சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பையும் நோயாளர்களின் பாதுகாப்பையும் APHNH மீண்டும் வலியுறுத்துகிறது

சர்வதேச நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு அதற்கு சமாந்திரமாக தனியார் மருத்துவமனை மற்றும் பராமரிப்பு நிலைய சங்கம் (APHNH) தெரிவிக்கும் விதமாக கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக நோயாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் கொவிட் – 19 நிலை காரணமாக, சர்வதேச நோயாளர் பாதுகாப்பு தினத்தின் இம்முறை தொனிப் பொருளானது “நோயாளர்களின் பாதுகாப்பிற்கு மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பு முதன்மையானது” என்பதாகும். இதன்போது சுகாதார ஊழியர்கள் மற்றும் நோயாளர்களுக்கு இடையிலுள்ள உறவு தொர்பில் சுகாதார நிறுவனங்களின் கவனம் திரும்பியுள்ளதுடன் நிலவும் தொற்றுநோய் நிலைமையுடன் சுகாதார சேவையில் முன் வரிசையிலுள்ள அணியாக உலகம் முழுவதிலும் உள்ள சுகாதார ஊழியர்களின் பாதுகாப்புக்காக எடுக்கக் கூடிய அடிப்படை நடவடிக்கைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

“2020 செப்டெம்பர் 16ஆம் திகதி வரையுள்ள 236 கொவிட் நோயாளர்களுடன், கொவிட்-19 தொற்றுநோயை எதிர்கொண்ட உலக நாடுகளுக்கு மத்தியில் இலங்கை மிகவும் வெற்றிகரமாக பிரதிபலித்துள்ளது. இந்த உலகளாவிய நெருக்கடிக்கு வெற்றிகரமாக பிரதிபலிப்பை காட்டுவதற்கு காரணமாக அமைந்த பிரதான காரணியாக அமைந்த முன் வரிசையில் இருந்த சுகாதார ஊழியர் குழு உறுப்பினர்களை பாதுகாக்க வேண்டும்.” என இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தனியார் மருத்துவமனைகள் மற்றும் பராமரிப்பு நிலைய சங்கத்தின் தலைவர் கலாநிதி லக்கித் பீரிஸ் கூறினார்.

“மேலும், எமது சுகாதார ஊழியர்களின் நல்வாழ்வுக்காக அதிகமான பங்களிப்பை வழங்குவதற்கு நான் விருப்பம் கொண்டுள்ளேன். பொருளாதாரத்திற்கு மற்றும் சமூகத்திற்காக அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பெரும்பாலும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாத ஒரு நிலை காணப்படுகின்றது.” எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

தற்போது நிலவும் தொற்று நோய் விளைவாக சுகாதார ஊழியர்கள் எதிர்நோக்கிய பிரதான ஆபத்தானது வைரஸூக்கான வெளிப்பாடு ஆகும். அமெரிக்காவிலுள்ள வைத்திய குழுவொன்றின் அறிக்கையில் குறிப்பிட்ட விதமாக உலகளாவிய ரீதியில் கொவிட்-19 தொடர்புடைய சுகாதார சேவை ஊழியர்களின் உயிரிழப்புக்களில் 55% ஆனவை வைத்தியர்கள், வைத்திய ஆலோசகர்கள், நிபுணர்கள், முதன்மை பராமரிப்பு மருத்துவர்கள் ஆகியோர் ஆவர். சுகாதார ஊழியர்கள் பாரிய ஆபத்துக்களை எதிர்கொள்வதாக அடையாளம் கண்டுகொண்ட கலாநிதி லக்கித் பீரிஸ், சங்கம் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு கொவிட்- 19 பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளார்.

பின்னர், சுகாதார அமைச்சின் விதிமுறைகளுக்கு அமைய APHNHஇன் அங்கத்துவ வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்கள் பின்பற்றும் படி ஒழுங்கு விதிகள் விதிக்கப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பான கொள்கைகளுக்கு மேலதிகமாக, இவ்வாறான சந்தர்ப்பங்களில் வைத்தியசாலைகள் பின்பற்றும் நடவடிக்கைகளான நோயாளரையும் அவர்களது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்துவதை முக்கியமாக மேற்கொண்டனர். மேலும், APHNHஇன் அங்கத்துவ மருத்துவமனைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு தேவையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன. விசேடமாக, பெரும்பாலான மருத்துவமனைகள் நாள்தோறும் கிருமிநீக்கம் செய்வதுடன் ஆபத்துக்களை குறைப்பதற்காகவும் சேவை முறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கைகள் ஒருபடி மேலே சென்று, சுகாதார ஊழியர்களை பாதுகாப்பதற்காக சங்கத்திற்கு சொந்தமான ஒட்டுமொத்த மருத்துவமனை வலைப்பின்னலிலுள்ள சுகாதார நடவடிக்கைகளை மீள் ஒழுங்கு செய்யவேண்டியுள்ளதென APHNH அடையாளம் கண்டுள்ளது. இதன்போது, வைத்தியர்களின்

பாதுகாப்பிற்காக அவசரமில்லாத சத்திரசிகிச்கைகளை மேற்கொண்டது குறித்த நோயாளி கொவிட் – 19 தொற்று இல்லாதவர் என்பதை உறுதி செய்த பின்னரே ஆகும்.