Cinnamon Life கட்டிட நிர்மாணத்தின் மற்றுமொரு மைல்கல்

லங்கையின் மாபெரும் கலப்பு அபிவிருத்தி நிர்மாணத் திட்டமான Cinnamon Life, அதன் நிர்மாணப் பணிகளில் மற்றுமொரு படியை பூர்த்தி செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன் செயற்திட்ட அலுவலகம் மற்றும் ‘The Suites’ வதிவிட டவர்களுக்கான Certificate of Conformity (COC) பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

தற்போது நிலவும் தொற்றுப் பரவலுடனான சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும், Cinnamon Life செயற்திட்டம் இடைவிடாது முன்னேற்றத்தை பதிவு செய்வதை காண முடிகின்றது.

இரு நிர்மாணத் தொகுதிகளுக்கும் முழுமையானதும் இறுதியானதுமான சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் சகல நிர்மாணப் பணிகளும் பொருத்தமான விதிமுறைகளின் பிரகாரம் அமைந்துள்ளதையும் சகல பாதுகாப்பு வழிகாட்டல்களும் பின்பற்றப்பட்டுள்ளதையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2021 மார்ச் மாதமளவில் Cinnamon Life இலுள்ள ‘The Suites’ மற்றும் ‘The Offices’ ஐ உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு John Keells Properties அணி தற்போது தயாராகிய வண்ணமுள்ளது.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் சொத்துக்கள் குழுமத்தின் பிரிவுத் தலைவர் நயன மாவில்மட கருத்துத் தெரிவிக்கையில் ´தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திட்டத்தை பூர்த்தி செய்வது தொடர்பில் கடந்து வந்த வரலாற்றுப் பாதையை எடுத்துக் கொண்டால் அதில் நாம் எதிர்கொண்ட சவால்களுக்கு சலிக்காமல் மீண்டெழுந்து இந்தத் திட்டத்தை பூர்த்தி செய்வதற்கு எமது அணியினர் காண்பித்த அர்ப்பணிப்பை கருதும் போது நாம் மிகவும் பெருமை கொள்ள வேண்டியுள்ளது. இன்று நாம் நிர்மாணிக்கும் இந்த தொகுதி கொழும்பின் வானுயர்ந்த கட்டடங்களில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. அத்துடன் இலங்கையர்கள் மாத்திரமன்றி முழு தெற்காசிய பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களினதும் வாழ்க்கைத்தரம் வணிகம் மற்றும் வியாபார அனுபவத்தை மாற்றியமைப்பதாக அமைந்திருக்கும். தொற்றுப் பரவல் காரணமாக பெருமளவு கட்டுப்பாடுகள் எழுந்த போதிலும்ரூபவ் நாம் தொடர்ச்சியாக பணிகளை பாதுகாப்பான முறையில் முன்னெடுத்திருந்தோம்.´ என்றார்.

´ஆசியா பிராந்தியத்தில் மிகவும் தனித்துவம் வாய்ந்த திட்டமாக Cinnamon Life அமைந்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகங்களுமில்லை. John Keells Properties ஐச் சேர்ந்த எமது திறமை வாய்ந்த அணியினரின் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் தொடர்பில் நான் மிகவும் பெருமை கொள்கின்றேன். நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிகவும் சிக்கல்கள் நிறைந்த திட்டமாக இது அமைந்துள்ளது. புதிய உலகை உருவாக்கும் எமது பயணத்தில் முக்கிய அங்கத்தை இது பெறுகின்றது.´ என்றார்.

நயன தொடர்ந்து குறிப்பிடுகையில், “Cinnamon Life இன் இரண்டாவது வதிவிடத் தொகுதியான ‘The Residence’ உரிமையாளர்களிடம் ஆண்டின் நடுப்பகுதியளவில் ஒப்படைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். ஹோட்டல் விற்பனைத் தொகுதி மற்றும் இதர வசதிகளின் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றன.´ என்றார்.

நகரினுள் ஒரு நகரம் (A “city within a city”), எனும் இந்தத் திட்டம் கொழும்பின் வானுயர்ந்த கட்டடங்களில் புதிய புரட்சியாக அமைந்திருக்கும் என்பதுடன் சகல பிரிவுகளிலும் விறுவிறுப்பான வாழ்க்கைமுறை அனுபவத்தை வழங்கும். நகரின் உயிர்த்துடிப்பாக திகழும் என எதிர்பார்க்கப்படும் இந்தத் தொகுதி கொழும்பின் வாழ்க்கைப்பாணிக்கான தலைநகரமாக அமைந்துள்ளது. இந்த தொகுதியில் 800 அறைகளைக் கொண்ட சொகுசான “Cinnamon” ஹோட்டலும் அடங்கியிருக்கும். அத்துடன் உயர் வதிவிட தொடர்மனைகள் விற்பனை மற்றும் களிப்பூட்டும் பகுதிகள் நவீன வசதிகளைக் கொண்ட அலுவலகப் பகுதிகள் மற்றும் இதர பல விநோத அம்சங்கள் அடங்கியிருக்கும் என்பதுடன் இந்த உப கண்டத்தின் களிப்பாட்டத்தின் பிரதான மையமாகத் திகழும். இந்தத் தொகுதி 4.5 மில்லியன் சதுர அடிப்பகுதியில் அமைந்திருக்கும் என்பதுடன் நவீன தெற்காசியாவின் மைய அமைவிடமாக திகழும். நகரின் புதிய ஒப்பற்ற வாழ்க்கைப் பாணி மற்றும் களியாட்ட மையமாக Cinnamon Life திகழும். வதிவிட தொடர்மனைகள் USD 395,000 இலிருந்து விற்பனைக்குள்ளன. மேலதிக தகவல்களுக்கு அழையுங்கள் 1094-112-152152 அல்லது www.cinnamonlife.com எனும் இணையத்தளத்தை பார்க்கவும்.