புதிய Pay-As- You-Go முறை அறிமுகம்

நாம் வாழும் முறை, பணியாற்றுவது மற்றும் விளையாட்டுக்களில் ஈடுபடுவது போன்றவற்றில் கொவிட்-19 மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய வழமை என்பது மனித குலத்தில் ஊடுருவியுள்ளது. இன்றைய மாறிவரும் வாழ்க்கை முறையில் தமது வாழ்க்கை முறை தெரிவுகள் தொடர்பில் தொடர்பு தன்மை மற்றும் நெகிழ்ச்சித் தன்மை ஆகியவற்றை அதிகளவு நாட ஆரம்பித்துள்ளனர். உடற்பயிற்சித் தேவைகளும் எவ்வித மாற்றங்களுமின்றி அமைந்துள்ளன.

உடற் தகைமை மற்றும் உடற்பயிற்சி நிலையங்களில் ஆர்வமுள்ளவர்கள் மத்தியில் ஒப்பற்ற நன்மதிப்பைப் பெற்றுள்ள இலங்கை மற்றும் இந்தியாவின் முன்னணி உடற்பயிற்சி தொடரான Power World Gyms, உடற்பயிற்சித் துறையில் புதிய அறிமுகமாக pay-as-you-go கொடுப்பனவுத் தெரிவை அறிமுகம் செய்துள்ளது. இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு தமக்கு தேவையான போது உடற்பயிற்சியை மேற்கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள “Proxone” app இனால் வருடாந்த அங்கத்துவ கட்டணங்களைச் செலுத்தாமல்ரூபவ் சகல பலஅகளையும் அணுகுவதற்கான வசதியை வழங்கப்படுகின்றது.

Proxone இனால் வாடிக்கையாளர்களுக்கு வருடாந்த அங்கத்துவத்தை பெற்றுக் கொள்ளாமல்ரூபவ் தாம் பயன்படுத்தும் சேவைகளுக்கு மாத்திரமான கட்டணங்களை செலுத்தும் வாய்ப்பை வழங்குகின்றது. ஒரு gym ஐ மாத்திரம் பயன்படுத்தாமல் ஒரே பகுதிக்கு தொடர்ந்தும் விஜயம் செய்யாமல் ஒரே செயற்பாடுகளில் ஈடுபடாமல் வௌவேறு பகுதிகளுக்கு தம்மால் இயன்ற போது விஜயம் செய்து வௌவேறு உடற்பயிற்சி செயற்பாடுகளில் ஈடுபடக்கூடிய வசதியை வழங்குவதாக அமைந்துள்ளது.

இந்த சேவைக்காக செலுத்த வேண்டிய கட்டணம் மிகவும் குறைவானதாக காணப்படுகின்றது. Android மற்றும் iOS தெரிவுகளில் காணப்படும் Proxone app ஐ பதிவிறக்கம் செய்து தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதனூடாக பல உடற்பயிற்சி தெரிவுகளை பார்வையிட முடியும். பயன்படுத்த காணப்படும் gym களையும் ஒன்றறை மணி நேரத்துக்கான கட்டணம் ஆகியவற்றை Proxone app காண்பிக்கும். தமக்கு வசதியான gym இல் மு.ப. 5 மணி முதல் பி.ப. 11 மணி வரையான எந்தவொரு காலப்பகுதியையும் தெரிவு செய்து கடன் அட்டைகள் அல்லது இலத்திரனியல் வொலட்கள் ஊடாக இலகுவாக கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும்.

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவின் நோக்கமான இலங்கையை ஆரோக்கியமான தேசமாகத் திகழச் செய்வதற்கு என்பதற்கு Proxone திட்டம் பங்களிப்பு வழங்கும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் நோக்கமான உலகத் தரம் வாய்ந்த விளையாட்டுத் திட்டங்களை கட்டியெழுப்புவது மற்றும் உள்நாட்டு விளையாட்டுக் கட்டமைப்புகளுக்கு உதவுவது என்பவற்றுக்கு அமைவாகவும் அமைந்தள்ளது.´ என Power World Gyms இன் ஸ்தாபகரும் தவிசாளருமான தலவு எஃவ் அலைலிமா தெரிவித்தார்.

அன்ட்ரொயிட் மற்றும் IOS தொலைபேசிக் கட்டமைப்புகளிலிருந்து Proxone app ஐ பதிவிறக்கம் செய்து பெருமளவு உடற்தகைமை தொடர்பான தெரிவுகளை பெற்றுக் கொள்ள முடியும். gym அமைவிடம் மற்றும் தெரிவு செய்யும் நேரம் ஆகியவற்றைப் பொறுத்து ஒன்றறை மணி நேரத்துக்கான கட்டணங்கள் மாறுபடும். ஒரு தெரிவு செய்யப்பட்ட பலஅ பகுதிக்கு பெருமளவு வருடாந்த அல்லது காலாண்டு அடிப்படையிலான கட்டணங்களைச் செலுத்துமாறு வாடிக்கையாளர்களிடம் கோரிய நாட்கள் தற்போது இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. pay-as-you-go என்பது உடற்பயிற்சியில் ஈடுபட ஆரம்பிப்பவர்களுக்கு சிறந்த தெரிவாக அமைந்துள்ளதுடன்ரூபவ் உடற்பயிற்சியை தமது வழமையாக மாற்றிக் கொள்ள எதிர்பார்ப்பவர்களுக்கும் சிறந்த தெரிவாக உள்ளது.

Power World Gyms இன் ஸ்தாபகரும் தவிசாளருமான தலவு எஃவ் அலைலிமா கருத்துத் தெரிவிக்கையில் ´இன்றைய நுகர்வோரின் செயற்பாடுகள் மற்றும் தெரிவுகளின் பிரகாரம் பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளை பெற்றுக் கொடுப்பது மிகவும் முக்கியமானதாகும். எமது pay-as-you-go முறையின் அறிமுகம் என்பதுரூபவ் சிந்தித்து மேற்கொள்ளப்பட்ட சிறந்த தீர்மானமாகும். எவ்விதமான கட்டுப்பாடுகள் அல்லது வரையறைகளுமின்றி தமது வாழ்க்கை முறையுடன் நன்கு பொருந்திய உடற் தகைமையை தெரிவு செய்யும் சுதந்திரத்தை அனைவரும் கொண்டிருக்க வேண்டும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.´ என்றார்.

Power World Gym களில் விரல்களை ஸ்கான் செய்யும் வசதி மற்றும் நிர்வாக மென்பொருள் போன்றன காணப்படுகின்றன. பாதுகாப்பை உறுதி செய்ய CCTV கண்காணிப்பும் தகைமையும் அனுபவமும் நிறைந்த உடற்பயிற்சி ஆலோசகர்களும் முகாமையாளர்களும் காணப்படுகின்றனர். 1994 ஆம் ஆண்டு சகலருக்கும் உடற்பயிற்சியை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நிறுவப்பட்ட Power World Gyms, நாடு முழுவதிலும் 23 நிலையங்களைக் கொண்டுள்ளதுடன் இந்தியாவிலும் வலையமைப்பைக் கொண்டுள்ளது.