ஊழியர்கள் மற்றும் நோயாளர்களின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஹேமாஸ் வைத்தியசாலை குழுமம்

இலங்கையின் தனியார் வைத்தியசாலை துறைக்கு சர்வதேச தரத்தில் சுகாதார சேவையை முதல் முறையாக அறிமுகம் செய்த அவுஸ்திரேலியாவின் ACHSI சர்வதேச தரத்தை முதல் முறையாக பெற்றுக் கொண்ட ஹேமாஸ் வைத்தியசாலை குழுமம் தமது ஊழியர்கள் மற்றும் நோயாளர்களின் பாதுகாப்பு குறித்து மிக உயர்ந்த கவனம் செலுத்தும் வகையில் நோயாளர் பாதுகாப்பு சர்வதேச தினத்தை கொண்டாடுகிறது. உலக சுகாதார நிறுவனத்தினால் பெயரிடப்பட்ட இந்த சர்வதேச தினத்தின் இம்முறைக்கான தொனிப்பொருளானது “நோயாளர்களை பாதுகாக்க வேண்டுமெனில் வைத்தியசாலை ஊழியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்பதாகும்.

உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடும் விதமாக கொவிட்-19 தொற்றுநோயின் விளைவாக நோய்த் தொற்றுக்குள்ளானவர்களில் 14 வீதமானோர வைத்தியசாலை ஊழியர்கள் என்பதுடன் நோயாளர்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துவதற்கு இரண்டாவது கவனம் வைத்தயிசாலை ஊழியர்கள் மீது செலுத்த வேண்டுமென உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் மற்றும் எதிர்வுகூறல்களை சரியாக பின்பற்றி ஹேமாஸ் வைத்தியசாலை குழுமம் பொதுவாக அனைத்து நோயாளர்கள் மற்றும் தமது மருத்துவமனை ஊழியர்கள் தொடர்பில் அண்மையில் பல்வேறு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியிருந்தது.

அனைத்து நோயாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை மேற்கொண்டு செல்வதற்கு ஹேமாஸ் வைத்தியசாலை குழுமம் எடுத்த முக்கியமான நடவடிக்கையாக அவுஸ்திரேலியாவின் ACHSI சர்வதேச தரப்படுத்தல் மூன்றாவது வருடமும் தனதாக்கிக் கொண்டமையை அறிமுகம் செய்துள்ளது. இந்த தரப்படுத்தின் கீழ் நோயாளர்களின் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பு நிலையை உச்ச அளவில் உறுதிப்படுத்தியே இந்த நிலைமை சர்வதேச மட்டம் வரை சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச மட்டத்தில் வைத்திய சேவையை நடத்திச் செல்வதற்கான அனைத்து அளவுகோல்களையும் தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் முழுவதும் நடத்திச் செல்வதற்கு ஹேமாஸ் குழுமத்திற்கு முடிந்துள்ளதனால் அவுஸ்திரேலிய ACHSI சர்வதேச தரப்படுதத்தலை பெற்றுக் கொண்ட முதலாவது இலங்கை வைத்தியசாலை குழுமம் என்ற இடத்தை பெற்றுக் கொள்ள ஹேமாஸ் வைத்தியசாலைக்கு முடிந்துள்ளது.

கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக இலங்கை Lockdown காலப்பகுதியில் ஹேமாஸ் வைத்தியசாயினால் அறிமுகப்படுத்தப்பட்ட தொற்று நோயாளர் பாதுகாத்தல் மற்றும் இலகுவாக அவர்களை கொண்டு செல்லக்கூடிய முதலாவது IPTC அறையானது நோயாளர் மற்றும் வைத்தயிசாலை ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து ஹேமாஸ் வைத்தியசாலை குழுமத்தின் அர்ப்பணிப்பு தெளிவாக தெரிந்த சந்தர்ப்பமாகும். கொவிட்-19 வைரஸ் விஸ்தீரமாதல் மற்றும் அது பரவும் விதம் குறித்து கவனத்திற்கொள்ளும் போது இந்த வைரஸ் இலகுவாக பலருக்கு தொற்றுவது குறித்த வாய்ப்புக்கள் உள்ளதனால் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நோயாளர்கள் அல்லது தொற்று நோயொன்று ஏற்பட்டுள்ள நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கையில் வைத்தயிசாலை ஊழியர்கள் மற்றும் ஏனைய நோயாளர்களை பாதுகாப்பதற்கு இந்த IPTC அம்பியூலன்ஸ் அறை மூலம் பாதுகாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“2020 ஆண்டு பாதுகாப்பு குறித்து சுகாதார சேவைத் துறைக்கு மிகவும் சவால்கள் மற்றும் விழிப்பான வருடமாக அமைந்தது. இதனால் முன்பிருந்ததை விட நோயாளர்களின் பாதுகாப்பு மட்டுமன்றி நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தயிசாலை ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து தேவையான பாகங்களை வழங்கி அவர்களின் சிறப்பு மற்றும் நோயாளர்களுக்கு மிகவும் சிறறந்த சேவையை வழங்குவதற்காக அதிகமதிகமாக அர்ப்பணிக்க எமக்கு ஏற்பட்டது. நோயாளர்களுக்கு சிறந்த பாதுகாப்பு சேவையை பெற்றுக் கொடுக்க வேண்டுமாயின் அறிவுபூர்வமான, திறன்களுடன், அர்ப்பணிப்புடன் மற்றும் கவனமாக வேலை செய்யக் கூடியவர்கள் எமக்கு தேவைப்படுகின்றனர்.” என ஹேமாஸ் வைத்யதியசாலை குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் மற்றும் தனியார் மருத்துவமனை மற்றும் பரமரிப்பு நிலைய சங்கத்தின் தலைவருமான பேராசிரியர் லக்கித் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

2008ஆம் ஆண்டு வத்தளையில் ஸ்தாபிக்கப்பட்ட ஹேமாஸ் வைத்தியசாலை இரண்டாவதாக தலவத்துகொடையில் ஸ்தாபித்து வைத்தியசாலை வலையமைப்பாக உருவெடுத்துள்ளதுடன் ACHSI எனும் Australian Council for Healthcare Standards Internationalஇன் அங்கீகாரம் பெற்ற மற்றும் பாதுகாப்பு மற்றும் தரம் தொடர்பில் தங்க முத்திரையை பதித்த இலங்கையின் முதலாவது மற்றும் ஒரேயொரு வைத்தியசாலை வலையமைப்பாகும். இலங்கையில் மிகவேகமாக வளர்ச்சியடையும் வைத்தியசாலை வலையமைப்பான ஹேமாஸ் வைத்தியசாலை FMCG, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு உட்பட பல்வேறு பிரிவுகளைக் கொண்ட விரிவாக்கப்பட்ட ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் முழுமையான துணை நிறுவனமாக அமைவதோடு சர்வதேச ரீதியில் சிறந்த மற்றும் பாதுகாப்பான சுகாதார சேவைகளை நோயாளர்களுக்கு வழங்கி வருகின்றது.

ஹேமாஸ் மருத்துவமனை தற்போது சமூக நல செயன்முறைகள் பலவற்றை மேற்கொள்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக முன்னெடுக்கப்படும் பியவர நிகழ்ச்சித் திட்டம் மூலம் 400 மில்லியன் ரூபா செலவில் 140க்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு மற்றும் 3200 சிறுவர்களுக்காக நாடு முழுவதிலும் உள்ள 53க்கும் அதிகமான முன்பள்ளிகளை அமைத்துள்ளதுடன் ஆயத்தி சமூக நல செயன்முறைகள் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் களனி பல்கலைக்கழகம், மார்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை இராணுவத்துடன் இணைந்து ஊனமுற்ற குழந்தைகளுக்காக 650 மில்லியன் ரூபா செலவில் றாகமை வைத்தியசாலையில் புனர்நிர்மாண மத்தியநிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.