தேசிய ஒலிம்பிக் குழுவுடன் இணைந்து புதிதாக முளைக்கும் வீர வீராங்கனைகளை பலப்படுத்தும் “Crysbro Next Champ”

இலங்கை சமூகத்தை பலப்படுத்தும் நோக்கில் இந்த நாட்டில் முன்னணி கோழி இறைச்சி தயாரிப்பு நிறுவனமான கிரிஸ்புரோ தேசிய ஒலிம்பிக் குழுவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளும் வகையில் ‘NOCSL-CRYSBRO NEXT CHAMP’ புலமைப்புரிசில் வேலைத் திட்டமொன்றை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. விளையாட்டில் திறமையுள்ள இலங்கை வீர வீராங்கனைகளை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்துவதே இந்த உன்னத வேலைத் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.

கிரிஸ்புரோ மற்றும் தேசிய ஒலிம்பிக் குழுவினால் எதிர்வரும் இந்த ஒப்பந்தத்திற்கு ஏற்ப சர்வதேச தரத்தை அடையக்கூடிய நிலையிலுள்ள வீர வீராங்கனைகள் 20 பேருக்கு 2022ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள இளைஞர் ஒலிம்பிக் போட்டிகள், ஆசிய போட்டிகள், 2022 பொதுநலவாய நாடுகளுக்கான போட்டிகள் மற்றும் தெற்காசிய போட்டிகள் போன்ற மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகளை இலக்காகக் கொண்டு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

200 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஒலிம்பிக் பதக்கமொன்றை வென்ற ஆசியாவின் ஒரேயொரு வீராங்கனை மற்றும் மெய்வல்லுநர் போட்டிகளில் இந்த நாட்டில் அதிகமாக பதக்கங்களை வென்ற சுசந்திக்கா ஜயசிங்க, கிராமிய மட்டத்திலுள்ள வீர வீராங்கனைகளை சர்வதேச தளத்திற்கு கொண்டு செல்லும் ‘NOCSAL- CRYSBRO NEXT CHAMP’ புலமைப்பரிசில் வேலைத் திட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் தமது பூரண ஒத்துழைப்புக்களை இதற்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த சுசந்திக்கா ஜயசிங்க “சர்வதேச போட்டியொன்றில் பதக்கமொன்றை வெல்வது என்பது ஒரு நீண்டகால பயணமாகும். இரண்டு தசாப்தங்களாக தெற்காசிய மட்டத்தில் முன்னோக்கிச் செல்வதற்கு முடியாமல் போயுள்ளதை இட்டு நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. விசேடமாக எண்ணங்களை மாற்ற வேண்டியுள்ளதுடன் வீர வீராங்கனைகளை தேர்ந்தெடுக்கும் போது அது எமக்குத் தெரியவந்தது. அந்த சவாலை நாம் வெல்லவேண்டும்.” என தெரிவித்தார்.

கிரிஸ்புரோ மற்றும் தேசிய ஒலிம்பிக் கமிட்டியினால் மேற்கொள்ளப்பட்ட இந்த புரிந்துணர்வு கிரிஸ்புரோவின் 50வது ஆண்டு நிறைவுக்கு சமாந்திரமாக மேற்கொள்ளப்படும் விசேட நிகழ்வாக அமைவதுடன் கிரிஸ்புரோ கோழி இறைச்சி தயாரிப்பில் அனைத்து அம்சங்களையும் கொண்ட இலங்கையின் முதலாவது கோழி இறைச்சி தயாரிப்பு நிறுவனமாகும். கிராமிய ரீதியில் வியாபித்துள்ள வேளாண்மை மற்றும் கோழி வளர்ப்பை மேற்கொள்ளும் சிறிய தொழிலாளர்களை பலப்படுத்தும் கிரிஸ்புரோ நிறுவனம் சமூக பொறுப்புணர்வுகளுக்கிடையில் மிகவும் முன்னணியான இடத்தைப் பெற்றுள்ளதுடன் இதற்காக சிறந்த வேலைத் திட்டங்கள் பலவற்றையும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“இந்த நாட்டின் விளையாட்டுத் துறையின் எதிர்காலத்தை ஒளிரச் செய்வதற்கு தேசிய ஒலிம்பிக் கமிட்டியுடனான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் சிறந்த ஆதரவு பெற்றுக் கொடுக்கப்படுகிறது என்பதே எனது நம்பிக்கையாகும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி இலங்கையிலுள்ள திறமையான இள வயது விளையாட்டுக்களை சர்வதேச மட்டம் வரை கொண்டு செல்வதற்கு இதன் மூலம் வாய்ப்புக்கள் உள்ளன. எமது அடிப்படை கவனமாக அமைவது தேர்ந்தெடுக்கப்படும் இந்த வீர வீராங்கனைகளின் மனநிலை மற்றும் உடல் நிலை ரீதியாக பலப்படுத்தி அவர்களை இனிவரும் காலங்களில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிகளில் பங்குபற்றச் செய்வதாகும். அத்துடன் நிதி நெருக்கடிகள் காரணமாக திறமையுள்ள கிராமப் புற வீர வீராங்கனைகளுக்கு அவர்களது கனவினை நனவாக்கிக் கொள்ள முடியாதுள்ளது. எனினும் இந்த வேலைத் திட்டத்தின் மூலம் திறமையுள்ள கிராமிய மட்ட வீர வீராங்கனைகளுக்கு அவர்களது திறமைகளின் மூலம் நாட்டிற்கு நன்மதிப்பினை பெற்றுக் கொடுக்கும் கனவினை நனவாக்குவதற்கு எமக்கு முடியும்.” என தெரிவித்தார்.

“NOCSL-CRYSBRO NEXT CHAMP புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் மூலம் சர்வதேசத்தை வெற்றி கொள்வதற்காக இலங்கை வீர வீராங்கனைகளுக்கு சிறந்த சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் இரண்டு வருட காலத்திற்குள் அவர்கள் அனைவரையும் உள்ளடக்கி விளையாட்டுகளுக்காக முழுமையான கவனத்தை செலுத்தும் வகையில் இலங்கைக்கு நன்மதிப்பை பெற்றுக் கொடுப்பதற்கு அவர்களுக்கு ஒரு சிறந்த சந்தர்ப்பம் உள்ளது. மறுபுறத்தில் இந்த புரிந்துணர்வு இந்த நாட்டிலுள்ள நிறுவனங்களுக்கு பாரிய முன்னுதாரணத்தை அளிப்பதுடன் தனியார் பிரிவு பங்களிப்பில் நாட்டிலுள்ள விளையாட்டுத் துறையில் முன்னெப்போதும் இல்லாத விதத்தில் பல வெற்றிகளை பெற்றுக் கொள்வதற்கும் ஒரு சந்தர்ப்பமாக இது அமைகின்றது.” என தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் பொதுச் செயலாளர் மெக்ஸ்வெல் தெரிவித்தார்.

‘NOCSL-CRYSBRO Next Champ’ புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டமானது கிரிஸ்புரோ ‘Next Champ’இன் இரண்டாவது கட்டமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. ‘Next Champ’ நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் கிராமிய மட்டத்தில் நடைபெறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வெற்றிகளை கைப்பற்றும் வகையில் வீர வீராங்கனைகள் 120 பேர் உருவாக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடத்தில் இடம்பெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றெடுப்பதற்கும் இந்த வீர வீராங்கனைகளால் முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் விளையாட்டு நடவடிக்கைகள் தொடர்பிலான முன்னணி நிறுவனமாக செயற்படும் இலங்கையின் தேசிய ஒலிம்பிக் கமிட்டி சர்வதேச போட்டிகளை தொடர்புபடுதத்துவதில் இந்த நாட்டின் பலம் வாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனமாக செயற்பட்டு வருகின்றது. அத்துடன் நாட்டின் வீர வீராங்கனைகள் சர்வதேச தளத்திற்கு கொண்டு செல்வதற்கு தேவையான செயல்திறன் மட்டத்திற்கு அவர்களை எடுத்துச் செல்வதற்கும் இலங்கை தேசிய ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை எடுத்துள்ளது.

1972ஆம் ஆண்டு வெறும் 100 கோழிக் குஞ்சுகளோடு தரமான மற்றும் சிறந்த படைப்புக்களை சந்தைப்படுத்தி மேலோங்கி நிற்கவேண்டுமென்ற விருப்பத்துடன் நிறுவப்பட்ட க்ரிஸ்ப்ரோ நிறுவனம் இலங்கையின் முதல் மற்றும் அதிநவீன முறையில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்து செங்குத்தாக உயர்ந்திருக்கும் ஒரு நிறுவனமாகும். இலங்கையில் முதலாவதாக அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி முழுமையாக கணினி மயப்படுத்தி (vertically intergrated) தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.தமது கடின உழைப்பின் விளைவாக தற்போது பாரிய பண்ணைகள் மற்றும் தீவன ஆலைகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் தாரக மந்திரமான ஷபண்ணையிலிருந்து மேசை கரண்டி வரை| என்ற திட்டமே வெற்றிக்கு காரணியாகும். மேலும் இந்த வெற்றிக்கு நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள், வெளிநாட்டவர்கள், உள்நாட்டு விவசாயிகள் மற்றும் இலங்கையிலுள்ள நுகர்வோர் ளஆகியோரும் காரணமானவர்கள் ஆவர்.