூலம் உருவாக்கப்பட்ட மின்சக்தியை மின்கலங்களில் சேமித்து இரவு நேரத்தில் பயன்படுத்த வழிவகுக்கின்றன. சேமிக்கப்பட்ட சக்தி இல்லாமல் போனதும் தேசிய மின் வலையமைப்பிலிருந்து மின்சாரம் பயன்படுத்தப்படும். இதன்மூலமாக இரண்டு தெரிவுகளிலிருந்தும் சிறப்பானவற்றை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வழியேற்படுகிறது. இதன் சிறப்பு என்னவெனில் முழுமையான மின் துண்டிப்புகள் ஏற்படும்போது இது மிகவும் பயனுள்ளதாக அமையுமென Brantel தெரிவித்தது.

உலகின் Hybrid Inverter சந்தையில் 15 சதவீதத்துக்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ள GoodWe நிறுவனத்தின் அதிகாரமளிக்கப்பட்ட விநியோகிஸ்தர் என்ற அடிப்படையில் வலையமைப்பில் இணைக்கப்பட்ட சூரியக்கலப் (on-grid solar) பயன்பாட்டுக்கு மாற்றான தீர்வை தேடும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக இந்தக் Hybrid Inverter களைக் கையிருப்பில் வைத்திருக்குமென Brantel நிறுவனம் தெரிவித்தது.

இந்தப் பங்குடைமையானது இரண்டு நிறுவனங்களுக்குமே புதிய யுகத்தை ஆரம்பிக்குமென நம்பிக்கை தெரிவித்த GoodWe நிறுவனத்தின் இந்தியாவுக்கும் இலங்கைக்குமான விற்பனைப் பணிப்பாளர் திரு. ஜேம்ஸ் ஹோவ் எமது Inverter களின் நீண்டகாலச் செயற்பாட்டுடன் எமது பயனாளிகளுக்கான தொடர்ச்சியானதும் உறுதியானதுமான ஆதரவினை வழங்குவதன் காரணமாகச் சிறந்த வணிகக்குறிக்கான பெயரைப் பெற்றுள்ளதுடன் இலங்கைச் சந்தைக்காக, Brantel நிறுவனத்துடன் பங்குடைமை ஒன்றை ஆரம்பித்துள்ளமை குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கையில் சிறந்த நம்பகமான செயற்பாடுகளுடன் கூடிய மதிப்புமிக்க விநியோகிஸ்தராக Brantel காணப்படுகிறது. GoodWe உற்பத்திகளின் முகவராக அவர்கள் செயற்படுவது மாத்திரமன்றி நாடு முழுவதிலும் எமது Inverter களுக்கான உள்நாட்டுச் சேவைகளையும் வழங்குவர் எனத் தெரிவித்துள்ளார்.

மூன்று கிலோவாற்றிலிருந்து (3 kW) 100 கிலோவாற்று (100 kW) வரையிலான சேமிப்பு வசதிகளைக் கொண்ட ஒரு முனை (single-phase), மும்முனை (three-phase) ஆகியவற்றையும் உயர் மின்னழுத்தத்தையும் தாழ் மின்னழுத்தத்தையும் அதேபோல் நேரோட்டம் (DC), ஆடலோட்டம் (AC) ஆகியவற்றோடு இணைந்த retrofit தீர்வுகளை வழங்கும் GoodWe இத்தொழிற்றுறையில் மிக முழுமையான சேமிப்புத் தீர்வுகளை வழங்கும் நிறுவனமாக உள்ளது.

GoodWe நிறுவனத்தின் Hybrid Storage Inverter களுள் Residential Inverter வர்த்தகத் தேவைகளுக்கான கூரையில் பொருத்தும் Inverter கள் ஆகியவற்றை Brantel நிறுவனம் விநியோகிக்கும். வலையமைப்பில் இணைந்திருக்கும் Solar Inverter களில் உலகில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ஜேர்மனியின் SMA Solar Technology AG நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட சூரியக்கல Solar Inverter களையும் Brantel விநியோகிக்கிறது.

2,000 க்கும் மேற்பட்ட வணிக வாடிக்கையாளர்களுக்கான தொழில்நுட்ப பெறுமதிசேர் சேவைகளை Brantel நிறுவனம் வழங்குகிறது. விற்பனை முறைமைகளை இலகுபடுத்துவதற்காகவும் துரிதப்படுத்துவதற்காகவும் உலகம் முழுவதிலுமுள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் Brantel இணைந்து செயற்படுகிறது. கடந்த 17 ஆண்டுகளாகத் தனது வாடிக்கையாளர்களுக்கு நிபுணத்துவ விற்பனைகளையும் தொழில்நுட்ப ஆதரவையும் நாடு முழுவதிலும் காணப்படும் தனது கிளைகள் மூலமாகவும் முகவர்கள் மூலமாகவும் Brantel வழங்கி வருகின்றது.

Mini Computers, Android Smart Phones, Tablets, Basic Feature Phones, Copper and Fiber Network Cables, Passive Network Components, Solar Inverters, PV Modules, Point-of Sale Thermal Printers, Digital Smart Boards போன்ற பெறுமதிமிக்க தயாரிப்புகள் Brantel நிறுவனத்தில் காணப்படுகின்றன.

Corning, E-tel தொலைபேசிகளுக்கான இலங்கைக்கான தேசிய விநியோகிஸ்தராகவும் Brantel காணப்படுகிறது.