ஐக்கிய இராச்சியத்தின் ஐரோப்பிய வணிக மன்றத்திடமிருந்து ஐரோப்பிய தர விருதை வென்றது கொமர்ஷல் வங்கி

பூகோள மட்டத்தில் பொருளாதார சமூக அபிவிருத்தியை ஊக்குவிக்கும் சர்வதேசக் கூட்டுறவுக்கான நிறுவனமான ஐக்கிய இராச்சியத்தின் ஒக்ஸ்ஃபோர்ட் பகுதியிலுள்ள ஐரோப்பிய வணிக மன்றத்திலிருந்து (Europe Business Assembly) ஐரோப்பிய தர விருது (European Quality Award) என்ற கௌரவத்தை கொமர்ஷல் வங்கி பெற்றுக்கொண்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் பணியாளர்கள் ஏனைய பங்குதாரர்கள் ஆகியோரின் திருப்திக்குப் பங்களிக்கும் வகையில் தமது முகாமைத்துவத்தின் தரம் மொத்த தர முகாமைத்துவத்துக்கான தமது அணுகுமுறை ஆகியவற்றில் அதிசிறப்புத் திறமையை வெளிப்படுத்தும் பிராந்திய நிறுவனங்களுக்கு கௌரவமிக்க சர்வதேச அங்கீகாரமான இது வழங்கப்படுகிறது.

கொமர்ஷல் வங்கியின் பொருட்களினதும் சேவைகளினதும் உயர் தரத்துக்காக இந்த ஐரோப்பிய தர விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டதோடு இவ்விருதைப் பெற்றமையானது ஐரோப்பியரூபவ் உலகச் சந்தைகளில் கொமர்ஷல் வங்கியின் போட்டித்தன்மையை உயர்த்துவதில் கணிசமானளவு அனுகூலத்தை வழங்குமென வங்கி தெரிவித்தது.

விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவோர் ஐரோப்பிய வணிக மன்றத்தின் தொழில்முறை ஆராய்ச்சி அணியால் கவனமாகத் தெரிவுசெய்யப்படுவதோடு தரப்படுத்தல் ஆராய்ச்சி மூலமாக வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுகின்றனர். ஊடகங்கள் சமூக வலையமைப்பு இணையம் செய்தி திறந்த புள்ளிவிவரத் தரவுப் பகுப்பாய்வு ஆகியன இந்தத் தரப்படுத்தல் ஆராய்ச்சியில் உள்ளடங்குகின்றன. மேலதிகமாக அதிகாரிகள் சமூக நிறுவனங்கள் நிறுவகங்கள் வர்த்தகச் சம்மேளனங்கள் கிளைச் சங்கங்களும் ஒன்றியங்களும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் பரிந்துரைகளும் நிபுணத்துவக் கருத்துக்கணிப்பு ஒன்றும் இதன்போது உள்வாங்கப்படுகின்றன.

இலங்கையில் முழுவதும் காபன் நடுநிலையான (wholly carbon neutral) முதலாவது வங்கியான கொமர்ஷல் வங்கி உலகின் முதல் 1,000 வங்கிகள் என்ற பட்டியலில் இடம்பிடித்த இலங்கையைச் சேர்ந்த முதலாவது வங்கியாகவும் அப்பட்டியலில் தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் இடம்பிடித்த இலங்கையின் ஒரே வங்கியாகவும் விளங்கும் கொமர்ஷல் வங்கி இலங்கையில் 268 கிளைகளையும் 932 தானியங்கி வங்கி இயந்திரங்களையும் (ஏ.டி.எம்) கொண்ட வலையமைப்பைக் கொண்டுள்ளது. வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் 19 கிளைகளைக் கொண்டுள்ள பங்களாதேஷை உள்ளடக்குகின்றன.

அதேபோல் மியான்மாரின் நேய்பியுடோவில் நுண் நிதி நிறுவனமொன்றையும் மாலைதீவில் முழுமையான செயற்பாடுகளைக் கொண்ட முதல் வரிசை வங்கியொன்றை பெரும்பான்மைப் பங்குரிமையோடு வங்கி கொண்டுள்ளது.