அரசாங்க ஊழியர்களுக்கு விசேட வீட்டு நிதி வசதியை அமானா வங்கி வழங்குகின்றது

தமக்கென இல்லமொன்றை சொந்தமாக்கிக் கொள்ள எண்ணி இருக்கும் அனைவரின் கனவையும் நனவாக்கும் வகையில்ரூபவ் சந்தையில் காணப்படும் குறைந்த தவணைக்கட்டணங்களுடன் அரசாங்க ஊழியர்களுக்கு விசேட வீட்டு நிதி வசதியை அமானா வங்கி வழங்குகின்றது.

இந்த விசேட சலுகையினூடாகரூபவ் அரசாங்க ஊழியர்களுக்கு ரூ 1 மில்லியனுக்கு, 8.75 வருடாந்த மிதக்கும் இலாப வீத அடிப்படையில் முதல் வருடத்துக்கு ரூ 9994/-எனும் மாதாந்த மீளச் செலுத்தும் தவணைக்கட்டணத்தில் 15 வருட காலப்பகுதிக்கு பெற்றுக் கொள்ள முடியும். வங்கியின் இணையத்தளமான www.amanabank.lk இல் காணப்படும் நிதிக் கணிப்பானில் வாடிக்கையாளர்களுக்கு தமது மாதாந்தக் கட்டணத்தை தமக்கு பொருத்தமான வகையில் கணிப்பிட்டு அறிந்து கொள்ள முடியும்.

வீட்டு நிதி வசதிக்கான அனுமதி 3 தினங்களுக்குள் வழங்கப்படுவதுடன், 14 நாட்களுக்குள் முழுமையான செயன்முறை பூர்த்தி செய்யப்பட்டு அவ்வீட்டு நிதி வசதி வழங்கப்படும். அமானா வங்கியின் நட்பான சேவை வீட்டு நிதி வசதி என்பது, சந்தையில் காணப்படும் துரிதமாக பெற்றுக் கொள்ளக்கூடிய நிதி வசதியாக அமைந்துள்ளது. வாடிக்கையாளர் சார்பாக வங்கியினால் சகல உள்ளூர் சபை மற்றும் அதிகார அமைப்புகளுடன் தொடர்புடைய ஆவணப்படுத்தல் செயன்முறைகளும் கையாளப்படுவதால் இந்த வசதியை துரித கதியில் பெற்றுக் கொள்ள முடியும்.

20 வருடங்கள் வரை மீளச் செலுத்தும் காலம் வழங்கப்படுவதுடன், வீட்டை நிர்மாணிப்பதற்கு அல்லது பிறவங்கியிருந்து வீட்டு நிதி வசதியினை அமானாவிற்கு கையகப்படுத்தல் தேவைகளுக்காகவும் இந்த நிதி வசதி உதவுகின்றது. மேலும்ரூபவ் முதல் தொகையை மீளச் செலுத்துவதற்கு வாடிக்கையாளர்களுக்கு 1 வருட கால அவகாசம் வழங்கப்படுகின்றது. வீடு அல்லது கட்டிடத்தை கொள்வனவு செய்வதற்காக வாடிக்கையாளருடன் வங்கி பங்காளராகி கொள்வனவில் ஈடுபடும் என்பதுடன், காலப்போக்கில் வங்கியிடமிருந்து குறித்த பங்குகளை மீளக் கொள்வனவு செய்வதற்கான வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். வங்கி தனது பங்கை வாடிக்கையாளருக்கு வாடகைக்கு வழங்குவதனால்ரூபவ் இக்காலப்பகுதி முழுவதிலும் வீட்டின் முழுப் பகுதியையும் வாடிக்கையாளரால் அனுபவிக்க முடியும். நிதி வசதி வழங்கப்படும் காலப்பகுதியில், சொத்தின் மீதான இடரை உரிமையாளருடன் வங்கி பகிர்ந்து கொள்ளும். வாடிக்கையாளருக்கு நட்பான வங்கியியல் கட்டமைப்பினூடாக, அமானா வங்கிக்கு தமது இல்லங்களுக்கான நிதிக் கொடுப்பனவுகளை எவ்விதமான தண்டப்பணங்களுமின்றி முற்கூட்டியே மேற்கொள்ள முடியும். இதனூடாக, மேலதிக கட்டணங்கள் எதுவுமின்றி, முழுமையாக நிதிவசதித் தொகையை மீளச் செலுத்த முடியும்.

அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் விசேட வீட்டு நிதி வசதி தொடர்பில், அமானா வங்கியின் தனியார் நிதி வசதிப் பிரிவின் தலைமை அதிகாரி ராமகிருஷ்ணன் கிருபாகரன் கருத்துத் தெரிவிக்கையில், ´எமது விசேட வீட்டு நிதி வசதியினூடாக, அரசாங்க ஊழியர்களுக்கு தமது கனவு இல்லத்தை நனவாக்கிக் கொள்ள முடியும். சௌகரியமான மற்றும் சிக்கல்களற்ற படிமுறைகளினூடாக துரிதமாகவும், சிறந்த கட்டணத்தில் இந்த வசதியை பெற்றுக் கொள்ள முடியும். வங்கியின் வீட்டு நிதி வசதி தொடர்பில் மேலதிக தகவல்களை அறிந்து கொள்ளவும், இதைப் பற்றி மேலதிக விடயங்களை தெரிந்து கொள்ள, அருகிலுள்ள எந்தவொரு கிளைக்கும் விஜயம் செய்யுமாறு வாடிக்கையாளர்களை நான் அழைப்பதுடன், எமது இணையத்தளமான www.amanabank.lk/knowledge-center/our-model.html இல் காணப்படும் வீடியோக்களை பார்வையிடுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.´ என்றார்.