ஆதார இலங்கை வர்த்தகர்களுக்கு நெகிழக்கூடிய தொழில்நுட்ப உட்கட்டமைப்பை ஏற்படுத்துகிறது

Cisco இலங்கையில் இன்று டிஜிட்டல் மாற்றத்தை துரிதப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டில் முழுமையாக ஈடுபட்டுள்ளதுடன் அதன் மீள் விநியோகிக்கப்பட்ட நிறுவன தயாரிப்பு தொகுப்பை அறிமுகம் செய்வதன் மூலம் அதன் வர்த்தகர்களுக்கான வணிக பின்னடைவை எதிர்நோக்கவும் உதவுகிறது. Cisco தனது பங்குதாரர்களின் ஈடுபாடுகளை இரட்டிப்பாக்கி இலங்கையின் வர்த்தக செயற்பாடுகளை அடுத்த கட்ட இயல்பான நிலைக்கு மேம்படுத்துவதற்காக அதன் Networking Academy திட்டத்தை விரிவுபடுத்துகிறது மற்றும் டிஜிட்டல் முறைமையை உள்ளடக்கிய நிலையான தேசம் என்ற அரசாங்கத்தின் நோக்கத்தை அடையவும் உதவுகிறது.

தொற்று நோய்த் தாக்கலுக்கு முன்பிருந்தே இலங்கை அறிவு பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் சென்று கொண்டிருந்ததுடன், மக்கள் தொகையில் 149% என்ற மிக உயர்ந்த எண்ணிக்கையிலானோர் மத்தியில் கையடக்கத் தொலைபேசி பயன்பாடும் ஒன்றாகும். மேலும் வளர்ந்து வரும் ICT-BPM துறை 2022ஆம் ஆண்டில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இலங்கை ஒரு புதிய உலகத்தை வடிவமைத்து, புதிய விதிமுறைகள் மற்றும் நடத்தை மூலமாக நிர்வகிக்கப்படுகிறது, இதனால் நுகர்வோர் தங்கள் ஆரோக்கியத்தில் அதிக அர்ப்பணிப்புடன், தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் சுயாதீனமானவர்களாக, குறைந்த தொடுகை, தொடர்பினை குறைந்த்தல் போன்ற விடயங்களில் அக்கறை காண்பிக்கின்றனர். உதாரணமாக, இலங்கையின் மிகப்பெரிய e- commerce தளமானது 2020இல் ஆண்டுக்கு ஆண்டு Orderகளில் 2.5X வளர்ச்சியை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பரிணமித்து வரும் மற்றும் மாறும் சுற்றுச் சூழல் அமைப்பில், மாறிவரும் சந்தை நிலைமைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் அமைப்புக்களின் திறன் அவற்றின் வெற்றியைத் தீர்மானிக்கும். இதை உணர்ந்து, இலங்கையிலுள்ள சிறிய மற்றும் பெரு நிறுவனங்கள், e-commerce சுற்றுலா, IT/ITes மற்றும் உற்பத்தி போன்ற முக்கிய தொழில்களில், புதிதாக விஸ்தரித்தல் மற்றும் டிஜிட்டல் நுகர்வோரை தன்வசப்படுத்திக் கொள்வதற்காக தங்களது வணிக மாதிரிகளை மறு வடிவமைக்கின்றன. அவர்கள் தங்கள் செயன்முறைகளை டிஜிட்டல் மயமாக்குவதுடன், Hybrid வேலை மாதிரிகளை ஏற்றுக் கொள்வது, மற்றும் அவர்களின் வர்த்தக செயற்பாடுகளை மேலும் சுறுசுறுப்பாகவும் எதிர்கால நெருக்கடிகளுக்கு இசைவாக நெகிழ்வான விதத்தில் அவற்றின் விநியோக சங்கிலிகளை தானியக்கமாக்குதல், மேலும் அவர்களது அனைத்து தகல்கள், சொத்துக்கள் மற்றும் ஊழியர்களின் தனியுரிமையை பாதுகாக்க வேண்டியுள்ளது ஏனெனில் அச்சுறுத்தல் காரணிகள் அதிகரித்தது மட்டுமல்லாமல் சிக்கலானதாகிவிட்டமையே ஆகும்.

இந்த மாற்றங்களை எளிதானதாகவும், தடையற்றதாகவும் மாற்றுவதற்கும், புதிய விதத்தில் வெற்றிபெறுவதற்கும் முதன்மையானதாக, Cisco இலங்கையின் வர்த்தக நடவடிக்கைகளை “Resilient Distributed Enterprises” (RDE)ஆக மாற்ற உதவுகிறது, மேலும் அவை வேலை செய்ய அனுமதிக்கும் ஒரு மீள் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு திறன்களைக் கொண்டு வருகின்றன. மேலும் எங்கிருந்தும், எந்தவொரு சாதனத்திலிருந்தும் ஒத்துழைக்கவும், எங்கிருந்தும் (Automation, Data Analytics, Assurance மற்றும் Policy உட்பட) நிர்வகிக்கவும் மற்றும் விநியோக முன் தொழிலாளர்கள், பயன்பாடுகள் மற்றும் Cloud சேவைகள் மற்றும் முன் பாதுகாப்பு மற்றும் மத்திய நிலையத்துடன் இணைந்து சேவை செய்வதன் மூலம் அனுபவத்தையும் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கும்.

அதன் புதிய RDE தொகுப்பின் ஒரு பகுதியாக, Cisco அறிமுகப்படுத்தும் SecureX எளிதில் பயன்படுத்தக் கூடிய Cloud-Native தளமாக அறிமுகப்படுத்துகிறது, இது நிறுவனங்களின் பாதுகாப்பு தெரிவு நிலையை ஒன்றிணைப்பதுடன் இதில் அறியப்படாத அச்சுறுத்தல்கள் மற்றும் கொள்கை மீறல்களை பாதுகாப்பு பகுப்பாய்வு மூலம் மேலும் தகவலறிந்த செயல்களுக்கு நடவடிக்கைகளை கண்டறிகின்றது. மேலும் Cisco வசமுள்ள அணுகலான Intersight Workload Optimizer செயற்படுத்துகிறது, இது Al-Powered, மென்பொருளாகவும் ஒரு சேவை தளமாகவும் உள்ளது. இது ஒரு புத்திசாலித்தனமான நிர்வாகத்தை வழங்குகிறது மற்றும் நிறுவனங்களை IT செயற்பாடுகளை எளிமைப்படுத்தவும் தானியக்கப்படுத்தவும் அனுமதிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் டிஜிட்டல் பயணத்தை விரைவாக கண்டுபிடிப்பதற்கான Ciscoவின் தற்போதைய முயற்சிகளின் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி இதுவாகும். அதன் வர்த்தகர்களுக்கான RDEஇன் திறன்களை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், Cisco தனது Networking Academy மூலம் இலங்கையில் டிஜிட்டல் முறையில் திறமையான பணியாளர்களை உருவாக்க தொடர்ந்தும் உதவுகிறது. இந்த நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து சுமார் 33,500 மாணவர்களுக்கு பயிற்சியளித்துள்ளதுடன் 2020ஆம் ஆண்டில் APJ பிராந்தியத்தில் Cisco Networking Program கீழ் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் இதை 50,000 மாணவர்களாக உயர்த்த Cisco நோக்கம் கொண்டுள்ளது.